மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso வின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது அல்கைடா ஆதரவு குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதல் தற்போது அந்நாட்டின் அரச கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த தாக்குதலில் 18 நாடுகளை சார்ந்த 28 பேர் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 4 அல்கைடா உறுப்பினரும் அடங்குவர். அந்த நால்வரில் இருவர் பெண்கள் ஆவர். . இந்த தாக்குதல்கள் Splendid ஹோட்டல் மற்றும் அதன் அருகில் உள்ள Cappuccino Cafe ஆகிய இரு இடங்களிலும் […]
குவைத்தில் இருந்து பஹ்ரெயின் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு சிறிய இராணுவ கப்பல்கள் ஈரான் வசம் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் தமது பயணத்தின் இடைவழியில் தமது தளங்களுடனான தொலைத்தொடர்புகளை இழந்துள்ளன. இதற்கு கரணம் இயந்திர கோளாறுகளாக காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . அதேவேளை ஈரான் இவர்கள் தமது கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் அப்போது அவர்கள் கைது கைது செய்யப்பட்டனர் எனவும் கூறியுள்ளது. கைது செய்யப்படவர் தொகை 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. . கைது […]
தமிழ்நாட்டு நீதிமன்றம் ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் ஒன்றின் அனைத்து பணியாளர்களுக்கும் 10 வருட சிறைத்தண்டனையை திங்கள்கிழமை விதித்துள்ளது. இந்த பணியாளர் குழு 3 உக்கிரேன் நாட்டவரையும், 14 எஸ்டோனியா நாட்டவரையும், 6 பிரித்தானியர்களையும், 10 இந்தியர்களையும் கொண்டிருந்தது. . ஒரு நாட்டின் எல்லைக்கு நுழையும் கப்பல்கள் தம்முடன் ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் குற்றமாகும். Seaman Guard என்ற அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் தம்மை கடல் கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சில ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்த கப்பல் இந்திய […]
இன்று சனிக்கழமை அமெரிக்காவின் மிகப்பெரிய லொத்தர் சீட்டிழுப்பு இடம்பெறவுள்ளது. Powerball என்ற லொத்தரின் பெறுமதி சுமார் US$ 900 மில்லியன் ($900,000,000) ஆகும். இது அமெரிக்காவில் வழங்கப்பட்ட மிகக்கூடிய பெறுமதியாக இருக்கும். . மற்றைய நாடுகளை போல் அல்லது அமெரிக்காவில் லொத்தர் வருமானங்களுக்கும் அரச வரிகள் செலுத்தப்பட வேண்டும். அதனால் தனியொருவர் இந்த லோத்தரை வென்றால் அவருக்கு, மத்திய அரச வரி செலுத்தியபின், சுமார் $350 மட்டுமே கிடைக்கும். ஒருசில அமெரிக்க மாநிலங்கள் தவிர மற்றைய எல்லாம் […]
இன்று வியாழன் மீண்டும் சீன பங்குச்சந்தை 7% இக்கும் மேலால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவ்வாற்று வீழ்ச்சி 7% இக்கும் அதிகமாக இருப்பின் அங்கு பங்குச்சந்தையை அத்தினத்துக்கு மூடி விடுதல் வழமை. அதன்படி இன்று சீன பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளையும் இன்று பெரிதும் பாதிக்கலாம். . கடந்த திங்களும் சீனாவின் பங்குச்சந்தை இவ்வாறு வீழ்ச்சி அடைந்ததால் அத்தினத்துக்கும் மூடப்பட்டு இருந்தது. அன்றைய தினமும் வீழ்ச்சி 7% இக்கும் அதிகம் ஆகும்போது சந்தை […]
இந்தியாவின் வடக்கே Pathankot என்ற இடத்தில் உள்ள பெரியதோர் இந்திய விமானப்படை முகாமை அடையாளம் காணப்படாத குழு ஒன்று உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியவில் தாக்கியுள்ளது. தாம் நிலைமையை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய படை உடனடியாக அறிவித்திருந்தாலும், திங்கள் வரை நிலைமை முற்றாக படையின் கட்டுப்பாட்டுள் வரவில்லை. . இந்திய அதிகாரிகள் இந்த குழு பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammed என்ற குழுவாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். தாக்குதலின் போது இக்குழு […]
சியா இஸ்லாமியரான ஈரானுக்கும் சுனி இஸ்லாமியரான சவுதிக்கும் இடையேயான முறுகல் நிலை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையேயான முரண்பாட்டு போக்கே சிரியா மற்றும் யேமன் போன்ற நாடுகளில் கொடூர யுத்தங்கள் இடம்பெற காரணமாகும். . சனிக்கிழமை சவுதி அரசு சியா இஸ்லாமிய தலைவரான Nimr al-Nimr உட்பட 47 சியா இஸ்லாமியருக்கு மரணதண்டனை வழங்கி இருந்தது. 2011 ஆம் ஆண்டளவில் மத்தியகிழக்கு எங்கும் பரவிய Arab Spring என்ற மக்கள் புரட்சிகளின்போது இவர்கள் […]
2016 ஆம் ஆண்டை வரவேற்க டுபாய் 1.6 தொன் நிறை வெடிமருந்துகள் கொண்ட வானவேடிக்கையை அங்குள்ள உலகின் அதியுயர் கட்டமான Burj Khalifa செய்ய திட்டமிட்டிருந்தது. அதை பார்க்க பல்லாயிரக்கணக்கனோர் அப்பகுதில் நிறைந்திருந்தனர். அத்துடன் 400,000 LED விளக்குகளும் பயன்படுத்தப்பட இருந்தது. . ஆனால் உள்ளூர் நேரம் இரவு 12:00 ஆகுமுன், Burj Khalifa இல் வானவேடிக்கை தொடங்குமுன் அக்கட்டடத்துக்கு அருகில் உள்ள Address Downtown ஹோட்டல் என்ற ஆடம்பர ஹோட்டலை பெரும் தீ பிடித்துள்ளது. இத்தீக்கான […]
சுமார் 9 வருடங்களின் பின் அமெரிக்காவின் Federal Reserve தனது மத்திய அரச வட்டியை 0.25% ஆல் அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக இந்த வட்டி ஏறக்குறை பூச்சியமாகவே இருந்து வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து உள்ளதால் அந்நாட்டின் மத்திய திறைசேரி தனது வட்டியை .25% ஆல் அதிகரித்துள்ளது. . இந்த வட்டி வீத அதிகரிப்பு அமெரிக்கர் வீடு, கார் போன்ற பெரும் செலவுகளுக்கு கடன் பெறுவதை சற்று கடினப்படுத்தும். ஆனால் அதேவேளை அமெரிக்க டொலாரின் மதிப்பு […]
முன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு வீடுகளும் இவ்வகையில் செல்வந்த சீனர்களால் கொள்வனவு செய்யப்படுகிறது. . தற்போது சராசரியாக சீன நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடு ஒன்று $831,800 பெறுமானம் கொண்டதாகும் என இக்கட்டுரை […]