Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனம், SpaceX என்ற விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை ஆரம்பித்த இலான் மஸ்க்கின் (Elon Musk) மொத்த வெகுமதி $1.11 டிரில்லியன் ($1,110 பில்லியன்) ஆகியுள்ளது. இதனால் இலான் மஸ்க் உலகின் முதலாவது டிரில்லியன் வெகுமதி கொண்டவர் ஆகிறார். இவரின் வெகுமதி வங்கியில் உள்ளது போன்று திடமான பணமல்ல. பங்கு சந்தையின் வெகுமதி திடீரென பெருமளவில் கூடலாம், குறையலாம். 2020ம் ஆண்டு $28 பில்லியன் வெகுமதியை மட்டும் கொண்டிருந்த மஸ்க் உலகின் 35 […]
இன்று வெள்ளிக்கிழமை முதல் இலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு அமெரிக்காவின் NASDAQ பங்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. IPO (Initial Public Offering) கொள்வனவாளருக்கு மட்டும் 556 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்று $135 ஆக விற்பனை செய்து $75 பில்லியனை SpaceX பெற்றுள்ளதும் (556 மில்லியன் பங்குகள் X $135/பங்கு = $75 பில்லியன்). பங்கு சந்தை வரலாற்றில் இதுவே மிக பெரிய தொகையாகும். இதற்கு முன் சவுதியின் Aramco நிறுவனம் 2019ம் ஆண்டு […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் கண்மூடித்தனமாக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்ய Amazon, Costco போன்ற அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவங்களின் CEOகள் பயந்து நடுங்க, VOS Selection என்ற wine இறக்குமதி செய்யும் சிறிய குடும்ப நிறுவனத்தின் CEO Victor Schwartz ரம்பை நீதிமன்றம் இழுத்து வென்றுள்ளார். 2025ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி Liberty Justice Center என்ற தொண்டர் சட்டத்தரணிகள் அமைப்பின் உதவியுடன் தாக்கல் செய்த VOS Selection, Inc. v. Trump என்ற வழக்கே வெள்ளிக்கிழமை ரம்பின் வரிகளை […]
அமெரிக்க பங்குச்சந்தை சட்டங்களை கண்காணிக்கும் Securities and Exchange Commission (SEC) இந்திய கௌதம் அதானி மீதும், அவரின் உறவினரான சாகர் அதானி மீதும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணையை ஆரம்பித்து உள்ளது. ஆனால் அவர்களுக்கான SECகின் அழைப்பாணைகளை இந்திய மோதி அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் SEC அழைப்பாணைகளை நேரடியாக email மூலம் இருவருக்கும் அனுப்ப நியூ யார்க் நீதிமன்றை கேட்டுள்ளது. அதனால் அதானி உரிமை கொண்ட 10 நிறுவனங்களும் பங்குச்சந்தை பெறுமதியில் மொத்தம் $12.5 பில்லியனை ஒரே […]
கடந்த ஆண்டுக்கான (2025) சீனாவின் மொத்த surplus (மொத்த ஏற்றுமதி – மொத்த இறக்குமதி) $1.2 ட்ரில்லியன் (அல்லது $1,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. இத்தொகை 2024ம் ஆண்டின் surplus இலும் 20% அதிகம். அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன பொருட்கள் மீது பெரும் இறக்குமதி வரியை திணித்து இருந்தாலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கே சீனா அதிக பொருட்களை ஏற்றுமதி செய்து இருந்தாலும் அத்தொகை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு 19.5% ஆல் […]
2025ம் ஆண்டில் சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனம் 2.26 மில்லியன் கார்களை உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் Tesla என்ற கார் நிறுவனம் 2025ம் ஆண்டு 1.64 மில்லியன் கார்களை மட்டுமே உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது. 2024ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு Tesla விற்பனை தொகை 9% ஆல் குறைந்து உள்ளது. இரண்டாவது ஆண்டாக Tesla வின் உலக அளவிலான விற்பனை தொகை குறைந்து உள்ளது. […]
சீன விமான சேவைகள் சில ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus விமானங்கள் 145 ஐ கொள்வனவு செய்ய முன்வந்துள்ளன. சீனாவின் இந்த பெரிய Airbus கொள்வனவு அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய ஏமாற்றமாகும். வழமையாக சீனா அரை பங்கு விமானங்களை Airbus சிடம் இருந்தும், அரை பங்கு விமானங்களை அமெரிக்க Boeing கிடம் இருந்தும் கொள்வனவு செய்யும். ஆனால் இம்முறை அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் வரி மோதலில் ஈடுபடுவதே சீனா Boeing விமானங்கள் எதையும் கொள்வனவு செய்யாமைக்கான […]
சுமார் 35 ஆண்டுகள் நிதானமான விலையை கொண்டிருந்த சாக்லேட் (chocolate) கடந்த சுமார் ஒரு ஆண்டு காலமாக பல மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சாக்லேட் தரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை முன்னரிலும் 200% முதல் 500% வரை அதிகமாக இருந்தது, தற்போதும் அவ்வாறே உள்ளது. ஆனால் உலக சந்தையில் சாக்லேட் விலை விரைவில் குறைய உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சாக்லேட்டின் மூலப்பொருளான கொக்கோ பவுடரின் (cocoa) விலை மிகையாக அதிகரித்ததே சாக்லேட் விலை அதிகரிக்க காரணம். 2024ம் ஆண்டு டிசம்பர் […]
சீனாவின் இந்த ஆண்டுக்கான surplus (மொத்த இறக்குமதிக்கு மேலான ஏற்றுமதி டாலர் பெறுமதி) வரலாற்றில் முதல் தடவையாக $1 டிரில்லியனை ($1,080 பில்லியன்) தாண்டி உள்ளது. சீன பொருட்கள் மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் கடுமையான இறக்குமதி வரிகளுக்கும் மத்தியில் சீன ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இந்த $1.08 பில்லியன் surplus நவம்பர் வரையான முதல் 11 மதங்களின் தொகை மட்டுமே. ஆண்டு இறுதியில், டிசம்பர் மாத தொகையுடன் கூடிய, surplus மேலும் அதிகரிக்கும். 2024ம் ஆண்டின் (12 […]
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான 10 மாதங்களில் இலங்கை $14 பில்லியன் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்கிறது Export Development Board (EDB). இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் 10 மாதங்களுக்கான அதிக ஏற்றுமதி வருமானம். இந்த ஆண்டின் 12 மாதங்களுக்கான மொத்த ஏற்றுமதி குறி $18 பில்லியன். கடந்த ஆண்டின் முதல் 10 மாத கால பகுதியின் ஏற்றுமதியிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 6% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த ஏற்றுமதியுள் சாதாரண […]