கரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளன துறை விமானசேவையே. விமான போக்குவரத்துக்கள் தடைப்பட, விமான சேவைகள் போதிய பயணிகள் இன்றி நட்டத்தில் இயங்க ஆரம்பித்தன. . Aeromexico என்ற மெக்ஸிக்கோ விமான சேவை இன்று முறிந்தது. முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க Airmexico இன்று அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிந்து உள்ளது. 1934 ஆம் ஆண்டு Aeronaves de Mexico என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையில் தற்போது 68 விமானங்கள் உள்ளன. அத்துடன் இது மேலும் […]
ஹாங் காங் இளையோர் மற்றும் மேற்கு நாடுகள் முன் வைத்த பலமான எதிர்ப்புகள் மத்தியிலும் சீன மத்திய அரசு ஹாங் காங் மீதான தனது புதிய சட்டங்கள் சிலவற்றை செய்வாய்க்கிழமை இரவு 11:00 மணி முதல் நடைமுறை செய்கிறது. புதிதாக நடைமுறை செய்யப்படும் சட்டங்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனைகளை வழங்க முடியும். . புதிய சட்டப்படி 1) பிரிவினைவாதம் (secession), 2) அரசுக்கு எதிராக செயற்படல் (subversion), 3) பயங்கரவாதம் (terrorism), 4) அந்நியருடன் […]
கடந்த காலங்களில் சீனாவின் பெரிய நிறுவங்கள் அமெரிக்காவின் பங்கு சந்தைகளில் தமது பங்குகளை விற்பனை செய்து வந்துள்ளன. பெருமளவு பணமுள்ள அமெரிக்கர் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனங்களில் முதலீடுகளை செய்து பெரும் இலாபம் அடைய இது வழி செய்தது. . ஆனால் தற்போது அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் முரண்பட்டு வருவதால், சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் New York Stock Exchange, NASDAQ போன்ற பங்கு சந்தைகளில் இருந்து ஹாங் காங் பங்கு சந்தைக்கு (Hong […]
ஆப்கானித்தானில் தலபானால் கொலை செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க படையினருக்கும் ஈடாக ரஷ்யா தலபானுக்கு சன்மானம் (bounty) வழங்கியது என்று அமெரிக்காவுக்கு இரகசிய துப்பு கிடைத்ததாக The New York Times, Washington Post, Wall Street Journal ஆகிய அமெரிக்க பத்திரிகைகள் கூறி உள்ளன. . மேற்படி சன்மானம் வழங்கலை ரஷ்யாவின் உளவுப்படையான GRU செய்ததாக அமெரிக்க செய்திகள் கூறுகின்றன. ஐரோப்பாவில் இடம்பெறும் சில படுகொலைகளின் பின்னணியிலும் GRU உள்ளதாக மேற்படி செய்திகள் கூறுகின்றன. . ஆனால் […]
இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன்களில் $960 மில்லியன் பெறுமதியான கடனை இலங்கை தற்போது அடைக்கவேண்டி உள்ளது. ஆனால் இலங்கையிடம் அக்கடனை அடக்க தேவையான பணம் தற்போது இல்லை. . அதனால் இந்த கடன் அடைப்பு காலத்தை நீடிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை பிரதமர் ராஜபக்ச 4 மாதங்களுக்கு முன்ன கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் The Hind பத்திரிகை கூறுகிறது. இருதரப்பும் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றன. . இந்த கடன் அடைப்பு காலத்தை நீடிக்காவிடின், […]
இந்தியாவின் வட மாநிலங்களான பீஹார் மற்றும் உத்தர பிரதேசம் உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக தாக்கிய மின்னல்களுக்கு குறைந்தது 120 பேர் பலியாகி உள்ளனர். . உத்தர பிரதேச அதிகாரி Aditi Umrao விடுத்த அறிக்கையின்படி அங்கு 24 மணித்தியாலங்களில் குறைந்தது 24 பேர் மின்னலுக்கு பலியாகி உள்ளனர். . அருகில் உள்ள பீஹார் மாநிலத்தில் வியாழன் இடம்பெற்ற மின்னல் தாக்குதல்களுக்கு குறைந்தது 95 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள Gopalgani என்ற பகுதியில் மட்டும் 13 […]
தற்போதைய கணக்கிடலின்படி அமெரிக்காவில் 2.3 மில்லியன் மக்களே கரோனா தொற்றி உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் Center for Disease Control (CDC) தலைவர் Dr. Robert Redfield இன்று வியாழக்கிழமை தெரிவித்த கூற்றுப்படி உண்மையில் கரோனா தொற்றியோர் தொகை அங்கு பத்து மடங்கிலும் அதிகம். அதாவது சுமார் 23 மில்லியன் அமெரிக்க மக்கள் கரோனா தொற்றி உள்ளனர். . வழமையாக கரோனாவுக்கான அறிகுறி தெரித்தோர் வைத்திய உதவியை நாடும்பொழுதே அவருக்கு கரோனா தொற்றியதா என்பதை வைத்தியசாலை ஆராயும். […]
பாகிஸ்தானில் விமானிகளாக பணியாற்றும் விமானிகளில் சுமார் 30% விமானிகளின் விமானி பாத்திரங்கள் (licenses) பொய்யானவை என்று அந்நாட்டின் விமான சேவைகள் அமைச்சர் Ghulam Sarwar Khan புதன்கிழமை கூறி உள்ளார். பாகிஸ்தானின் பெரிய விமான சேவையான Pakisthan International Airlines (PIA) விமானிகளும் போலி அனுமதிப்பத்திரம் கொண்டோருள் அடங்குவர். . பாகிஸ்தானில் மொத்தம் 860 விமானிகள் உள்ளதாகவும், அவர்களில் 262 விமானிகள் முறைப்படியான விமானி பத்திரங்களை கொண்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் கூறி உள்ளார். போலி விமானிகளுக்கான சோதனைகள் […]
அமெரிக்கா வெளிநாட்டவருக்கு வழங்கும் வரும் H-1B என்ற வேலைவாய்ப்பு விசா வழங்கலை வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்தி உள்ளார் சனாதிபதி ரம்ப். கூடவே H-1B விசா கொண்டோரின் துணைவருக்கு வழங்கப்படும் H-2B மற்றும் L விசா வழங்கல்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியாவே. . தற்காலங்களில் H-1B விசா வெளிநாடுகளின் தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்கா சென்று தொழில் செய்ய வழி செய்கிறது. வருடம் ஒன்றில் சுமார் 85,000 பேருக்கு H-1Bவழங்கப்படுகிறது. அதில் சுமார் […]
உள்ளூர் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:29 மணியளவில் மெக்ஸிகோவின் Oaxaca என்ற தென் மாநிலத்தில் 7.4 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கம் இதுவரை 2.3 உயர அலைகளை தோற்றுவித்து உள்ளது. சுமார் 1,000 km சுற்றாடலுக்கு சுனாமி எச்சரிக்கை தற்போது நடைமுறையில் உள்ளது. . இந்த நிலநடுக்கம் அண்மையில் உள்ள Guatemala, Hounduras, El Salvador ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. சுமார் 300 km வடக்கே உள்ள Mexico City என்ற மெக்ஸிகோவின் […]