Butch Wilmore, Suni Williams ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் Boeing நிறுவனம் தயாரித்த Starliner என்ற விண்கலத்தில் ஜூன் மாதம் 5ம் திகதி ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வுகூடம் சென்று இருந்தனர். Starliner விண்கலம் பயணிகளுடன் விண்ணுக்கு பயணித்தது இதுவே முதல் தடவை. சுமார் 2 கிழமைகளில் பூமிக்கு திரும்ப இருந்த இவர்கள் 2 மாதங்கள் ஆகியும் பூமிக்கு திரும்பவில்லை. காரணம் இவர்களை காவி சென்ற Starliner விண்ணில் பழுதடைந்து உள்ளது. Boeing விஞ்ஞானிகளும், […]
சீனா தனது Change-5 என்ற விண்கலம் மூலம் சந்திரனின் மறு பக்கத்தில் இருந்து எடுத்து வந்த நில மாதிரியில் நீர் மூலக்கூறுகள் இருப்பது ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. அங்கு நீர் H2O அமைப்பில் இருந்துள்ளது. சீனா அகழ்ந்த மாதிரியில் முன்னர் அறியப்படாத கனியம் ஒன்று இருந்துள்ளது. ULM-1 என்ற பெயர் கொண்ட இந்த கனியம் (NH4)MgCl3.6H2O என்ற இரசாயண அமைப்பை கொண்டது. முன்னர் அமெரிக்கா, ரஷ்யா எடுத்த சந்திர மாதிரிகளில் நீர் மூலக்கூறு இருந்திருக்கவில்லை. சந்திரனின் மத்திய கோட்டு பகுதியில் […]
சீனாவின் Chang’e 6 என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பத்திரமாக சீன நேரப்படி ஞாயிறு காலை தரையிறங்கி உள்ளது. இந்த கலம் அங்கிருந்து 4 kg சந்திர நிலத்தின் மாதிரியை பூமிக்கு எடுத்துவரும். இதுவே இதுவரை மனிதன் செலுத்திய சந்திர கலங்களில் மிகவும் நுணுக்கமானது. சந்திரனின் மறுபக்கத்தில் சீனா தரையிறங்குவது இது இரண்டாவது தடவை. 2019ம் ஆண்டு சீனாவின் Chang’e 4 கலம் பத்திரமாக தரை இறங்கி இருந்தது. 2030ம் ஆண்டு சீனா சந்திரனில் சீன விண்வெளி வீரரை தரையிறக்க […]
வரும் ஏப்ரல் 8ம் திகதி வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம் இடம்பெறும். இந்த கிரகணம் சில இடங்களில் 4 நிமிடங்கள் 28 செக்கன்களுக்கு இருளை பரப்பும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் தென் மேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு நோக்கி இந்த கிரகணம் நகரும். அதனால் இது Mazatlan (Mexico); 4m 14s, Dallas; 3m 47s, Little Rock; 2m 33s, Indianapolis; 3m 46s, Cleveland; 3m […]
பிரித்தானியாவின் Jurassic Coast கடலோரம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான pliosaur என்ற வகை கடல் வாழ் விலங்கின் தலை எச்சம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலை 2 மீட்டர் நீளம் கொண்டது. அதனால் இந்த கடல் வாழ் உயிரினத்தின் மொத்த நீளம் 10 முதல் 12 மீட்டராக இருந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதன் மிகுதி உடல் அவ்விடத்தில் காணப்படவில்லை. இதற்கு 130 பற்கள் உண்டு. இதன் கடிக்கும் பலம் 33,000 N (newtons) என்றும் […]
ChatGPT புதியதொரு AI (Artificial Intelligence) தொழில்நுட்பம். இது ஆங்கிலம் போன்ற பிரதான மொழிகளில் ஓரளவு தரமான ஆக்கங்களை உருவாக்கினாலும், தமிழ் போன்ற சில மொழிகளில் அல்லல்படுகிறது. தமிழ் மொழியில் உள்ள சிக்கலான அங்கங்களும் நிலைமையை மேலும் குழப்பியடிக்கின்றன. பெயர் சொற்களில் உள்ள பால் அடையாளம் (வந்தான், வந்தாள், வந்தது), ஒருமை, பன்மை (வந்தார்கள், வந்தன) மட்டுமன்றி ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய உருபுகளும் கூடவே ChatGPT யை குழப்புகின்றன. அவரால், அவரோடு ஆகிய பாதங்களை ChatGPT இலகுவில் அறிய முடியாது உள்ளது. இப்படி […]
சில தினங்களுக்கு முன் மொராக்கோவில் 6.8 அளவில் நிலநடுக்கம் இடம்பெற்றது. அப்போது வானத்திலும் பிரகாசமான ஒளி இடம்பெற்றுள்ளது. இதை நில நடுக்க ஒளி (earthquake light) என்கின்றனர். விஞ்ஞானம் இந்த ஒளிக்கான காரணத்தை திடமாக கூறவில்லை. பதிலுக்கு சில அனுமானங்களையே முன்வைத்துள்ளது. மொராக்கோவில் மட்டுமன்றி முன்னரும் பல நில நடுக்கங்கள் வானத்தில் நில நடுக்க ஒளியை கொண்டிருந்தன. தற்போது மக்களின் தொலைபேசிகளில் வீடியோ வசதிகள் உள்ளதால் இவ்வகை ஒளி ஆதாரங்கள் கிடைக்கின்றன. 2007ம் ஆண்டு Pisco என்ற […]
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியா ஆதித்தயா (Aditya-L1) என்ற கலத்தை இன்று சனிக்கிழமை ஏவியுள்ளது. சூரியன் பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் km தூரத்தில் உள்ளது. ஆனால் ஆதித்தயா சுமார் 1.5 மில்லியன் தூரம் சென்று Lagrange Point என்ற இடத்தில் நிலைகொண்டு ஆய்வுகளை செய்யும். Lagrange Point என்ற புள்ளியில் பூமி, சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசைகள் ஏறக்குறைய சமனாக உள்ளன. அதனால் ஏவப்படும் கலங்கள் நீண்டகாலம் இழுபட்டு செல்லாது நிலைகொள்ளும். இந்த […]
ரஷ்யா அண்மையில் சந்திரனுக்கு செலுத்திய Luna-25 என்ற விண்கலம் சந்திரனில் பத்திரமாக இறங்காது விழுந்து மோதியுள்ளது. சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா தனது கலத்தை சந்திரனில் இறக்க முயல்வது இதுவே முதல் தடவை. இந்த தரை இறங்கும் கலம் 800 kg எடை கொண்டது. இந்த கலம் சந்திரனின் தென் துருவத்தில் இறங்க முனைந்தது. தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் பாதுகாப்பாக இறங்கவில்லை. அமெரிக்காவும், சீனாவும் வேறு பகுதிகளில் பாதுகாப்பாக இறங்கி இருந்தன. இந்த […]
இன்று வெள்ளி, 47 ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா சந்திரனில் தரை இறங்க கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் இறங்க உள்ள இந்த கலம் அங்கு நீர் உள்ளதா என அறியும். ஒரு கார் அளவிலான Luna-25 என்ற கலத்தை Soyuz 2.1v என்ற ஏவுகணை காவி செல்கிறது. இது ஆகஸ்ட் 21ம் திகதி சந்திரனில் இறங்கவுள்ளது. இது ஒரு ஆண்டு காலம் அங்கிருந்து ஆய்வுகளை செய்யும். 1976ம் ஆண்டுக்கு பின் இதுவே ரஷ்யாவின் முதல் […]