கனடிய TD உலகில் மிகப்பெரிய Hedge Fund வங்கி

கனடிய TD உலகில் மிகப்பெரிய Hedge Fund வங்கி

உலக அளவில் அதிகம் hedge fund முதலீட்டை கொண்ட வங்கி கனடாவின் TD Bank (Toronto Dominion Bank, TD.TO) என்று அறியப்படுகிறது. TD வங்கியின் பங்குச்சந்தை பங்கில் சுமார் $3.7 பில்லியன் hedge fund முதலீடுகளில் உள்ளது என்று அறியப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் JP Morgan பங்குகளில் $2.3 பில்லியன் பங்குகளே hedge fund முதலீடுகளில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை வீழ்ச்சி அடைய உள்ளது என்று கருதும் பொழுதே hedge […]

19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

இந்த மாதம் 19ம் திகதி அமெரிக்கா மீண்டும் debt limit எல்லையை அடையும் என்றும் அதன்பின் ஊதியங்கள், சேவைகள் போன்ற செலவுகளுக்கு அமெரிக்க மத்திய அரசிடம் பணம் இல்லா நிலை ஏற்படும் என்றும் Treasury Secretary Janet Yellen இன்று வெள்ளி கூறியுள்ளார். செலவுகளுக்கு போதிய பணம் இல்லாத நிலையில் அமெரிக்கா எவ்வளவு கடன் பெறலாம் என்பதை debt limit என்ற சட்டம் வரையறை செய்கிறது. அந்த தொகைக்கு மேல் அரசு கடன் பெற முடியாது. பதிலுக்கு […]

முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

முற்றாகிய அதானியின் இஸ்ரேல் துறைமுக கொள்வனவு

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் (Adani Group) இஸ்ரேல் துறைமுக கொள்வனவு முற்று பெற்றுள்ளது. அதானி நிறுவனம் வட இஸ்ரேலில் உள்ள Haifa துறைமுகத்தின் ஒரு பகுதியை $1.15 பில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளது. ஏறக்குறைய 99% பொருட்கள் கப்பல் மூலமே இஸ்ரேலுக்கு வருவதால், இஸ்ரேலில் இருந்து செல்வதால் அங்கு துறைமுகம் மிக பிரதானமானது. சீனாவின் Shanghai International Port Group (SIPG) ஏற்கனவே Haifa குடாவில் இன்னோர் துறைமுகத்தை இயக்கி வருகிறது. சீனாவின் $1.7 பில்லியன் பெறுமதியான துறைமுகம் […]

ஒரு ஆண்டில் $200 பில்லியனை இழந்தார் Elon Musk

ஒரு ஆண்டில் $200 பில்லியனை இழந்தார் Elon Musk

Tesla என்ற மின்சார சக்தியில் இயங்கும் கார் நிறுவனத்தை ஆரம்பித்த இலான் மஸ்க் (Elon Musk) தான் உச்ச செல்வந்த காலத்தில் கொண்டிருந்த பெறுமதியில் சுமார் $200 பில்லியனை தற்போது இழந்துள்ளார். Tesla நிறுவனத்தின் பங்ச்சந்தை பெறுமதி வீழ்ச்சி அடைந்ததே இவரின் செல்வம் வீழ்ச்சி அடைய முதல் காரணி. தற்போது இலான் உலகத்தில் இரண்டாவது பெரிய செல்வந்தர். முதலாவது பெரிய பணக்காரராக பிரஞ்சு வர்த்தகர் Bernard Arnault உள்ளார். 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இலான் $340 […]

2035ம் ஆண்டளவில் சீன GDP அமெரிக்காவை பின் தள்ளும்

2035ம் ஆண்டளவில் சீன GDP அமெரிக்காவை பின் தள்ளும்

2035ம் ஆண்டளவில் சீனாவின் GDP (Gross Domestic Product) அமெரிக்காவின் GDP யை பின் தள்ளி சீன பொருளாதாரம் உலகின் முதலாவது பொருளாதாரம் ஆகும் என்று கூறுகிறது Goldman Sachs என்ற அமெரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி. Goldman Sachs நிறுவனத்தின் இன்றைய கணிப்பு அது 2011ம் ஆண்டு வெளியிட்ட சீனாவின் வளர்ச்சி கணிப்பை சுமார் 10 ஆண்டுகள் பின்தள்ளி உள்ளது என்றாலும் Covid தாக்கம், யூகிறேன் யுத்தம், சீனா மீதான அமெரிக்காவின் தடைகள் […]

