Radar தொழில்நுட்பத்தை முறியடிக்க வந்த Radar Jamming தொழில்நுட்பத்தை முறியடிக்க சீனா AI Radar தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ளது. இந்த நுட்பம் சீனாவின் ஆகஸ்ட் மாத Information Research வெளியீட்டில் வெளிவந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளாக பாவனையில் உள்ள ரேடார் (RADAR: Radio Detection and Ranging) தொழில்நுட்பம் முதலில் பொதுமக்கள் சேவைகளுக்கு பயன்பட்டு வந்தது. கண்ணனுக்கு தெரியாத தூரத்தில் பயணிக்கும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் தூரங்கள், வேகங்கள் ஆகியவற்றை அறிய ரேடார் பயன்பட்டது. ஆனால் பின்னர் இது […]
அமெரிக்காவில் பொதுவாகவே பார வாகனம் (truck) செலுத்தும் சீக்கிய சாரதிகள் மீது வெறுப்பு உள்ளது. அண்மையில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து சீக்கிய சாரதிகள் மீதான அந்த வெறுப்பை உரமாக்கி உள்ளது. ஆகஸ்ட் 12ம் திகதி Harjinder Singh என்ற Democratic கட்சி ஆளும் கலிபோர்னியா மாநில சீக்கிய truck சாரதி Republican கட்சி ஆளும் புளோரிடா மாநிலத்தில் U-turn ஒன்றை செய்யும்போது ஏற்பட்ட விபத்துக்கு 3 பேர் பலியாகினர். இந்த விபத்து மேற்படி இரண்டு […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் Department of Defense என்று அழைக்கப்பட்ட திணைக்களத்தை Department of War என்று பெயரிட executive order மூலம் பணித்துள்ளார். ஆனாலும் இந்த புதிய பெயர் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். World War I, World War II காலத்தில் இந்த திணைக்களம் Department of War என்றே அழைக்கப்பட்டது என்று தன் முனைவை நியாயப்படுத்துகிறார் ரம்ப். 1789 முதல் 1947 வரை இது Department of War என்றே அழைக்கப்பட்டது. […]
ரம்ப் இந்திய பொருட்கள் மீது திணித்த 50% இறக்குமதி வரி இந்தியாவின் பெரும் செல்வந்தர்களை அதிகம் பாதிக்க உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா முரண்பட ஆரம்பித்த காலம் முதல் இந்தியா தனது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வழி கிடைத்தது. ஆனால் அந்த ஏற்றுமதி தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது செல்வந்தர் முகேஷ் அம்பானி ($97.7 பில்லியன்), கெளதம் அதானி ($77.9 பில்லியன்), லட்சுமி மித்தால் ($25.4 பில்லியன்), விக்ரம் லால் ($11.1 பில்லியன்) போன்ற செல்வந்தர்கள் கொண்டுள்ள செல்வங்களின் அளவு குறையும். கடந்த ஆண்டு […]
இன்று புதன் பெய்ஜிங்கில் சீனா அரங்கேற்றிய இராணுவ அணிவகுப்பு அமெரிக்க சனாதிபதி ரம்பை பல முனைகளில் மிரள வைத்துள்ளது. ரஷ்யாவின் பூட்டின், வட கொரியாவின் கிம் உட்பட பல தலைவர்கள் இந்த அணிவகுப்பை சீயுடன் இணைந்து பார்வையிட்டனர். அணிவகுப்பால் மிரண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன சனாதிபதி சீ ரஷ்யாவின் பூட்டினுடனும், வட கொரியாவின் கிம்முடனும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக கூறியுள்ளார். குறிப்பாக அனுவகுப்பில் பங்கு கொண்ட புதிய ஆயுதங்கள் ரம்ப் போன்ற மேற்கின் தலைவர்களை […]
Shanghai Cooperation Organization (SCO) அமர்வுக்கு சீனா சென்ற ரஷ்ய சனாதிபதி பூட்டினும் சீன சனாதிபதி சீயும் மிகப்பெரிய எரிவாயு திட்டம் ஒன்றுக்கு இன்று செவ்வாய் இணங்கி உள்ளனர். இந்த இணக்கப்படி ரஷ்யாவின் Gazprom என்ற எரிவாயு நிறுவனம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 50 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை சீனாவுக்கு விற்பனை செய்யும். இந்த எரிவாயு மங்கோலியா ஊடு Power of Siberia-2 குழாய் மூலம் எடுத்து செல்லப்படும். இத்தொகை இதுவரை ரஷ்யா ஐரோப்பிய […]
Shanghai Cooperation Organization (SCO) என்ற அமைப்பின் அமர்வுக்கு சீன நகரமான Tianjin சென்ற இந்திய பிரதமர் மோதிக்கும் சீன சனாதிபதி சீக்கும் இடையில் உறவு உச்சத்தை அடைந்துள்ளது. சனாதிபதி சீ இந்தியாவும், சீனாவும் நண்பர்களாக இருப்பது சரியான தெரிவு (right choice) என்று கூறியுள்ளார். சீயின் கூற்றுக்கு பதிலளித்த மோதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை இந்தியா இருதரப்பு நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் (mutual trust and respect) முன்னெடுக்க உள்ளதாக கூறியுள்ளார். 2020ம் ஆண்டு இமாலய […]
செப்டம்பர் 3ம் திகதி சீன தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள சீன படைகளின் அணிவகுப்பை சீன சனாதிபதி சீயுடன் ரஷ்ய சனாதிபதி பூட்டினும், வடகொரிய சனாதிபதி கிம் ஜொங் உன்னும் கூட்டாக பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பு பூட்டின் மீதும், கிம் மீதும் சீக்கு உள்ள மேலதிக ஆதிக்கத்தை காட்டுகிறது. குறிப்பாக ரம்ப் சந்திக்க துடிக்கும் இருவரும் இலகுவில் பெய்ஜிங் செல்வது ரம்புக்கு மிரட்டலாகவே உள்ளது. இதற்கு முன் 1959ம் ஆண்டே வடகொரிய தலைவர் சீனா சென்று சீன […]
திங்கள் Nasser Medical Complex என்ற காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் மொத்தம் 3 குண்டுகளை வீசியது என்று தற்போது அறியப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் 4ம் மாடியில் இருந்த பத்திரிகையாளர் மீது திங்கள் காலை 10:08 மணிக்கு முதல் குண்டு வீசப்பட்டது. அவர் மட்டும் அந்த குண்டுக்கு பலியானார். அவ்விடத்துக்கு உதவிக்கு விரைந்த வைத்தியர்கள், பத்திரிகையாளர் மீது மேலும் 2 குண்டுகள், ஒன்றின் ஒன்றின் பின் ஒன்றாக, 10:17 மணிக்கு வீசப்பட்டன. இந்த 2 குண்டுகளுக்கும் மேலும் 21 பேர் […]
Federal Reserve என்ற அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநர் Lisa Cook கின் பதவியை பறித்துள்ளதாக திங்கள் அவருக்கு அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ஆனால் ரம்புக்கு அந்த உரிமை உள்ளதா என்பது கேள்விக்குறியே. Lisa Cook தான் பதவியை தொடர உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்க மத்திய வங்கியின் 111 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் ஒருவரின் பதவியை சனாதிபதி பறிக்க முனைவது இதுவே முதல் தடவை. அமெரிக்க சனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் […]