விசா இன்றி இலங்கை கடவுச்சீட்டு 39 நாடுகளுக்கு மட்டும்

Henley & Partners என்ற அமைப்பின் கணிப்புப்படி இலங்கை கடவுச்சீட்டை (Passport) வைத்திருக்கும் ஒருவர் 39 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியுமாம். . அந்த அறிக்கையின்படி ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். இந்த கடவுசீட்டே அதிக நாடுகளில் விசா இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. . சுவீடன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். . பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகிய நாட்டுகளின் கடவுச்சீட்டு […]

டுபாய்-நியூசிலாந்து 14,200 km விமானசேவை

டுபாயை மையமாக கொண்ட Emirates விமானசேவை இன்று டுபாயில் இருந்து நியூசிலாந்தில் உள்ள Auckland நகர் வரையான உலகத்திலேயே மிகநீண்ட விமானசேவையை ஆரம்பித்துள்ளது. இந்த சேவைக்கு உலகத்திலேயே மிக பெரிய பயணிகள் விமானமான Air Bus 380 விமானம் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்த சேவைக்கு 17 மணித்தியாலம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அச்சேவை 16 மணித்தியாலம் 24 நிமிடங்களை மட்டுமே எடுத்து இருந்தது. . இதுவரை அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகருக்கும் […]

Hezbollahவை பயங்கரவாதிகள் என்கிறது சவுதி

கெஸ்புல்லா (Hezbollah) லெபனான் நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரியும் மிக பலம்வாய்ந்த ஓர் ஆயுத குழு. சியா முஸ்லீம்களான இவர்களுக்கு சியா முஸ்லீம்கள் நிறைந்த நாடான ஈரான் பண மற்றும் ஆயுத உதிவிகள் செய்வதுண்டு. சிரியாவின் அசாத் தமையிலான அரசுக்கும் ஈரான் பண மற்றும் ஆயுத உதவிகள் செய்வதுண்டு. . அண்மையில் சவுதி உட்பட பல சியா முஸ்லீம் நாடுகளும், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் சிரியாவில் புரிய இருந்த அசாத் ஆட்சியை கவிழ்க்க Free Syrian Army […]

மக்களை ஏமாற்ற Rs 251 Smartphone?

சில நாட்களின் முன் இந்திய நிறுவனமான Ringing Bell தாம் தயாரித்த smartphoneகளை இந்திய ரூபா 251 க்கு (சுமார் U$ 4.00) விற்பனை செய்யவுள்ளதாக கூறியிருந்தது. அதற்கு Freedom 251 என்றும் பெயரிட்டிருந்தது. அந்த smartphoneகளை கொள்வனவு செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பணத்தை செலுத்தி தமது கொள்வனவை உறுதிப்படுத்தவும் வழி செய்திருந்தது. அதன்படி பல்லாயிரம் மக்கள் கொள்வனவுக்கான பணத்தை செலுத்தியும் இருந்தனர். இந்த திட்டம் இதுவரை ரூபா 75 லட்சம் முதல் 1.66 கோடிவரை பணம் […]

ஐ.நா. தனது அதிகாரிகளின் பாலியல் குற்றங்களை மறைக்கிறது

ஐ.நா. தனது அதிகாரிகள் செய்யும் பாலியல் குற்றங்களை மூடி மறைக்கிறது என முன்னாள் ஐ.நா. விசாரணையாளர் Kathryn Bolkovac கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த The Whistleblower என்ற Hollywood திரைப்படம் இவரின் இவ்வகை குற்றச்சாட்டுகளை கொண்ட புத்தகம் ஒன்றை அடிப்படையாக கொண்டதே. . 1999 ஆம் ஆண்டில் Kathryn அவர்களை DynCorp என்ற நிறுவனம் மூலம் ஐ.நா. பணிக்கு அமர்த்தி இருந்தது. இவரின் பணி ஐ.நா. அதிகாரிகள், மற்றும் ஐ.நா.வின் கீழான இராணுவ அதிகாரிகள் […]

