தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் ரம்புக்கான ஆதரவு 

தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் ரம்புக்கான ஆதரவு 

அமெரிக்காவில் சனாதிபதி ரம்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ரம்பின் பொருளாதார மற்றும் குடிவரவு கொள்கைகள் பெருமளவில் அமெரிக்கரால் மறுக்கப்பட்டுள்ளன. ரம்புக்கான ஆதரவு தற்போது 40% ஆக உள்ளது. இது ரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அவருக்கு கிடைக்கும் மிக குறைந்த ஆதரவு. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி தற்போது காங்கிரசில் கொண்டுள்ள பெரும்பான்மை Democratic கட்சி கைக்கு மாறலாம். அந்நிலை வந்தால் ரம்ப் தான் விரும்பியதை செய்ய […]

காசாவில் genocide என்கின்றன இஸ்ரேலின் B’Tselem, PHRI

காசாவில் genocide என்கின்றன இஸ்ரேலின் B’Tselem, PHRI

இஸ்ரேல் காசாவில் genocide செய்வதாக  B’Tselem மற்றும் Physicians for Human Rights Israel (PHRI) ஆகிய இரண்டு இஸ்ரேல் மனிதநேய தொண்டர் அமைப்புகள் திங்கள் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. B’Tselem தனது 88 பக்கங்களை கொண்ட அறிக்கையில் இஸ்ரேல் coordinated தாக்குதல்கள் மூலம் பலஸ்தீனர் சமுதாயத்தை intentionally அழிக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளது. PHRI தனது 65 பக்கங்களை கொண்ட அறிக்கையில் இஸ்ரேல் calculated and systematic அணுகுமுறைகள் மூலம் காசாவில் உள்ள வைத்தியசாலைகள், அவற்றுக்கான கட்டமைப்புகளை அழித்து வருகிறது என்று […]

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக இணக்கம் அறிவிப்பு

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக இணக்கம் அறிவிப்பு

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக இணக்கம் ஒன்றை ஞாயிறு அறிவித்து உள்ளன. இந்த இணக்கப்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கு அமெரிக்கா 15% இறக்குமதி வரி அறவிடும். இந்த 15% இறக்குமதி வரி முன்னர் ரம்ப் அறிவித்திருந்த 30% வரியின் அரை பங்கே. அத்துடன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் செல்லும் பொருட்களுக்கு பல்வேறு அளவிலான வரி அறவிடப்படும். இந்த விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரம்ப் ஏற்கனவே பிரித்தானியா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், […]

தாய்வான் சீன எதிர்ப்பு கட்சியின் நாடகம் தோல்வியில் 

தாய்வான் சீன எதிர்ப்பு கட்சியின் நாடகம் தோல்வியில் 

தாய்வானில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன; ஒன்று அமெரிக்க சார்பு Democratic Progressive Party (DPP), மற்றையது சீன சார்பு KuoMinTang (KMT). அங்கு சனாதிபதி பதவி தற்போது DPP கையில் உள்ளது. ஆனால் 113 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் KMT கையில் உள்ளது; DPP கட்சியிடம் 51 ஆசனங்களும், எதிரணியில் 62 ஆசனங்களும் உள்ளன. அதனால் சனாதிபதி தான் விரும்பியதை செய்ய முடியாது உள்ளார். அத்துடன் KMT உறுப்பினர்கள் சீனாவுக்கு நல்லிணக்க பயணங்களை மேற்கொள்வதையும் DPP விரும்பவில்லை. பாராளுமன்றத்தில் […]

பலஸ்தீனர் நாட்டை மறுக்கும் பிரித்தானிய பிரதமர் 

பலஸ்தீனர் நாட்டை மறுக்கும் பிரித்தானிய பிரதமர் 

பிரான்ஸ் வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ள அறிவித்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் Keir Starmer தொடர்ந்தும் பலஸ்தீனர் நாட்டை மறைமுகமாக மறுத்து வருகிறார். பலஸ்தீனர் நாட்டை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அது ஒரு சமாதான தீர்வுடன் இணைந்து ஏற்படவேண்டும் என்றும் Starmer கூறியுள்ளார். பல சந்ததிகளாக மேற்கு நாடுகளின் அரசியல் புள்ளிகள் இந்த நரி தந்திர சூத்திரத்தையே பாடி வருகின்றனர். ஏனென்றால் இஸ்ரேல் என்றைக்கும் பலஸ்தீனர் நாட்டை ஏற்காது. அதனால் அங்கு தீர்வு ஏற்படாது. அதனால் Starmer போன்றோர் பலஸ்தீனர் […]

