சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

Tiangong-1 என்ற சீனாவின் விண் ஆய்வுகூடம் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாணில் இருந்து விழும் என்று கூறப்படுகிறது. இந்த விண் ஆய்வுக்கூடம் வளிமண்டலத்தில் நுழைந்த பின்பே விழும் நேரத்தையும், இடத்தையும் குறிப்பாக கூற முடியும் என்றும் கூறப்படுகிறது. . ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதே விண் ஆய்வு நிலைய அமைப்பில் (International Space Station) சீனா இணைவதை அமெரிக்கா தடுத்தபோது, […]

அமெரிக்காவின் இரகசிய செய்மதி தொலைவு

நேற்று ஞாயிறு ஏவப்பட்ட Zuma என்ற குறியீட்டு நாமம் கொண்ட அமெரிக்காவின் உளவுபார்க்கும் செய்மதி தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்மதியை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் தயாரித்தும், SpaceX என்ற நிறுவனம் ஏவி இருந்திருந்தாலும், இந்த செய்மதியை வடிவமைத்த குழுவின் அல்லது நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. . இந்த செய்மதிக்கான மொத்த செலவும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், அச்செலவு பல பில்லியன் டாலர் ஆகவிருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. . Florida மாநிலத்தில் […]

உதிர வியர்வை?

ஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா? அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]

3ம்-4ம் நூற்றாண்டு இந்திய சுவடியில் பூச்சியம்

தற்கால கணிதத்தில் மிகமுக்கிய பாகம் தான குறிப்பீடு (place value) ஆகும். அந்த தானத்தை மெருகூட்ட தோன்றியது பூச்சிய குறியீடு. இந்த இரண்டையும் கொண்டதாலேயே இன்று நடைமுறையில் இருக்கும் கணித முறைமை உலகத்தில் இருந்த மற்றைய எல்லா கணித முறைமைகளையும் பின்தள்ளி முன்வந்தது. . இந்த தான குறிப்பீடும், பூச்சிய குறியீடும் எந்த கலாச்சாரத்தில் இருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க விஞ்ஞானம் தன்னால் முடிந்ததை செய்கிறது. . இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் […]

தியானம் மனிதனை அமைதிப்படுத்துகிறது, கூறுவது விஞ்ஞானம்

இன்று Washington Post பத்திரிக்கையில் Sara Lazar என்ற நரம்பியல் வைத்தியர் ஒருவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியானத்துக்கும் தற்போதைய விஞ்ஞான விளக்கங்களுக்கும் முடிச்சு போட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிபுகளின்படி தியானம் மனித மூளையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்நபரை அமைதி கொள்ள வைக்கிறதாம். . Sala Lazar தற்போது Massachusetts General Hospital மற்றும் Harvard Medical School களில் நரம்பியல் வைத்தியராக கடமை புரிபவர். இவர் Boston marathon ஓட்டப்போட்டிக்கு தன்னை தயார் […]

June 30 இல் மேலுமொரு Leap second

ஒரு நாள் 24 மணித்தியாலங்களை (86400 seconds) கொண்டது என்றே நாம் அறிவோம். அத்துடன் அந்த கணிப்பு எமது அன்றாட வாழ்வுக்கும் போதுமான கணியம். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றுக்கு ஒன்று சமமானது அல்ல. ஒரு 100 வருடத்துக்கு முந்திய நாள் ஒன்றைவிட இன்றைய நாள் ஒன்று சுமார் 1.7 மில்லி seconds அதிகமானதே. அதற்கு காரணம் பூமி தன்னை தானே சுற்றும் வேகம் படிப்படியாக குறைந்து வருவதே. . ஆனால் நாம் இன்று பாவனை செய்யும் […]

VoLTE, அடுத்த வகை தொலைபேசி நுட்பம்

முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல் தொடரும் வரை இணைக்கப்பட்டு இருந்தன. முதலில் இந்த இணைப்பு வேலைகளை மனித இணைப்பாளர்களே செய்து வந்திருந்தனர். பின்னர் தொழில் நுட்பம் நிறைந்த இலத்திரனியல் உபகரணங்கள் இந்த இணைப்புக்களை இணைத்து வந்தன. இணைப்பை மனிதன் இணைந்தால் […]

நாசாவின் Orion பரீட்சை வெற்றிகரம்

அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே. . மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் பயணித்த இந்த கலம் இரண்டு தடவைகள் பூமியை வலம் வந்து இருந்தது. இது முதல் சுற்றில் 270 km உயரத்திலும் இரண்டாம் சுற்றில் 5794 km உயரத்திலும் பயணித்து இருந்தது. தற்போது உலகை […]

யுத்த விமானம் Joint Strike Fighter F-35

F-35 அல்லது Joint Strike Fighter என்று அழைக்கப்படும் யுத்த விமானம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பல மேற்கு நாட்டு படைகளுக்கு பலம் ஊட்டப்போகும் அடுத்த சந்ததி யுத்த விமானம். தரைப்படைக்கு ஒருவகை யுத்தவிமானம், வான் படைக்கு இன்னொரு வகை விமானம், கடல் படைக்கு (aircraft carrier) பிறிதொரு விமானம் என்றெல்லாம் இல்லது எதிர்வரும் காலத்தில் முப்படைகளும் இந்த F-35 என்ற ஒருவகை விமானத்தை, சில சிறிய மாற்றங்களுடன், மட்டுமே கொண்டிருக்கும். தொழில்நுட்ப்பத்தில் மிகையான […]

புதிதாக தோன்றிவரும் Snoopy தீவு

ஜப்பானின் தெற்கே சும்மார் 1000 km தூரத்தில் புதிதாக ஒரு தீவு தோன்றிவருகிறது. எரிமலை (Volcanic) நிகழ்வுகள் அதிகம் காணப்படும் ஜப்பானுக்கும் தெற்கே உள்ள Bonin தீவுகள் பகுதியிலேயே இந்த புதிய தீவு தோன்றுகிறது. இந்த புதிய தீவுக்கு Niijima தீவு என்று பெயரிடப்பட்டாலும் இந்த புதிய தீவு ஏற்கனவே தோன்றியுள்ள Nishino-shima தீவுக்கு அண்மையில் தோன்றி, இரண்டு தீவுகளும் சேர்ந்து Snoopy என்ற பிரபல cartoon நாய்க்குட்டியை ஒத்துள்ளதால் பலரும் இதை Snoopy தீவு என […]