ஒரு நாளுக்கு மேலாக சிரியாவில் அமைதி

சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆரம்பித்து அண்மை வரை தொடர்ந்த யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும் இறுதியாக இணங்கி கொண்டதற்கு அமைய இந்த இருகிழமை யுத்த நிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு அமைதியை பேணுகிறது. . இந்த யுத்த நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் அங்கு அகப்பட்டு தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வழி செய்வதே. ஐ.நா. கணிப்புப்படி குறைந்தது 30 இடங்கள் […]

Ransomware மூலம் வைத்தியசாலை பணயம் வைப்பு

ஜேர்மன் நாட்டு Neuss நகரில் உள்ள Lukas என்ற வைத்தியசாலை ransomware என்ற தொழில்நுட்ப வகை பணயம் வைத்தலுக்கு ஆளாகி உள்ளது. இவ்வாறு பல நிறுவனங்கள் ransomware மூலமான பாதிப்புக்கு உள்ளானாலும் ஒரு சில நிறுவனங்களே விடயத்தை பகிரங்கப்படுத்துகின்றன. ஏனையவை பணயக்காரர் கேட்கும் தொகையை வழங்கி தம்மை பாதுகாக்கின்றன. . தற்காலத்தில் வர்த்தக நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற எல்லா நிறுவனங்களும் தமது தரவுகளை கணனிகளில் சேமித்து வைக்கின்றன. அந்த கணனிகள் Internet தொடர்பையும் கொண்டிருக்கின்றன. சிலவேளை உலகின் […]

தென்சீன கடலுள் சீனாவின் யுத்த விமானங்கள்

தற்போது சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் (South China Sea) உள்ள Woody தீவுக்குள் சீனா தனது யுத்த விமானங்களை நகர்த்தியுள்ள செய்தியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. Woody தீவு சர்ச்சைக்குரிய Paracel தீவு தொகுதிகளில் ஒன்றாகும். இச்செய்திப்படி சீன நனது Shenyang J-11 மற்றும் JH-7 வகை யுத்த விமானங்களை Woody தீவுக்கு நகர்த்தி உள்ளது. Paracel தீவுகளை சீனா மட்டுமன்றி தாய்வானும் வியட்னாமும் உரிமை கூறியுள்ளன. . கடந்த கிழமை சீனா இந்த Woody தீவுக்குள் HQ-9 […]

அமெரிக்காவின் Supreme Court நீதிபதியாக இந்திய தமிழர்?

அமெரிக்க Supreme Court நீதிபதிகளில் ஒருவரான Antonin Scalia மரணம் அடைந்ததன் காரணமாக நீதிபதிகளுக்கான வெற்றிடம் ஒன்று தோன்றியுள்ளது. அந்த வெற்றுடத்தை நிரப்ப ஜனாதிபதி ஒபாமா முனைகிறார். சட்டப்படி ஒபாமாவுக்கு அந்த உரிமை உண்டு. . ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெறுவதால், அடுத்த ஜனாதிபதியிடம் அந்த பொறுப்பை விடும்படி எதிர் கட்சியான Republican கூறுகிறது. . ஒபாமா அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பட்ட சிலரை கணிப்பீடு செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு கருத்தில் கொண்டோரில் ஒருவர் […]

சிரியாவில் 4 குண்டுகளுக்கு 140 பேர் பலி

சிரியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற 4 குண்டு தாக்குதல்களுக்கு 140 பேர் வரை பலியாகியுள்ளதுடன் 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) மற்றும் Homs ஆகிய நகர்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் இரண்டு கார் குண்டு தாக்குதல்கள் என்றும் இரண்டு தற்கொலை தாக்குதல்கள் என்றும் கூறப்படுகிறது. . இந்த நகர்களில் பெரும்பாலும் அசாத் ஆதரவு மக்களே குடியுள்ளனர். இந்த நகர்கள் முன்னரும் பலதடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தன. கடந்த மாதம் […]