2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் உலகம் எங்கும் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் என்றாலும், ஐரோப்பாவில் மந்த நிலை மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று Organization for Economic Cooperation and Development (OECD) இன்று செவ்வாய் கூறியுள்ளது. 1970ம் ஆண்டுகளில் எரிபொருள் தடைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு பின் 2023ம் ஆண்டு மந்தநிலை உக்கிரமாக இருக்கும் என்கிறது OECD. OECD கணிப்புப்படி இந்த ஆண்டு 3.1% ஆக உள்ள உலக பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 2.2% ஆக […]

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

கட்டாரின் QatarEnergy என்ற நிறுவனமும் சீனாவின் Sinopec என்ற நிறுவனமும் 27 ஆண்டு கால LNG எரிவாயு உடன்படிக்கை ஒன்றில் திங்கள் கையொப்பம் இட்டுள்ளன. இந்த உடன்படிக்கையின் மொத்த பெறுமதி சுமார் $60 பில்லியன் ஆக இருக்கும். உலக வரலாற்றில் இதுவே மிக நீண்ட கால LNG உடன்படிக்கை ஆகும். இன்று செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி கட்டார் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் தொன் LNG எரிவாயுவை சீனாவுக்கு 27 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யும். ஞாயிறு கட்டாரில் FIFA […]

பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலைவாசி சுட்டி 2021ம் ஆண்டின் சுட்டியுடன் ஒப்பிடுகையில் 11.1% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 41 ஆண்டுகளின் அதிகரிப்புகளில் மிகவும் அதிகமானது. 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சுட்டி 10.1% ஆல் அதிகரித்து இருந்தது. அண்மையில் பிரித்தானிய அரசு எரிசக்தி விலை ஆண்டுக்கு $2,960 க்கு மேல் செல்ல விடாது தடுத்தது. அவ்வாறு செய்திராவிட்டால் நுகர்வோர் சுட்டி 13.8% ஆக இருந்திருக்கும். சில நுகர்வோர் பொருட்களின் […]

இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

வெள்ளிக்கிழமை IMF அமைப்புக்கு இலங்கை வழங்கிய தரவுகளின்படி ஜூன் மாத முடிவில் இலங்கையிடம் $80.5 பில்லியன் கடன் இருந்துள்ளது. அதில் $46.6 பில்லியன் அந்நிய நாடுகளில் இருந்து பெற்ற கடன் என்றும், சுமார் $34.0 பில்லியன் உள்ளூரில் பெற்ற கடன் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்படி $80.5 பில்லியன் கடன் இலங்கை GDP யின் 121.6% ஆகும். வெளிநாட்டு கடனில் $37.9 பில்லியன் அரசின் கடனாகவும், $5.5 பில்லியன் State-owned Enterprise (SOE) கொண்ட கடனாகவும், $3.2 பில்லியன் […]

மோதியின் ஆதரவுடன் அடானி உலகின் 3ம் செல்வந்தர்

மோதியின் ஆதரவுடன் அடானி உலகின் 3ம் செல்வந்தர்

Bloomberg Billionaires Index கணிப்புப்படி இந்திய வர்த்தகரான அடானி (Gautam Adani) தற்போது உலகின் 3வது பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார். மிக குறுகிய காலத்தில் அடானி பெருமளவு செல்வத்தை சேகரிக்க அவர் கொண்டிருந்த இந்திய பிரதமர் மோதியின் நெருக்கம் பிரதான காரணம். 2022ம் ஆண்டின் முதல் அரை ஆண்டு காலத்தில் மட்டும் அடானி $60 பில்லியன் மேலதிக சொத்தை பெற்றுள்ளார். அடானியிடம் தற்போது சுமார் $137 பில்லியன் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை செல்வந்தரின் பெருமளவு சொத்துக்கள் […]