அமெரிக்க சனாதிபதி ரம்பின் மூத்த மகனான Donald Trump Jr. க்கு மனைவியாக தீர்மானம் (engaged from 2018 to 2024) செய்யப்பட்டிருந்த Kimberly Guilfoyle என்பவர் இலஞ்சம் கேட்டதால் அவரின் தூதர் பதவியை ரம்ப் பறிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரம்புக்கு வழமையாக நன்கொடை வழங்கும் Eric Deters என்பவர் Kimberly தன்னிடம் $100,000 கேட்டதாகவும் அந்த text message தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். Kimberly தனது American Express credit card கடனை அடைக்கவே […]
சவுதி அரேபியாவின் Riyadh நகரில் உள்ள King Fahd விமான நிலையம் மீது சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு 12 பேர் பலியாகியும், 309 பேர் காயமடைந்தும் உள்ளனர். இது இந்த கிழமை Riyadh விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட 3ம் தாக்குதல். முனைய இரண்டு தாக்குதல்களுக்கும் 4 பேர் பலியாகி இருந்தனர். ‘ இந்த ஏவுகணை தாக்குதலையும் ஈரான் சார்பு கூத்தி (Houthis) ஆயுத குழுவே செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதல் இரண்டு தாக்குதலையும் தாமே செய்ததாக […]
அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ரஷ்யா டீசல் எரிபொருள் வழங்கும் என்று அமெரிக்க சனாதிபதி வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு மட்டும் உடனடியாக 300,000 தொன் (2.25 மில்லியன் பரல்) டீசலை ரஷ்யா வழங்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் 500,000 தொன் டீசல் நவம்பர் 3ம் திகதி அமெரிக்கா வருமாம். ரஷ்ய டீசலுக்கான இறக்குமதி உரிமையையும் அமெரிக்கா அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி வரை நீடித்துள்ளது. நவம்பர் 3ம் திகதியே அமெரிக்காவில் mid-term தேர்தல் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் டீசலின் விலை […]
2009ம் ஆண்டு Texas மாநிலத்தில் உள்ள Fort Hood இராணுவ தளத்தில் 13 படையினரை சுட்டு கொலை செய்த மேஜர் Nadal Hasan என்பவருக்கு டிசம்பர் 3ம் திகதி துப்பாக்கி சூடு (firing squad) மூலம் மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த நிகழ்வு பகிரங்கமாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார். பொதுவாக தலபான் போன்ற அரசுகளே பகிரங்க மாறான தண்டனையை வழங்கும். அவ்வகை பகிரங்க மரண தண்டனைகளை மேற்கு நாடுகள் கண்டிக்கும். […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் அரசு அமெரிக்கா சென்று உயர்கல்வில் படிப்போர் தமது படிப்பின் பின் அங்கே தொழில் செய்ய முனைந்தால் புதிதாக $70,000 கட்டணம் ஒன்றை நடைமுறை செய்ய திட்டமிடுகிறது. பெரும் பணம் செலவழித்து அமெரிக்காவில் உயர் கல்வி கற்க செல்லும் மாணவர் தமது கல்விக்கு மெருகூட்ட கற்ற துறையிலேயே அமெரிக்க வேலை அனுபவத்தையும் (OPT: Optional Practical Training) பெற விரும்புவதுண்டு. இந்த சந்தர்பத்துக்கே ரம்ப் அரசு மாணவரின் கல்வி நிலையங்களிடம் இருந்து $70,000 அறவிட முனைகிறது. […]
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, வயது 73, இன்று புதன் அவரது கொழும்பு (Poorwarama Road, Kirulapone) வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது Lady Ridgeway Children’s Hospital என்ற சிறுவர்கள் வைத்தியசாலைக்கு Siriliya Saviya Fund என்ற தொண்டர் நிறுவனம் சேகரித்த அன்பளிப்பு பணம் ரூபா 10 மில்லியன் ($30,000) மாயமானது தொடர்பாக விசாரணை செய்யப்படுகிறார். இந்த பணம் வைத்தியசாலைக்கு பயன்பட இருந்த Scanner ஒன்றுக்கானது என்று கூறப்பட்டது. ஆனால் சீன […]
பிரான்சின் பாரிஸ் நகருக்கு வடக்கே உள்ள Saint-Exupery என்ற பாடசாலையில் வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியருக்கு ஆதரவாக ஆரம்பித்த மாணவர் ஆர்ப்பாட்டம் தற்போது மிகப்பெரிய போராட்டம் ஆகியுள்ளது. இதுவரை சுமார் 6,000 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 100 பாடசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. வகுப்புகளில் அளவுக்கு அதிகமான மாணவர் தொகை, வகுப்புகளில் போதிய வசதிகள் இன்மை, போதிய ஆசிரியர் இன்மை போன்ற பல குறைபாடுகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்த ஆசிரியர் தொகையிலும் […]
இந்திய Cockroach கட்சி ஆரம்பித்த தேர்தல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டத்தில் தற்போது இந்திய உயர் நீதிமன்றமும் இணைந்துள்ளது. Cockroach கட்சி ஆர்ப்பாட்டக்காரர் கேட்ட கேள்விகளை நேற்று திங்கள் இந்திய உயர் நீதிமன்றமும் சட்டப்படி கேட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இந்த கேள்விகளை குறிப்பாக பிரதமர் மோதி அரசுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் விடுத்துள்ளது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணையாளர் Gyanesh Kumar தலைமையில் தேர்தல் திணைக்களம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்ட Special Intensive Revision (SIR) திருத்தங்கள் காரணமாக […]
பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படை தளத்தில் நிலை கொண்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அனைத்து B1 Lancer நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களும் ஞாயிறு அமெரிக்காவுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. அண்மை காலங்களில் இந்த விமான தளத்தை தாக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்று கருதப்படும் சிலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே மேற்படி விமானங்கள் அமெரிக்காவுக்கு பின் வாங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அமெரிக்கா நகர்வுக்கான காரணம் எதையும் கூறவில்லை. செப்டம்பர் 27ம் திகதி இந்த விமான தளம் அருகே […]
அமெரிக்காவின் mid-term தேர்தலுக்கு 4 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் சனாதிபதி ரம்பும், அவரின் Republican கட்சியும் அமெரிக்க காங்கிரசில் பலத்தை இழக்கலாம் என்று Republican கட்சி செய்த இரகசிய கருத்து கணிப்பு கூறுகிறது. காங்கிரசின் House சபையை மட்டும் எதிரணியான Democratic கட்சி வென்றால் ரம்ப் தான் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியாது இருக்கும். ரம்பின் முயற்சிகளை House தடுக்கலாம். காங்கிரஸ் பணத்தை வழங்கினால் மட்டுமே வெள்ளை மாளிகை அதை செலவு செய்யலாம். ஆனால் காங்கிரசின் […]