தமிழ்நாட்டு அகழ்வுகளுக்கு மத்தி இடர்?

தமிழ்நாட்டில் இடம்பெறும் அகழ்வாய்வுகளுக்கு இந்திய மத்திய அரசு இடராக இருக்கிறதா என்று கேட்க வைக்கின்றன மத்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள். . வைகை நதி கரையோரம், மதுரைக்கு தென்கிழக்கே, உள்ள கீழடி என்ற இடத்தில் சுமார் 2200 வருடங்களுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்று இருந்தமை அறியப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்கு முன் இவ்விடத்தை அகழ்வாய்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் பின்னர் நிதிகளை முடக்குவதன் மூலம் அகழ்வு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன. . 2016 ஆன் ஆண்டில் […]

பாரடா பிரபாகரா

பாரடா பிரபாகரா

விளக்கம் கேட்டவரை துரோகியென்று போட்டாயடா விளக்கமாக கூறியவரையும் துரோகியென்றே என்று போட்டாயடா . நீயெடுத்த உரிமையை உன் சகோதரர்க்கு மறுத்தாயடா Douglas அழிப்புக்காய் உன் கரும்புலியொன்றும் வெடித்தாளடா . அப்பவெல்லாம் வருடிகளை உன் காலடியில் வளர்த்தாயடா இப்போ பாரடா பிரபாகரா உன் வருடிகளின் அரசியல் உறவுகளை… . வெடித்தவள் உயிர் விரயமாக போனதடா எடுத்த கருமம் மட்டுமல்ல அரையில் உருத்திருந்ததும் பறி போனதடா . இப்ப பாரடா பிரபாகரா நீ விதைத்த அழிவுகளை பாவம் உன் மக்கள் […]

3ம்-4ம் நூற்றாண்டு இந்திய சுவடியில் பூச்சியம்

தற்கால கணிதத்தில் மிகமுக்கிய பாகம் தான குறிப்பீடு (place value) ஆகும். அந்த தானத்தை மெருகூட்ட தோன்றியது பூச்சிய குறியீடு. இந்த இரண்டையும் கொண்டதாலேயே இன்று நடைமுறையில் இருக்கும் கணித முறைமை உலகத்தில் இருந்த மற்றைய எல்லா கணித முறைமைகளையும் பின்தள்ளி முன்வந்தது. . இந்த தான குறிப்பீடும், பூச்சிய குறியீடும் எந்த கலாச்சாரத்தில் இருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க விஞ்ஞானம் தன்னால் முடிந்ததை செய்கிறது. . இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் […]

முதுமரத் தாய்

முதுமரத் தாய் துவாரகன் (2013/05) அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்து போகாத நினைவுகள் வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின. சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின. தளர்ந்து செதிலாகிப் போன கால்களை நீட்டியபடி இன்னமும் தீர்ந்து போகாத அந்த நினைவுகளோடு காத்திருக்கிறாள் முதுமரத் தாயொருத்தி. அறுந்துபோன செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல் எல்லோரும் அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுகதை: தோசை

சிறுகதை: தோசை

“எழுநூற்றி ஐம்பது, அல்லது சுருக்கமாக ஐம்பது. இது யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னிலை பஸ் இலக்கம். அந்த பஸ்ஸில் ஒரு மூலையில் வாத்தியார். அவரும் யாழ்ப்பாண குடா நாட்டின் முன்னிலை பிரசைகட்கு ஒரு உதாரணம். அவரின் மடியில் கூடை நிரம்ப மீன், காய்கறி. வாத்தியார் அருகில் ஒரு வாலிபன்.

எண் தமிழ்

எண் தமிழ்

க. நீலாம்பிகை“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு”“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” மேல் கூறிய மூத்தோர் வாக்குகள் மூலம் பண்டைய தமிழர் எழுத்தறிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சம அளவில் எண் அறிவுக்கும் கொடுத்திருந்தமையை அறியக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று உலகெங்கும் பாவனையில் உள்ள நவீன எண்களை (modern decimal number system) பண்டைய தமிழரே உலகிற்கு வழங்கியிருக்கலாம் என கருத பல ஆதாரங்கள் உண்டு. முதலாவதாக நாம் இலக்கங்களை அழைக்கும் முறையை […]

சீராடை யற்ற வைரவன்

சீராடை யற்ற வைரவன்

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

காலக்கணிப்பு – தமிழ்மரபும் ஐரோப்பியமரபும்

காலக்கணிப்பு – தமிழ்மரபும் ஐரோப்பியமரபும்

ஐரோப்பியர் 10 மாதங்களைப் 12 மாதங்களாக மாற்றியமைக்கு தமிழ் ஆண்டுக்கணிப்புமுறை காரணமாயிருக்கலாம். தொல்காப்பியக் காலம் 2ஆம் உரோமச் சக்கரவர்த்தியின் காலத்திற்கு முற்பட்டதாகும். அதாவது 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.