இந்தியாவுக்கு அமெரிக்காவின் THAAD ஏவுகணைகள்?

அமெரிக்கா தனது Terminal High Altitude Area Defense (THAAD) என்ற ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 வகை ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முன்வந்திருந்த நிலையிலேயே அமெரிக்கா S-400 ஏவுகணைகளுக்கு பதிலாக தனது THAAD ஏவுகணைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. . S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா சில தடைகளை விதித்து வந்திருந்தது. ஆனால் இந்தியா ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முனைந்தபோது […]

$200 பில்லியன் சீன இறக்குமதிக்கு 25% இறக்குமதி வரி

அமெரிக்காவின் ரம்ப் அரசு இன்று முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு புதிய 25% இறக்குமதி வரியை (tariffs) நடைமுறை செய்கிறது.  இன்று முதல் இந்த வரி நடைமுறை செய்யப்படாலும், சீனாவில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு முன் வெளியேறி தற்போது கடலில் பயணிக்கும் கப்பல்களில் உள்ள பொருட்கள் மீது இந்த வரி அறவிடப்படமாட்டாது. இந்த பொருட்கள் அமெரிக்காவை அடைய சுமார் 3 முதல் 4 கிழமைகள் எடுக்கும். . மேற்படி பொருட்களுக்கு முன்னர் […]

தென் ஆபிரிக்காவில் சரியும் மண்டேலாவின் ANC

புதன்கிழமை தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற தேசிய மற்றும் மாநில தேர்தல்களில் மண்டேலா ஆரம்பித்த African National Congress (ANC) என்ற கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு குறைந்து வருவது தெரிந்துள்ளது. சுமார் 72% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மண்டேலா ஆரம்பித்த ANC கட்சிக்கு 57% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 25 வருடகாலத்தில் இதுவே ANC கட்சிக்கு கிடைத்த மிக குறைந்த ஆதரவு ஆகும். . ANC தொடர்ந்தும் ஆட்சியை அமைக்க போதிய ஆசனங்களை வெல்லும் என்றாலும், அதன் […]

சில JCPOA உடன்படிக்கைகளில் இருந்து ஈரான் வெளியேற்றம்

தாம் சில JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறுவதாக ஈரான் இன்று புதன் அறிவித்து உள்ளது. பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் இரும்பு, உருக்கு, அலுமினியம் ஆகிய ஏற்றுமதிகள் மீதும் புதிய தடைகளை விதித்துள்ளது. . ஒபாமா காலத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ரம்ப் அரசு தன்னிசையாக வெளியேறி இருந்தது. ஆனால் ஏனைய நாடுகள் ஈரானை தொடர்ந்து […]

ஈரானை நோக்கி அமெரிக்க விமானங்கள், படைகள்

அமெரிக்காவின் B-52 வகை குண்டு வீச்சு விமானங்கள், USS Abraham Lincoln என்ற விமானம் தாங்கி கப்பல் ஆகியன மத்திய கிழக்கை நோக்கி விரைகின்றன. கூடவே Mike Pompeo என்ற அமெரிக்காவின் Secretary of State உம் இன்று செவ்வாய் ஈராக் சென்றுள்ளார். . ஈரான் மேற்கொள்ளும் முரண்பாட்டு நடவடிக்கைள் காரணமாகவே தாம் மேலதிக படைகளை அங்கு அனுப்புவதாக அமெரிக்கா கூறி இருந்தாலும், குறிப்பிட்ட எந்தவொரு உதாரணத்தையும் அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை. . ஈரானும் தாம் நாளை […]

மாஸ்கோவில் விமான தீ விபத்துக்கு 41 பேர் பலி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) இன்று கோளாறுக்கு உள்ளான Sukhoi Superjet 100 வகை விமானம் ஒன்று தரை இறங்கிய உடன் தீ பற்றிக்கொண்டதால் 41 பேர் பலியாகி உள்ளனர். . ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் மொத்தம் 73 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து Murmansk என்ற நகரை நோக்கி சென்றிருந்தது. . வான் ஏறி சில நிமிடங்களில், கோளாறு காரணமாக, இந்த விமானம் மாஸ்கோ விமான […]

85,000 ருவண்டா உடல் எச்சங்கள் 81 பெட்டிகளில்

1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது ருவண்டாவில் (Rwanda) படுகொலை செய்யப்பட்டோரின் 84,437 உடல் எச்சங்கள் இன்று சனிக்கிழமை 81 பெட்டிகளில் முறைப்படி உறவினரால் புதைக்கப்பட்டு உள்ளன. . 1994 ஆம் ஆண்டு சுமார் 100 நாட்கள் இடம்பெற்ற இன கலவரங்களுக்கு அங்கு சுமார் 800,000 பேர் பலியாகி இருந்தனர். மரணித்தோருள் அதிகமானோர் சிறுபான்மை Tutsi இனத்தை சார்ந்தோரே. இவர்களை பெரும்பான்மையினரான Hutu இனத்தவர் படுகொலை செய்திருந்தனர். . அண்மை காலம்வரை தனியார் வீடுகளில் அமைந்திருந்த குழிகளில் […]

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நசியும் கனடா

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பொருளாதார மற்றும் அரசியல் யுத்தத்துள் அகப்பட்டு நசிகிறது கனடா. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா சீனாவின் Huawei நிறுவனத்தின் CFO Meng Wanzhou என்பவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் நோக்கில் வீட்டுக்காவலில் வைத்துள்ளதே சீனாவின் விசனத்துக்கு முக்கிய காரணம். . சீனாவின் பொருளாதாரத்துக்கு கனடா முக்கியம் இல்லாதமையும், ஆனால் கனடாவுக்கு சீனாவின் சந்தை முக்கியமாக இருப்பதுவும் கனடாவை நெருக்கடியில் வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவுக்கே கனடா அதிக ஏற்றுமதி செய்கிறது. . Meng […]

சீன பெற்றார் Stanford அனுமதிக்கு செலுத்திய $6.5 மில்லியன்

செல்வந்த அமெரிக்கர்கள் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு இலஞ்சம் செலுத்தி தம் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றனர் என்ற உண்மைகள் வெளிவந்த பின், தற்போது வெளிநாட்டு பெற்றாரும் அவ்வாறு பெரும் தொகை பணம் செலுத்தி அனுமதி பெற்று இருந்தமை பகிரங்கத்துக்கு வந்துள்ளது. . ஒரு சீன பெற்றார் தமது மகளுக்கு Stanford பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற $6.5 மில்லியன் இலஞ்சம் வழங்கி உள்ளனர் என்று கூறுகிறது தொடரும் விசாரணை. அதன்படி ஒரு பல்கலைக்கழக அனுமதிக்கு வழங்கிய அதிகூடிய இலஞ்சம் இதுவாகவே இருக்கும். […]

தாய்லாந்து அரசரின் நாலாவது திருமணம்

தாய்லாந்தின் அரசர் நாலாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். King Maha Vajiralongkorn, வயது 66, Suthida Vajiralongkorn Na Aydhaya என்ற 40 வயது பெண்ணை 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளார். அதனால் இவரும் ஒரு இராணி ஆகியுள்ளார். முன்னர் இவர் Thai Airways விமான சேவையின் flight attendant ஆக தொழில் புரிந்தவர். . King Maha Vajiralongkorn 2016 ஆம் ஆண்டே, அவரின் தந்தையாரின் மரணத்தின் பின், அரசராக பதவி ஏற்றார். இந்த அரச […]