ரஷ்யாவில் விழுந்த விண்கல் நிறை 570 kg

இந்த வருடம் மாசி மாதம் பெரியதோர் விண்கல் ரஷ்யாவின் Chelyabinsk என்ற நகரின் அண்மையில் வீழ்ந்திருந்தது.இன்று புதன்கிழமை அந்த கல்லை Chebarkul வாவிக்கு அடியில் இருந்து மீட்டுள்ளனர். இந்த கல் வீழ்ந்தபோது பனிப்பாறை படர்ந்த வாவியின் மேற்பரப்பில் 20 அடி துளையை ஏற்படுத்தி இருந்தாலும் சுமார் 40 அடி ஆழத்தில் 8 அடி சதுப்புக்குள் புதைத்திருந்த இந்த கல்லை கண்டுபிடித்து எடுக்க 7 மாதங்கள் வரை எடுத்துள்ளது. இதை வாவிக்கு வெளியே எடுக்கும்போது 3 துண்ட்டுகளாக உடைந்துள்ளது. […]

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்கல் 2012 DA14

வரும் வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15 ஆம் திகதி) 2012 DA14 என்ற விண்கல் பூமிக்கு மிக அண்மையில் செல்லவுள்ளது. இந்த கல்லின் பாதை வழமையாக செய்மதிகள் சுற்றிவரும் பாதையை ஊடறுத்து செல்கிறது. ஆனாலும் இந்த கல்லால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் நிகழ மாட்டாது என NASA அறிவித்துள்ளது. மெரும்பாலான செய்மதிகள் பூமியில் இருந்து சுமார் 35,000 km உயரத்தில் சுற்றும். இந்த விண்கல் அந்த தூரத்திலேயே ஊடறுத்து செல்லும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் சுமார் 385,000 km. இந்த […]

Cell Phone OS யுத்தம்

இந்த மாதம் 30ஆம் திகதி முதல் Research in Motion ஒரு புதிய OS ஐ பயன்படுத்த தொடங்கவுள்ளது. இதன் பெயர் QNX. QNX கனடாவில் 1982 ஆம் ஆண்டு Quantum Software System என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதை Research in Motion கொள்வனவு செய்திருந்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி சந்தைக்கு வரும் BB10 என்ற cell phone இந்த OS ஐயே கொண்டிருக்கும். QNX இன் வரவு OS போட்டியை உக்கிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1 5 6 7