டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள Red Fort என்ற 17ம் நூற்றாண்டு அரண்மனைக்கு அருகில் திங்கள் இரவு கார் ஒன்று வெடித்ததால் குறைந்தது 10 பேர் பலியாகியும், 30 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். கார் வெடித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அவ்விடத்துக்கு மெதுவாக நகர்ந்து வந்த ஒரு Hyundai i20 வகை கார் Red Light ஒன்றுக்கு தரித்த வேளையில், உள்ளூர் நேரப்படி மாலை 6:52 மணிக்கு வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் பின் இந்திய […]

Tajikistan விமான தளத்தை இந்தியா கைவிட்டது 

Tajikistan விமான தளத்தை இந்தியா கைவிட்டது 

இந்தியா தஜிகிஸ்தான் (Tajikistan) என்ற மத்திய ஆசிய நாட்டில் கொண்டிருந்த Ayni என்ற இடத்து விமானப்படை தளத்தை கைவிட்டுள்ளது.  சோவியத் முறிந்த காலத்தில் அப்போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த தளத்தை இந்தியா தனது சொந்த முதலில் நவீனப்படுத்தி இந்திய விமானப்படை தளமாக பயன்படுத்தியது. இன்றுவரை இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரே இந்திய படைத்தளம் இதுவாகும். 2002ம் ஆண்டு இந்தியாவும், தஜிகிஸ்தானும் செய்துகொண்ட ஒப்பந்தம் 2022ம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கான உரிமை நீடிக்கப்படவில்லை. சீனாவும், […]

40 தினங்களை தாண்டி தொடரும் அமெரிக்க அரச முடக்கம் 

40 தினங்களை தாண்டி தொடரும் அமெரிக்க அரச முடக்கம் 

சனாதிபதி ரம்பின் அமெரிக்க மத்திய அரசு (federal government) 40 தினங்களையும் தாண்டி முடங்கி உள்ளது. அமெரிக்க மத்திய அரசின் புதிய வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமையே இந்த முடக்கத்துக்கு காரணம். முடக்க காலத்தில் அரச ஊழியர்கள் ஊதியம் பெறார். அதனால் அவர்களின் வரவு குறைந்து, அரச சேவைகள் குறையும். உதாரணமாக விமான வழிநடத்தல், விமான நிலைய பாதுகாப்பு போன்ற சேவைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இன்று மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட சேவைகள் அமெரிக்காவில் இரத்து செய்யப்பட்டுள்ளன. […]

விரைவில் பாகிஸ்தானிடம் நவீன சீன நீர்மூழ்கிகள் 

விரைவில் பாகிஸ்தானிடம் நவீன சீன நீர்மூழ்கிகள் 

2026ம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா தயாரிக்கும் 2,800 தொன் இடப்பெயர்ச்சி எடை கொண்ட Hangor வகை நவீன நீர்மூழ்கி கப்பல்கள் கிடைக்கவுள்ளன. இந்த நீர்மூழ்கிகள் இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு அதிகரித்த சவாலாக அமையும். பாகிஸ்தான் மொத்தம் 8 சீன நீர்மூழ்கிகளை பெறும். அவற்றில் 4 சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தான் வருகின்றன. அடுத்த 4 சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் தயாரிக்கப்படும். மேற்படி 8 நீர்மூழ்கி கொள்வனவுக்கும் பாகிஸ்தானுக்கு $4 முதல் $5 பில்லியன் வரை  செலவழிக்கும். சீனாவிடம் […]

இலான் மஸ்கின் $1 டிரில்லியன் ஊதியம் அவர் கைகளை எட்டுமா?

இலான் மஸ்கின் $1 டிரில்லியன் ஊதியம் அவர் கைகளை எட்டுமா?

Tesla என்ற மின்னில் இயங்கும் EV வாகன உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து, தற்போதும் அதன் CEO ஆக பதவி வகிக்கும் இலான் மஸ்க்குக்கு $1 டிரில்லியன் ($1,000 பில்லியன்) பெறுமதியான பங்குகளை ஊதியமாக வழங்க அந்த நிறுவனத்தின் பங்காளிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இவ்வகை ஊதியம் கிடைத்தால் தற்போது உலகின் முதலாவது செல்வந்தரான இலான் மஸ்க் உலகின் முதலாவது trillionaire ஆவார். ஆனால் அவ்வாறு நிகழ்வது சாத்தியமா? இந்த ஊதியத்தை பெற இலான் பல சாதனைகளை செய்யவேண்டும். […]

