2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 முதல் Huawei தொலைபேசிகளில் Harmony OS

2021 ஆம் ஆண்டு முதல் சீனாவின் Huawei தனது சொந்த Operation System (OS) ஆனா Harmony OS 2.0 ஐ மட்டும் தனது smart phone களில் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது Huawei அமெரிக்க Google நிறுவனத்தின் Android OS ஐ மட்டுமே தனது smart phone களில் கொண்டுள்ளது. ரம்ப் அரசு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்கள் Huawei க்கு தொழில்நுட்பங்களை வழங்குவதை தடை செய்திருந்தது. ரம்பின் தப்பு கணக்கு […]

Oxford கரோனா மருந்து பரிசோதனை இடைநிறுத்தம்

Oxford கரோனா மருந்து பரிசோதனை இடைநிறுத்தம்

பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் AstraZeneca என்ற மருத்துவத்துறை நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் AZN222 என்ற கரோனா தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட பரிசோதனை இன்று இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் பாரதூரமான பக்கவிளைவுக்கு உள்ளானதே காரணம். இந்த மருந்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பரிசோதனைகள் பாதகமான பக்கவிளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. மூன்றாம் பரிசோதனைக்கு பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 30,000 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்க […]

இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

திங்கள்கிழமை இந்தியா hypersonic ஏவுகணை ஒன்றை ஏவி பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்து உள்ளது. ஒடிசா மாநிலத்துக்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் hypersonic ஏவுகணை நாடுகளாக உள்ளன . இந்தியாவின் ஏவுகணை 30 km உயரத்துக்கு ஒலியின் வேகத்திலும் 6 மடங்கு வேகத்தில் சென்றதாக இந்தியா கூறி உள்ளது. இந்த ஏவுகணைக்கு பயன்படும் scramjet engine இந்தியாவின் DRDO […]

அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் தடையில் அடுத்து சீனாவின் SMIC?

அமெரிக்காவின் ரம்ப் அரசு அடுத்து சீனாவின் Semiconductor Manufacturing International Corporation (SMIC) என்ற chip தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சாதாரண மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை என்றாலும், அவர்களில் smart phone, கணனி போன்ற இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் SMIC தயாரிப்புகளை கொண்டவை. பல மேற்கு நாடுகளின் தொழிநுட்ப நிறுவனங்கள் SMIC க்கு தமது பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும், SMIC யின் பொருட்களை கொள்வனவு செய்பவர்களாகவும் உள்ளன. அதனால் […]

எல்லையில் 5 இந்தியாரை சீனா கடத்தியது?

ஐந்து பேரை சீனா இராணுவம் கடத்தி உள்ளதாக இந்திய அமைச்சர் Kiren Rijiju இன்று கூறியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் Rajnath Singh க்கும், சீனாவின் ஜெனரல் Wei Fenghe க்கும் இடையில் எல்லை முரண்பாடுகள் தொடர்பாக மாஸ்கோவில் உரையாடல்கள் இடம்பெறும் வேளையிலேயே இந்த கடத்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடத்தப்பட்டோர் இந்திய இராணுவத்தினர் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. இந்திய பொதுமக்கள் முரண்பாடுகள் நிறைந்த எல்லைகளுக்கு செல்வதும் சாத்தியமில்லை. சீனாவால் கடத்தப்பட்டோர் இந்தியாவின் Special Frontier Force […]

இந்தியாவில் கரோனா தொற்றியோர் 4 மில்லியன்

இந்தியாவில் கரோனா தொற்றியோர் 4 மில்லியன்

இன்று சனிக்கிழமை வரை இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 4 மில்லியன் (4,023,179) ஆக அதிகரித்து உள்ளது. உலக அளவில் கரோனா தொற்றியோர் தொகையில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா கரோனா தொற்றியோர் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தை அடையலாம் சனிக்கிழமை மட்டும் இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 86,432 ஆல் அதிகரித்து உள்ளது. வெள்ளிக்கிழமை அத்தொகை 93,000 ஆல் அதிகரித்து உள்ளது. கரோனாவுக்கு பலியானோர் தொகையிலும் இந்தியாவே 3 ஆம் […]

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார். மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம். ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது […]

சீனா இன்று வெள்ளி ஏவிய இரகசிய விண்கலம்

சீனா இன்று வெள்ளி ஏவிய இரகசிய விண்கலம்

சீனா இன்று வெள்ளிக்கிழமை காலை விண்கலம் ஒன்றை இரகசியமாக ஏவி உள்ளது. இதன் நோக்கத்தை அறிய முயற்சிக்கின்றது மேற்கு. இது மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, பயணிகளை கொண்டிராத விண்விமானமாக (space plane) இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இன்றைய ஏவலில் பங்குகொண்ட அனைவரையும் இது தொடர்பான விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்றும், படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்றும் பணிக்கப்பட்டு உள்ளது. சீன அரசும் முழுமையான விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. இந்த விண்விமானம் சிலகாலம் விண்ணில் பயணித்து […]