nVIDIA $4 டிரில்லியன் நிறுவனம், CEO Huang சீனா செல்கிறார் 

nVIDIA $4 டிரில்லியன் நிறுவனம், CEO Huang சீனா செல்கிறார் 

nVIDIA என்ற artificial intelligence வல்லமை கொண்ட chip களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) $4 டிரில்லியன் ($4,000 பில்லியன்) ஆகியுள்ளது. உலகில் nVIDIA மட்டுமே $4 டிரில்லியன் பெறுமதி கொண்ட நிறுவனம். ஆனாலும் ரம்ப் அரசு விதித்த தடைகள் காரணமாக nVIDIA சீன சந்தையை தற்போது இழந்துள்ளது. சீன சந்தையை மீண்டும் கைப்பற்ற nVIDIA CEO Jensen Huang சில தினங்களில் சீனா செல்கிறார். அதற்கு முன் வியாழன் Huang […]

முதலாவது வெகுமதியான அமெரிக்க நிறுவனம் NVIDIA 

முதலாவது வெகுமதியான அமெரிக்க நிறுவனம் NVIDIA 

வியாழக்கிழமை NVIDIA என்ற அமெரிக்க AI Chip தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் விலை $160.98 ஆக உயர்ந்ததால் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குச்சந்தை வெகுமதி (market capital) $3.92 டிரில்லியன் ($3,920 பில்லியன்) ஆகி இருந்தது. அதனால் NVIDIA முதலாவது உயரிய வெகுமதி கொண்டிருந்த நிறுவனமாகிறது. 2024ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி முதல் iPhone தயாரிக்கும் Apple நிறுவனம் இந்த பெருமையை கொண்டிருந்தது. அப்போது இந்த வெகுமதி $3.915 டிரில்லியன் ஆக அதிகரித்து இருந்தது. […]

கொழும்பில் மூடப்படும் NEXT ஆடை தயாரிப்பு நிறுவனம்

கொழும்பில் மூடப்படும் NEXT ஆடை தயாரிப்பு நிறுவனம்

கடந்த 40 ஆண்டுகளாக கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த NEXT என்ற பிரித்தானிய நிறுவனம் தனது ஆடை தயாரிப்பு வளாகத்தை மூடுகிறது. இலங்கையில் ஆடை தயாரிப்புக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், இந்த வர்த்தகம் கடந்த பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகிறது என்றும் NEXT கூறியுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த செலவு அதிகரித்து உள்ளது என்று NEXT கூறவில்லை. பொதுவாக தொழிலாளர் ஊதியம் இலங்கையில் மிகையாக அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர். மேற்படி […]

1917ம் ஆண்டுக்கு பின் Aaa கடன் நாணயத்தை இழந்த அமெரிக்கா

1917ம் ஆண்டுக்கு பின் Aaa கடன் நாணயத்தை இழந்த அமெரிக்கா

உலகின் 3 பிரதான rating அமைப்புகளில் ஒன்றான Moody’s வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கடன் வழங்கலுக்கான நாணயத்தை அல்லது உத்தரவாத அளவை அதி உயர்ந்த Aaa தரத்தில் இருந்து இரண்டாம் தரமான Aa1 க்கு குறைத்து உள்ளது. Moody 1917ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு வழங்கி வந்திருந்த Aaa நாணய சான்றிதழை வெள்ளி பறித்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் அரச செலவை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதனால் அரச கடனும், அதற்கான வட்டி செலவும் வேகமாக அதிகரித்து […]

அமெரிக்க பொருளாதாரம் 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்தது 

அமெரிக்க பொருளாதாரம் 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்தது 

2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் (GDP) 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று புதன்கிழமை அமெரிக்க Commerce Department தெரிவித்துள்ளது.  உண்மையில் இந்த காலாண்டுக்கு 0.3% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனாலும் ரம்பின் இறக்குமதி வரி யுத்தம் அமெரிக்காவுக்கு பொருளாதார வீழ்ச்சியை வழங்கியுள்ளது. இதற்கு முந்திய பைடென் காலத்து காலாண்டில் (2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நாலாம் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 2.4% ஆல் வளர்ந்து இருந்தது. இந்த காலாண்டு பொருளாதார வீழ்ச்சி ரம்ப் […]

ஜப்பானை பின் தள்ளி 4வது பொருளாதாரம் ஆகிய கலிபோர்னியா 

ஜப்பானை பின் தள்ளி 4வது பொருளாதாரம் ஆகிய கலிபோர்னியா 

அமெரிக்காவின் ஒரு மாநிலமான கலிபோர்னியாவின் பொருளாதாரம் 2024ம் ஆண்டு இதுவரை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பானின் பொருளாதாரத்தை பின் தள்ளி 4வது பெரிய பொருளாதாரம் ஆகியுள்ளது. 2024ம் ஆண்டில் கலிபோர்னியாவின் பொருளாதாரம் (GDP) $4.10 ட்ரில்லியன் ($4,100 பில்லியன்) ஆகவும் ஜப்பானின் பொருளாதாரம் $4.01 ட்ரில்லியன் ($4,010 பில்லியன்) ஆகவும் இருந்துள்ளன. இந்த செய்தியால் ரம்புக்கு எதிரான Democratic கட்சி மாநில ஆளுநர் Gavin Newsom மேலும் உற்சாகம் அடைந்துள்ளார். இவர் 2028ம் ஆண்டில் அமெரிக்க சனாதிபதி போட்டியில் […]

ரம்பால் 3.3% உலக பொருளாதார வளர்ச்சி 2.8% ஆக குறையும்

ரம்பால் 3.3% உலக பொருளாதார வளர்ச்சி 2.8% ஆக குறையும்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்துவரும் இறக்குமதி வரி (tariff) யுத்தம் காரணமாக 2025ம் ஆண்டில் 3.3% வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்ட உலக பொருளாதாரம் 2.8% வளர்ச்சியை மட்டுமே கொண்டு இருக்கும் என்று IMF இன்று செவ்வாய் எச்சரித்து உள்ளது. அது மட்டுமன்றி 2.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட 2025ம் ஆண்டுக்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியும் 1.8% ஆக மட்டுமே இருக்கும் என்றும் IMF கூறியுள்ளது. சனாதிபதி ரம்ப் அமெரிக்க Federal Reserve என்ற மத்திய […]

அமெரிக்கா மீது சீனா 125% வரி, இது இறுதி வரி 

அமெரிக்கா மீது சீனா 125% வரி, இது இறுதி வரி 

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா 84% இல் இருந்து 125% ஆக உயர்த்தி உள்ளது. ரம்ப் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்திய பின்னரே சீனா தனது வரியை 125% ஆக உயர்த்தியது. அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீதான 125% வரியே இறுதி வரி என்றும், இதற்கு மேல் தமது வரி உயர்த்தப்படாது என்றும் சீனா கூறியுள்ளது. இதற்கு மேலான வரி ஒரு number game மட்டுமே என்றுள்ளது சீனா. […]

ரம்ப் சீனாவுக்கு 125% வரி, ஏனைய நாடுகளுக்கு 90 தின இடைநிறுத்தம் 

ரம்ப் சீனாவுக்கு 125% வரி, ஏனைய நாடுகளுக்கு 90 தின இடைநிறுத்தம் 

சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார். சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான […]

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84% பதிலடி வரி அறிவிப்பு 

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84% பதிலடி வரி அறிவிப்பு 

அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது. ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். […]

1 2 3 18