பலஸ்தீனர் நாட்டை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும்

பலஸ்தீனர் நாட்டை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும்

பிரான்ஸ் பலஸ்தீனர் நாட்டை செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சனாதிபதி மக்ரோன் (Emmanuel Macron) வியாழக்கிழமை கூறியுள்ளார். பிரான்ஸ் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளும் பிரான்சுடன் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. பல சந்ததிகளாக செய்த தவறை பிரான்ஸ் தற்போது, பெரும் அழிவுகளுக்கு பின், திருத்த முன்வந்துள்ளது.  ஆனாலும் இராணுவ பலத்தை உள்ளடக்காத பிரான்சின் இந்த அரசியல் நகர்வு பலஸ்தீனருக்கு உடனடி நலன் எதையும் வழங்காது. குறிப்பாக அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு உள்ளவரை இஸ்ரேலை எவரும் […]

இந்த ஆண்டு சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் 

இந்த ஆண்டு சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் 

Henley Passport Index அமைப்பின் இந்த ஆண்டுக்கான கடவுச்சீட்டு தராதர கணிப்பில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு கொண்டோர் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இரண்டாம் இடத்தில் உள்ள தென் கொரிய, ஜப்பான் கடவுச்சீட்டு கொண்டோர் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து கடவுச்சீட்டு கொண்டோர் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். 2014ம் ஆண்டில் 1ஆம் […]

ரம்பின் வரியால் GM க்கு காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு

ரம்பின் வரியால் GM க்கு காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு

அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரியால் அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான GM (General Motors) க்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முழு ஆண்டுக்கும் சுமார் $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரையான இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு GM $14.9 பில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2025ம் ஆண்டில் $10 பில்லியன் முதல் $12.5 பில்லியன் வரையிலான இலாபத்தையே அடையும் […]

மீண்டும் இஸ்ரேல் மீது நடிப்புக்கு குரைக்கும் மேற்கு நாடுகள் 

மீண்டும் இஸ்ரேல் மீது நடிப்புக்கு குரைக்கும் மேற்கு நாடுகள் 

காசாவில் இஸ்ரேல் செய்யும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தும்படி 28 மேற்கு நாடுகள் திங்கள் அறிக்கை விடுத்து முதலை கண்ணீர் விட்டுள்ளன. கனடா, அஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இந்த அறிக்கையில் இணைந்துள்ளன. ஜெர்மனி மேற்படி அறிக்கையில் இருந்து விலகி இருந்துள்ளது. ஆனாலும் ஜெர்மனியும் கூடவே முதலை நடிப்புக்கு கண்ணீர் விட்டுள்ளது. இந்த அறிக்கை “the suffering of civilians in Gaza has reached new depths.” என்றும், “the drip feeding of aid and the […]

பங்களாதேசில் யுத்த விமானம் விழுந்து 19 பேர் பேர் பலி 

பங்களாதேசில் யுத்த விமானம் விழுந்து 19 பேர் பேர் பலி 

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் F-7 வகை யுத்த விமானம் ஒன்று கல்லூரி ஒன்றில் விழுந்ததால் குறைந்தது 19 பேர் பலியாகியும், மேலும் 164 வரை காயமடைந்தும் உள்ளனர். Milestone School and College என்ற கல்லூரியின் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றின் மீதே இந்த விமானம் விழுந்துள்ளது. அதன் விமானியும் பலியாகி உள்ளார் என்கிறது விமானப்படை. திங்கள் பிற்பகல் 1:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பங்களாதேஷ் செவ்வாய் கிழமையை துக்க தினமாக அறிவித்துள்ளது. இந்த கல்லூரியில் […]

1 2 3 351