இன்று தங்கத்தின் விலை முதல் தடவையாக $5,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் செய்யும் பொருளாதார மற்றும் இராணுவ நகர்வுகள் காரணமாக செல்வந்தரும், செல்வந்த நாடுகளும் தமது சேமிப்புகளை தங்கத்தில் பதுக்க முனைவதாலேயே தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. தனது சேமிப்பை பாதுகாக்க சீனா கடந்த 14 மாதங்களாக தங்கத்தை பெருமளவில் கொள்வனவு செய்து வருகிறது. 2025ம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் பெறுமதி 64% வீதத்தால் அதிகரித்து உள்ளது. முன்னர் இவ்வகை அதிகரிப்புக்கு பல சந்ததிகள் தேவைப்படும். நம்பகத்தன்மையை […]
கனடிய பிரதமர் கார்னி அண்மையில் சீனா சென்று சீன சனாதிபதியுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கையை நடைமுறை செய்தால் அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% இறக்குமதி வரி நடைமுறை செய்யவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி சனி மிரட்டி உள்ளார். ரம்ப் இவ்வாறு பல வரி மிரட்டல்களை கனடா மீது வீசினாலும் அவை எல்லாம் நடைமுறை செய்யப்படவில்லை. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடைமுறையில் உள்ள NAFTA வர்த்தக உடன்படிக்கை முதன்மை பெறுகிறது. ஆனால் NAFTA (அல்லது CUSMA) இந்த ஆண்டு […]
இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் மிகப்பெரிய வர்த்தக உறவு ஒன்று விரைவில அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணக்கம் 27ம் திகதி அறிவிக்கப்படும் வாய்ப்பும் உண்டு. இஸ்லாமிய காழ்ப்பு கொண்ட ரம்ப் மீது இஸ்லாமிய காழ்ப்பு கொண்ட பா.ஜ. வின் உறவு Howdy Modi யில் ஆரம்பித்து Namasthe Trump வரை மட்டுமே சென்றது. பின் ரம்ப் இந்தியாவுக்கு எதிராக திரும்ப, மோதி அரசு ஐரோப்பாவுடன் நெருக்கத்தை நாடியது. நாளை மறுதினம், திங்கட்கிழமை, இந்தியாவில் இடம்பெறவுள்ள Republic Day கொண்டாட்டங்களில் ஐரோப்பிய […]
அமெரிக்க பங்குச்சந்தை சட்டங்களை கண்காணிக்கும் Securities and Exchange Commission (SEC) இந்திய கௌதம் அதானி மீதும், அவரின் உறவினரான சாகர் அதானி மீதும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணையை ஆரம்பித்து உள்ளது. ஆனால் அவர்களுக்கான SECகின் அழைப்பாணைகளை இந்திய மோதி அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் SEC அழைப்பாணைகளை நேரடியாக email மூலம் இருவருக்கும் அனுப்ப நியூ யார்க் நீதிமன்றை கேட்டுள்ளது. அதனால் அதானி உரிமை கொண்ட 10 நிறுவனங்களும் பங்குச்சந்தை பெறுமதியில் மொத்தம் $12.5 பில்லியனை ஒரே […]
நேற்று அமெரிக்க Fox செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்கா யுத்தம் ஒன்றில் ஈடுபட்டால் நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் உதவிக்கு முன்வரா என்றும் நேட்டோ நாடுகளின் படையினர் ஆப்கானித்தானில் முன்னுக்கு நின்று போராடாமல் பின்னுக்கு நின்றதாகவும் அறிவற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளார். “They’ll say they sent some troops to Afghanistan,” என்றும், “and they did, they stayed a little back, a little off the front lines” என்றும் […]
பெரும் பனிப்புயல் (winter storm) ஒன்று வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அமெரிக்காவின் 46 மாநிலங்களை தாக்கவுள்ளது. இந்த புயல் கனடாவின் Toronto, Ottawa, Montreal ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளையும் கடுமையாக தாக்கும். சனிக்கிழமை Minnesota மாநிலத்து Minneapolis நகரில் வெப்பநிலை -23F (-30C) ஆக உணரப்படும். Illinois மாநிலத்து Chicago நகரில் வெப்பநிலை -19F (-28C) ஆக உணரப்படும். Ohio மாநிலத்து Cleveland நகரில் வெப்பநிலை -10F (-23C) ஆக உணரப்படும். பல […]
இந்திய அரசின் கையில் இருந்த Air India விமான சேவையை Tata நிறுவனமும், Singapore Airlines விமான சேவையும் கூட்டாக கொள்வனவு செய்து இயக்கினாலும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் அதன் வர்த்தக ஆண்டில் மொத்தம் $1.6 பில்லியன் நட்டம் அடையவுள்ளது. Air India வரலாற்றில் $1.6 பில்லியன் இழப்பே மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக Air India விமானங்கள் பாகிஸ்தான் மேலால் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பறக்க முடியாது. […]
காசாவில் சமாதானம் அமைத்து அதை அபிவிருத்தி செய்யவென்று அமெரிக்க சனாதிபதி தன் தலைமையில் உருவாக்கும் Board of Peace என்ற அமைப்பை உண்மையில் ஐ.நா. வுக்கு மாற்றீடாக உயர்த்த முனைவது தெரிகிறது. இந்த Board of Peace காசாவில் ஆரம்பித்து இருந்தாலும் இதன் தற்போதைய வரைவிலக்கணத்தில் காசா என்ற சொல்லே இல்லை என்று கூறப்படுகிறது. இதன் புதிய வரைவிலக்கணம் “an international organization that seeks to promote stability, restore dependable and lawful governance, and […]
சீனாவின் மிகப்பெரிய தூதரகம் ஒன்றை லண்டன் நகரில் அமைக்க இன்று செவ்வாய் பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பில் (215,000 சதுர அடி) அமையவுள்ள இது ஐரோப்பாவில் மிகப்பெரிய சீன தூதரகமாக இருக்கும். இந்த தூதரகம் அமைய உள்ள இடம் பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. இந்த தூதரகம் பிரித்தானியாவின் பிரபல Tower Bridge குக்கு அண்மையில் அமையவுள்ளது. இந்த இடம் லண்டன் Financial District க்கு அண்மையில் உள்ளது மட்டுமன்றி, லண்டன் நகரின் பிரதான […]
கடந்த சனிக்கிழமை இலங்கையில் பார்வைக்கு வைக்கப்பட்ட 3,563 கரட் நீல கல்லின் (Purple Star Sapphire) பெறுமதி சுமார் $300 மில்லியன் முதல் $400 மில்லியன் வரை என்று கணிக்கப்படுகிறது. இவ்வகை கற்களில் இந்த கல்லே உலகத்தில் மிக பெரியது. இந்த கல்லுக்கு “Star of Pure Land” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கல் Gemological Institute of America வின் சான்றிதழை பெற்றுள்ளது. நீல கல் நவரத்தினங்களில் ஒன்று இரத்தினமாகும். மேற்படி கல் 2023ம் ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டு […]