இந்த மாத இறுதியில் இந்திய பிரதமர் மோதி சீனா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது 50% இறக்குமதி வரி அறிவித்த நிலையிலேயே மோதி சீனா செல்கிறார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 31ம் திகதிகளில் பெய்ஜிங் நகருக்கு அண்மையில் உள்ள Tianjin என்ற நகரில் இடம்பெறவுள்ள Shanghai Cooperation Organisation (SCO) அமர்வில் மோதி கலந்துகொள்வார். 2020ம் ஆண்டு Galwan என்ற இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவிய […]
இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை அறவிட உள்ளதாக ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி ஆகஸ்ட் 27ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னர் இந்தியாவுக்கான வரி 25% என்று ரம்ப் கூறியிருந்தாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தண்டனையாக மேலும் 25% வரி அறவிடப்படுகிறது. ரம்பின் முதலாம் ஆட்சியில் ரம்ப் பிரதமர் மோதியுடன் மிக நெருக்கமாக பழகி இருந்தார். Texas மாநிலத்தில் இடம்பெற்ற Howdy Modi கூட்டத்தில் […]
ஜப்பானின் சனத்தொகை கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2024ம் ஆண்டின் சனத்தொகை 2023ம் ஆண்டின் சனத்தொகையிலும் 908,574 (0.75%) ஆல் குறைந்து உள்ளது என்கிறது புதன்கிழமை அரசு வெளியிட்ட அறிக்கை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அங்கு 120,653,227 ஜப்பானியர் இருந்துள்ளனர். அங்கு வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையையும் உள்ளடக்கிய சனத்தொகை 124,330,690 ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டு 687,689 ஜப்பானிய குழந்தைகள் பிறந்து உள்ளனர். இத்தொகை முன்னைய ஆண்டிலும் 41,678 குறைவு. அங்கு ஜப்பானியர் தொகை குறைந்து சென்றாலும், […]
ரம்ப் அரசு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் சிலரிட $5,000, $10,000 அல்லது $15,000 பிணை பணம் அறவிட உள்ளது. திங்கள் அறிவிக்கப்பட்ட இந்த பரிசோதனை திட்டம் (pilot program) ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பமாகி 1 ஆண்டு காலம் நீடிக்கும். பொதுவாக விசாவில் அமெரிக்கா சென்று அந்த விசா முடிவதற்கு முன் தமது நாடுகளுக்கு திரும்பாதோரை அதிகம் கொண்ட நாட்டவரையே இந்த மேலதிக சுமை அதிகம் பாதிக்கும். ரம்ப் அரசின் கொடுபிடிகள் காரணமாக அமெரிக்கா செல்வோர் […]
ஞாயிறு அஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Sydney Harbour Bridge என்ற பாலத்தின் ஊடு பலஸ்தீனர் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. ஊர்வல ஏற்பாட்டாளர் 10,000 பேரையே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கலந்துகொண்டோர் தொகை 90,000 என்கிறது போலீசாரின் கணிப்பு. இந்த ஊர்வலத்தை தடை செய்ய முயற்சிகள் இடம்பெற்று இருந்தாலும் முதல் நாளான சனிக்கிழமையே Supreme Court அனுமதி வழங்கி இருந்தது. WikiLeaks Julian Assange போன்ற சில பிரபலங்களும் கூடவே பங்கெடுத்து இருந்தன. ஊர்வலம் ஆரம்பித்து 2 […]
இந்திய பிரதமர் மோதியின் அரசு உலக அரங்கில் நடைமுறைக்கு மிக கடினமான ஒரு செயலை செய்ய முனைகிறது. பரம எதிரிகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் ஒரே நேரம் நட்பு நாடாக இருக்க முனைவதே அச்செயல். மோதியின் இந்த முனைவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்து உள்ளார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். யூக்கிறேன் யுத்தம் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா கொள்வனவு செய்யக்கூடாது என்கிறார் ரம்ப். ஆனால் இந்தியா ரஷ்யாவை பகைக்க விரும்பவில்லை. ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்தியா […]
வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் Bureau of Labor Statistics (BLS) ஜூலை மாதம் அமெரிக்கா 73,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இத்தொகை எதிர்பார்த்த தொகையிலும் மிக குறைவு. தனக்கு பெருமை தராத தரவு அறிவிக்கப்பட்டமையால் மூர்க்கம் கொண்ட ரம்ப் Dr. Erika McEntarfer என்ற BLS ஆணையாளரின் (commissioner) பதவியை பறித்துள்ளார். BLS ஆணையாளர் தனக்கு எதிரான பொய் தரவை வெளியிட்டு உள்ளதாக ரம்ப் ஆதாரம் இன்றி கூறியுள்ளார். ஜூலை வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி மே, ஜூன் […]
நீச்சல் உலகை கலக்கி வருகிறார் சீன நீச்சல் வீராங்கனையான 12 வயது Yu Zidi. வியாழக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற 2025 World Aquatic Championship போட்டியில் Yu Zidi யின் 4×200 மீட்டர் freestyle relay அணி பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. Yu Zidi இறுதி போட்டியில் நீந்தவில்லை என்றாலும் இவரின் அணி இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த போட்டியில் நீந்தியவர் என்பதால் இவருக்கும் பதக்கம் உண்டு. இந்த பதக்கம் மூலம் இவர் அதி குறைந்த வயதில் மேற்படி […]
இதுவரை 25% ஆக கூறப்பட்ட, NAFTA வுள் அடங்காத கனடிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க சனாதிபதி 35% ஆக அதிகரிப்பதாக வியாழன் கூறியுள்ளார். இந்த புதிய வரி ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். கனடா வரி பேச்சுக்களில் விரைவாக இயங்காமையும், கனடிய பிரதமர் செப்டம்பர் மாதம் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ள அறிவித்தமையுமே ரம்பின் மேற்படி மூர்க்கத்துக்கு காரணம். அத்துடன் கனடா மூலம் அமெரிக்காவுக்கு fentanyl என்ற போதை வருவதாக ரம்ப் பொய்யான குற்றமும் சுமத்தி […]
அமெரிக்காவில் சனாதிபதி ரம்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ரம்பின் பொருளாதார மற்றும் குடிவரவு கொள்கைகள் பெருமளவில் அமெரிக்கரால் மறுக்கப்பட்டுள்ளன. ரம்புக்கான ஆதரவு தற்போது 40% ஆக உள்ளது. இது ரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அவருக்கு கிடைக்கும் மிக குறைந்த ஆதரவு. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி தற்போது காங்கிரசில் கொண்டுள்ள பெரும்பான்மை Democratic கட்சி கைக்கு மாறலாம். அந்நிலை வந்தால் ரம்ப் தான் விரும்பியதை செய்ய […]