சூறாவளி (Hurricane) Joaquin அமெரிக்காவின் கிழக்கு பகுதிக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூறாவளியின் மையம் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் தரை தட்டலாம் என்று எதிர்பார்த்து இருந்தாலும் அதன் மையம் கடல் வழியே செல்கிறது. ஆனாலும் அதன் தாக்கம் அமெரிக்காவின் கிழக்கே பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக South Carolina மாநிலத்தில் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள், வர்த்தகங்கள், சாலைகள் என்பன நீருள் மூழ்கியுள்ளன. இந்த மாநிலத்தின் ஊடாக செல்லும் I-95 பெரும்சாலையின் […]
கடந்த 28 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் (Kunduz) நகரை அரசபடைகளை விரட்டியபின் தலிபான் கைப்பற்றி இருந்தது. சில நாட்களுள் அந்நகரை, அமெரிக்க விமானப்படை உதவியுடன், ஆப்கானிஸ்தான் படைகள் மீண்டும் கைப்பற்றி இருந்தன. ஆனால் அங்கு மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்திருந்தன. . உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் போட்ட குண்டுகள் Doctors Without Borders குண்டூஸ் நகரில் நாட்டத்தி வந்த வைத்தியசாலை ஒன்றில் வீழ்ந்ததால் 19 பேர் […]
அமெரிக்காவின் Oregon மாநிலத்தில் உள்ள Roseburg என்ற நகரில் உள்ள Umpqua Community Collegeஇல் இன்று இடம்பெற்ற படுகொலை ஒன்றுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறான படுகொலைகள் அமெரிக்காவில் நடக்கும் ஒன்று. அமெரிக்கா போன்ற சில நாடுகளிலேயே தனியார் துப்பாக்கிகள் கொள்வனவு செய்யவும், அவ்வகை ஆயுதங்களை எடுத்து செல்லவும் உரிமை உண்டு. இந்த உரிமை அமெரிக்காவின் constitutional இல் உள்ள second amendment இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. . August 26 ஆம் திகதி Virginia மாநிலத்தில் […]
சிரியாவில் இருந்து வந்தது அசாட் தலைமயிலான ஓர் சர்வாதிகார ஆட்சி. இது ஒரு சர்வாதிகார ஆட்சி என்றாலும், மேற்கு உறவாடும் மற்றைய மதிய கிழக்கு சர்வாதிகாரங்களையும் விட மக்களுக்கு சற்று அதிகம் சுதந்திரம் வழங்கிய நாடு. ஆனால் சிரியா (அத்துடன் ஈரானும்) இஸ்ரவேலுக்கு கட்டுபடாத நாடுகள். அதனால் அங்கு ஓர் பொம்மை ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியது மேற்கு. . மேற்கின் ஆதரவில் உருவானது ஒரு ஆயுத குழு. மேற்கு பணம், ஆயுதம், பயிற்சி வழங்கி வளர்த்தது […]
அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளும், அவர்களுடன் கூடிய சவுதி போன்ற மத்தியகிழக்கு நாடுகளும் சிரியாவின் தலைவர் அசாட் (Assad) அரசை கவிழ்த்து தமது பொம்மை அரசை அமைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, பக்க விளைவாக IS என்ற தீவிரவாத இஸ்லாமிய குழு பலம் கொண்டது. IS தனது பலத்தை ஈராக்குள்ளும் செலுத்த ஈராக் ஈரானின் உதவியை நாடியது. இப்போது ரஷ்யாவும் களத்தில் குதித்துள்ளது. இதனால் சண்டையை ஆரம்பித்த நாடுகள் பின்தள்ளப்பட்டுள்ளன, . ஒரு மாதத்தின் முன் […]
சவுதி அரேபியாவில் ஹஜ் (hajj) யாத்திரிகர் 717 பேர் நெரிசல் காரணமாக பலியானதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் Meccaவுக்கு அருகில் உள்ள Mina என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. . இதுபற்றி கருத்து தெரிவித்த சவுதியின் சுகாதார அமைச்சர், ஆபிரிக்காவில் இருந்து வந்த யாத்திரிகர் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமையே இந்த சம்பவத்துக்கு காரணம் என்றுள்ளார். . ஒரு கிழமைக்கு முன் இங்கு ஒரு பாரம் தூக்கி விழுந்ததால் 107 பேர் பலியாகி இருந்தனர். . […]
Daraprim என்ற மருந்து அமெரிக்காவில் கடந்த 62 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை Turing Pharmaceuticals என்ற பிறிதொரு நிறுவனம் கடந்த மாதம் கொள்வனவு செய்திருந்தது. கடந்த மாதத்தில் $13.50 இக்கு விற்பனை செய்யப்பட்ட குளிசை ஒன்றின் விலையை புதிய நிறுவனம் $750 ஆக உயர்த்தி உள்ளது. . Cycloserine என்ற மருந்தின் விலையும் இவ்வாறே அதிகரித்துள்ளது. Rodelis Therapeutics என்ற நிறுவனம் இந்த மருந்து உற்பத்தி செய்யும் உரிமையை […]
ரஷ்யாவின் மேற்கே உள்ள பேலருஸ் (Belarus) நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ரஷ்யாவின் தலைவர் பூட்டின் (Putin) ஈடுபட்டு உள்ளார். பேலருஸ் முன்னாளில் USSR இன் ஒரு பாகமாக இருந்திருந்தாலும் தற்போது அது ஒரு நாடு. பூட்டினின் இந்த நகர்வால் விசனம் அடைந்துள்ளது அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள். . ரஷ்யா இவ்வாறு அமைக்கபடும் புதிய விமானப்படை தளத்தில் தனது அதிநவீன SU-27 வகை யுத்த விமானங்களை நிலைகொள்ள விரும்புகிறது. சுமார் 3,530 […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Los Angeles நகரத்தில் இருந்து நெவாட (Nevada) மாநிலத்தில் உள்ள Las Vegas நகரம் வரை அதிவேக ரயில் பாதை ஒன்றை அமைக்கும் பணியை சீன நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது சீனாவால் அமரிக்காவில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய வர்த்தக வேலைப்பாடு ஆகும். சீனாவின் China Railway International நிறுவனமும் அமெரிக்காவின் XpressWest நிறுவனமும் இணைந்து இப்பாதையை அமைக்கவுள்ளன. . இந்த புதிய பாதை 370 km நீளம் கொண்டதாக இருக்கும். இதன் […]
தென் அமெரிக்காவில் உள்ள சிலே (Chile) நாட்டின் Illapel என்ற நகரில் இருந்து 55 km மேற்கேயான கடலில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி 7:54 மணிக்கு (22:54 GMT) 8.5 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்று உள்ளது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி இன்று 11:00 என்றும் கூறப்பட்டுள்ளது. . அதேவேளை அமெரிக்காவும் கலிபோர்னியா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. . சிலே நாட்டின் […]