இலங்கைக்கு புதிய Marines, அமெரிக்கா பயிற்சி

இலங்கைக்கு புதிதாக Marines படை (Marines Corps) அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய படைக்கு அமெரிக்காவின் Marines பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த புதிய படை 7 அதிகாரிகளையும், 150 படையினரையும் (sailors) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. . பொதுவாக நாடுகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படை பிரிவுகளை கொண்டிருந்தாலும், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தரையிலும், கடலிலும் இயங்கக்கூடிய ஒரு அணியையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை படையினர் விசேட தாக்குதல்களுக்கு பயப்படுத்தப்படுவர். […]

இந்திய திரையரங்குகளில் கட்டாய தேசியகீதம்

இந்திய திரையரங்குகள் படம் ஆரம்பிக்கு முன் கட்டாயமாக இந்திய தேசியகீதத்தை பாடவேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் இன்று புதன் கூறியுள்ளது. ஆதிகாலங்களில் இவ்வாறு இந்திய தேசியகீதம் பாடப்பட்டு இருந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் அவ்வாறு பாடுவது நின்று போயுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் மீண்டும் தேசீயகீதம் பாடலை கட்டாயப்படுத்தி உள்ளது. . அவ்வாறு கீதம் பாடப்படும்போது, இந்திய தேசிய கொடி அல்லது கொடி உருவமும் கொண்டிருக்கப்படல் வேண்டுமாம். அதுமட்டுமன்றி திரையரங்கின் கதவுகள் மூடப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை […]