கொழும்புக்கு போட்டியாக தமிழ்நாட்டில் துறைமுகம்?

தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள Colachel  என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக அமையலாம். ஆனால் கொழும்பில் இருந்து வாய்ப்புக்களை இந்த புதிய துறைமுகம் பறிக்கும் வல்லமை அற்றதாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொழும்பு வழங்கும் குறைந்த செலவிலான சேவையை தமிழ்நாடு வழங்க முடியாது என்று கூறப்படுகிறது. . இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய நாணயங்கள் 27,000 கோடி வரை தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. […]

அமெரிக்காவில் 11 போலீசாருக்கு சூடு, 5 பலி

  இன்று வியாழன் மாலை அமெரிக்காவின் Texas மாநிலத்து Dallas நகரில் போலீசார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளுக்கு 11 போலீசார் காயமடைந்ததுடன், அதில் 5 போலீசார் மரணம் அடைந்தும் உள்ளனர். போலீசாரை சுட்டவரில் ஒருவரின் படமும் வெளியாகியுள்ளது. . கடந்த இரு தினங்களில் அமெரிக்காவின் Louisianan மாநிலத்து Baton Rouge என்ற நகரிலும், Minneapolis மாநிலத்து Minnesota நகரிலும் இரண்டு கருப்பு இன நடுத்தர வயது ஆண்கள் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த […]

பிரித்தானிய வெளியேற சிறுபான்மை ஆதரவு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது தொடர்ந்தும் அதில் அங்கம் வகிப்பதா என்று அறிய பிரித்தானியரிடம் இன்று நடாத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பு தீர்க்கமான முடிவை வழங்கவில்லை.இறுதியாக கிடைக்கும் எண்ணல்களின்படி, வெளியேற்றத்துக்கு சுமார் 51.5% ஆதரவும், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க 48.5% ஆதரவும் கிடைத்துள்ளது. சுமார் 80% வாக்குகள் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை வெளிவந்த முடிவு பொருளாதார சந்தையில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. . அமெரிக்க டொலரருடன் ஒப்பிடுகையில், பிரித்தானிய நாணயமான பௌண்ட்ஸ் […]

மீண்டும் சீனாவில் உலகின் Supercomputer

ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட TOP500 என்ற அமைப்பு வருடாந்தம் உலக அளவில் முதல் தரமான 500 கணணிகளை அட்டவணைப்படுத்தும். அந்த அட்டவணையில் இந்த வருடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sunway TaihuLight என்ற CPU கொண்ட கணணி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கணணி ஒரு செக்கனில் 1,000,000,000,000,000 (quadrillion) கணிப்புக்களை செய்யக்கூடியது. இதை சீனாவின் National Research Center Engineering & Technology தயாரித்துள்ளது. . இந்த கணனியின் CPU முற்று முழுதாக சீனாவில் design செய்யப்பட்டு தயாரிக்கப்படதாகும். […]

அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

சிரியா விடயத்தில் ரஷ்யா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளது. நேற்று அமெரிக்காவின் 51 அதிகாரிகள் சிரியாவின் அசாத் இராணுவம் மீது அமெரிக்கா தாக்குதல் செய்ய வேண்டும் என்று விடுத்த அறிக்கையின் பின்னரே ரஷ்யா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. . ஒபாமா அரசு அசாத்தின் எதிரிகளுக்கு இராணுவ உதவிகளை செய்தாலும், சிரியா மேலே பறக்கும் அமெரிக்க படைகள் அசாத்தின் படைகளை தாக்குவது இல்லை. பதிலாக IS குழுவினரை மட்டுமே தற்போது தாக்குகின்றன. அதனால் அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் […]

இலங்கை வர்த்தகரின் 750 வைரங்கள் களவு

இலங்கை வர்த்தகரான Mohamed Azan Mohideen Abdul Cader என்பவரிடம், Hong Kong இல் வைத்து, 750 வைரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த வைரங்களின் மொத்த பெறுமதி சுமார் U$773,000 என்று கூறப்படுகிறது. . வைர வியாபாரியான இவர் அமெரிக்காவின் Las Vegas நகரில் இடம்பெற்ற வைர காட்சி ஒன்றுக்கு சென்று, பின் Hong Kong இல் அடுத்த கிழமை இடம்பெறவுள்ள காட்சி ஒன்றில் இவற்றை பார்வைக்கு வைக்கும் நோக்கிலேயே Hong Kong சென்றுள்ளார். வைரங்களை Hong Kong […]

இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் காலமானார்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கிய ஏ. சி. திருலோகச்சந்தர் இன்று தனது 85 ஆவது காலமானார். இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தவர். சில திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாது, அப்படங்களின் கதைகளையும் இவரே எழுதி இருந்தார். . MGR, சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களை இவர் இயக்கி இருந்தார். இவரின் “அன்பே வா” (1966), “ராமு” (1966), “அதே கண்கள்” (1967), “நானும் ஒரு பெண்” (1963) […]

Florida விடுதியில் 50 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Orlando என்ற நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் ஒன்றுக்கு 50 பேர் கொலை செய்யப்பட்டும், 53 காயமடைந்தும் உள்ளனர். கொலையாளி ஆப்கானித்தான் வழிவந்த, 29 வயதுடைய, Omar Mateen என்ற நபர் என்று சில தொலைக்காட்சி நிறுவனங்கள் கூறுகின்றன. . அமெரிக்காவின் பாதுகாப்பு இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகவே கருதுகிறது. தாக்குதல் செய்தவர் “organized and well-prepared” என்கிறார் போலீஸ் தலைவர் John […]

இன்று சந்திரனும் வியாழனும் ஒரே பார்வையில்

இன்று ஜூன் 11 ஆம் திகதி இரவு சுமார் 9:00 மணிமுதல் சந்திரனையும் (Moon) , வியாழனையும் (Jupiter) ஒரே பார்வையில் பார்க்கக்கூடியதாக இருந்தது. இனிவரும் நாட்களிலும் இதை பார்க்ககூடியதாக இருப்பினும், வியாழன் படிப்படியாக அடிவானத்தின் வழியே செல்ல ஆரம்பிக்கும். அதனால் இலகுவில் பார்ப்பது கடினமாகப்போகும். தொலைநோக்கி உதவி இன்றி இதை பார்க்கக்கூடியதாக இருக்கும். . . எமது சூரிய மண்டலத்தில் வியாழனே மிகப்பெரிய கிரகமாகும். பூமியைவிடவும் வியாழன் சூரியனில் இருந்து தொலைவில் இருப்பதால் வியாழன் சூரியனை […]

வீதி விபத்துகளுக்கு இந்தியாவில் 146,133 பலி

இந்தியாவில் இடம்பெறும் வீதி விபத்துகளுக்கு கடந்த வருடம் 146,133 பேர் பலியாகி உள்ளதாக இந்திய போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 400 பேர் வீதி விபத்துகளுக்கு பலியாகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 139,671. . அதேவேளை 2015 இல் காயப்பட்டோர் தொகை 501,423 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் அத்தொகை 489,400 ஆகவும் இருந்துள்ளன. . மரணித்தோரில் 80% தொகையினர் தமிழ் நாடு, மகாராஷ்டிர, மதிய பிரதேசம், கர்நாடகம், […]