செவ்வாய் தேர்தல்கள் ரம்புக்கு பெரும் தோல்வி 

செவ்வாய் தேர்தல்கள் ரம்புக்கு பெரும் தோல்வி 

செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற பல தேர்தல்கள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் Republican கட்சிக்கும் பெரும் தோல்வியை வழங்கியுள்ளன. நியூ யார்க் நகரின் முதல்வராக Zohran Mamdani என்ற இஸ்லாமியர் வெற்றி பெற்றுள்ளார். இவரை ரம்ப் தேர்தல் காலத்தில் “100% communist lunatic” என்று வசைபாடி இருந்தார். Mamdani வெற்றி பெற்றால் நிதி வழங்கமாட்டேன் என்றும் ரம்ப் நியூ யார்க் நகர வாக்காளரை மிரட்டி இருந்தார். அத்துடன் ரம்ப் Andrew Cuomo என்பவரை முதல்வராக தெரிவு செய்ய கேட்டிருந்தார். Mamdani […]

இஸ்ரேல் மேஜர் ஜெனரல் ஆபத்தில்; பதவி விலகல், தலை மறைவு, சிறை 

இஸ்ரேல் மேஜர் ஜெனரல் ஆபத்தில்; பதவி விலகல், தலை மறைவு, சிறை 

இஸ்ரேல் இராணுவத்தின் முன்னிலை சட்டத்தரணியான மேஜர் ஜெனரல் Yifat Tomer-Yerushalmi என்ற பெண் ஆபத்தில் உள்ளார். கடந்த கிழமை வரை பதவியில் இருந்த இவர் திடீரென தனது பதவியில் இருந்து விலகி, தலை மறைவானார். இவரை தேடிய இஸ்ரேல் கடந்த ஞாயிறு இரவு கடற்கரை ஒன்றில் கைது செய்து தற்போது சிறையில் அடைந்துள்ளது.  இவர் இஸ்ரேல் படைகள் Sde Teiman என்ற இராணுவ சிறையில் இருந்த பலஸ்தீன கைதிகளை சித்திரவதை செய்வதை கொண்ட வீடியோக்களை கசிய விட்டதே […]

ரம்ப் வரிகளின் மத்தியிலும் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரிப்பு 

ரம்ப் வரிகளின் மத்தியிலும் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரிப்பு 

சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் பெருமளவு இறக்குமதி வரிகளை திணித்ததால் அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி பெரும் வீழிச்சியை அடைந்துள்ளது. ஆனாலும் உலக அளவில் இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மட்டும் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் சீன ஏற்றுமதி 8.3% ஆல் அதிகரித்து உள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத சீன மொத்த ஏற்றுமதியின் […]

நைஜீரியாவையும் தாக்க தயாராகும் ரம்ப் 

நைஜீரியாவையும் தாக்க தயாராகும் ரம்ப் 

நைஜீரியாவை தாக்க தயாராகும்படி அமெரிக்க படைகளுக்கு சனாதிபதி ரம்ப் சனிக்கிழமை கட்டளை விடுத்துள்ளார். நைஜீரியாவில் கிறீஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதே ரம்ப் தாக்குதல் முனைவுக்கு முன் வைக்கும் காரணம். நைஜீரியாவின் சில மாநிலங்கள் வன்முறைகள் நிறைந்தவை. சில மாநிலங்களில் Boko Haram போன்ற இஸ்லாமிய குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டாலும், பெருமளவு வன்முறைகள் இனங்களுக்கு இடையேயும், குழுக்களுக்கு இடையேயும், மற்றும் வேறுபட்ட தரப்புகளுக்கு இடையேயும் இடம்பெறுகின்றன. Boko Haram நைஜீரியா, நிஜார், Chad, கமரூன், மாலி போன்ற பல […]

கனடிய பிரதமர் சீனா பயணம், ஒரு திருப்பு முனையாம் 

கனடிய பிரதமர் சீனா பயணம், ஒரு திருப்பு முனையாம் 

தென் கொரியாவில் தற்போது இடம்பெறும் APAC அமர்வுகளுக்கு சென்றுள்ள சீன சனாதிபதி சீயும், கனடிய பிரதமர் கார்னியும் நேற்று வெள்ளி 40 நிமிடங்கள் நேரடியான சந்தித்து உரையாடி இருந்தனர். அப்போது சீ விடுத்த அழைப்பை ஏற்று கார்னி சீனா செல்ல சம்மதித்துள்ளார். சீயை சந்தித்த பின் கார்னி மேற்படி சந்திப்பை ஒரு “turning point” என்று புகழ்த்திருந்தார். 2017ம் ஆண்டுக்கு பின் இரண்டு நாடுகளின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடியது இதுவே முதல் தடவை.  அமெரிக்கா எள்ளு […]

1 2 3 361