ஆஸ்ரேலியாவில் வெள்ளை அகதிகளுக்கு முதலிடம்?

தென் ஆபிரிக்காவில் இருந்து ஆஸ்ரேலியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அல்லது வேறு திட்டங்கள் மூலம் சென்ற வெள்ளை இனத்தவரை விரைவுபடுத்திய செயற்பாடுகள் மூலம் அகதிகளாக ஏற்று கொள்ள ஆஸ்ரேலியா தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது. . ஆஸ்ரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் (home affairs) Peter Dutton இந்த கருத்தை உறுதி செய்துள்ளார். அவர் தனது கூற்றில் “… we do need to look at the persecution that’s taking place” என்றுள்ளார். அத்துடன் அவர் இந்த வெள்ளை […]

விரைவில் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல்?

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் விரைவில் ஓர் வர்த்தக மோதல் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனா அமெரிக்காவுடனான ஏற்றுமதி/இறக்குமதி பொருளாதாரத்தில் சுமார் $375 பில்லியன் மேலதிகத்தை வருடம் ஒன்றில் கொண்டுள்ளது (surplus). ஒபாமா ஆட்சியில், 2016 ஆம் ஆண்டில், $347 பில்லியன் ஆக இருந்த சீனாவின் மேலதிகம், ரம்ப் ஆட்சியில், 2017 ஆம் ஆண்டில், $375 பில்லியன் ஆக உயர்ந்து இருந்தது. . அண்மையில் ரம்ப் தனது ஆலோசகர்களை அழைத்து, அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகத்தில் கொண்டுள்ள வர்த்தக […]

Rex Tillerson பதவி நீக்கம்

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson நேற்று தனது பதவியை துறந்துளார். இவர் ஆபிரிக்க நாடுகளுக்கு சேவையின் காரணமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்த பொழுது, கடந்த வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி ரம்ப் இவரை பதவி விலகுமாறு கூறியதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக நாடு திரும்பிய Tillerson திங்கள் பதவியை துறந்துள்ளார். . ஜனதிபதி ரம்புக்கும், Tillersonனுக்கும் இடையே முரண்பாடுகள் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் மிக முக்கிய முரண்பாடு அண்மையில் ரம்ப் வடகொரியா விடயத்தில் தன்னிசையாக எடுத்துக்கொண்ட […]

உளவாளி கொலைக்கு ரஷ்யாவை சாடுகிறது பிரித்தானியா

இந்த மாதம் 4ஆம் திகதி ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய Sergei Skripal, பிரித்தானியாவின் Salisbury நகரில் chemical weapon தாக்குதல் ஒன்றுக்கு ஆளாகி இருந்தார். அவருடன் 33 வயதுடைய அவரின் மக்களும் தாக்கப்பட்டார். இருவரும் தற்போது உயிருக்காக போராடி வருகின்றனர். . இந்த தாக்குதலை பிரித்தானிய காவல்துறை விசாரணை செய்து வந்திருந்தது. . இன்று பிரித்தானியாவின் பிரதமர் மே (Theresa May) இந்த தாக்குதலை ரஷ்ய அரசு செய்திக்கவேண்டும், அல்லது அவர்களிடம் இருந்து பெறப்பட்ட […]

ரஷ்யாவிடம் hyper-sonic ஏவுகணை

தாம் வெற்றிகரமாக hyper-sonic ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக ரஷ்யா இன்று ஞாயிரு கூறியுள்ளது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தின் 10 மடங்கு வேகத்தில் செல்ல வல்லது. அதனால் இந்த ஏவுகணையை அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை (anti-missile defense system) தடுத்து நிறுத்த முடியாது. . Kinzhal என்ற இந்த ஏவுகணை ஒரு MiG-31 வகை super-sonic யுத்த விமானத்தில் இருந்து ஏவப்படுள்ளது. . இந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள ரஷ்ய தேர்தலில் ஜனாதிபதி […]

குப்தாகளின் விமானத்தை தேடும் கனடிய EDC

கனடாவின் Export Development Canada (EDC) கனடிய உற்பத்திகளை இலகுவில் சந்தைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அரச கட்டுப்பாட்டு அமைப்பு. அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கனடிய வரிப்பணம் EDCயின் செயல்பாடுகளுக்கு பயன்படுவது இல்லை. . கனடிய சிறு விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier தனது விமானங்களை விற்பனை செய்வதற்கும் EDCயின் உதவியை நாடுவது உண்டு. . இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்கா சென்று செல்வந்தராகிய Ajay Gupta, Atul Gupta, Rajesh Gupta ஆகிய சகோதரர்களுக்கும் Bombardier […]

ரம்ப், உன் சந்திப்பு?

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை (Kim Jong Un) சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இணங்கி உள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு செயலாளர் Chung Eui-yong கூறியுள்ளார். . இன்று வியாழன் வெள்ளை மாளிகையில் ரம்பை சந்தித்த பின்னரே Eui-yong இவ்வாறு கூறி உள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு நடாத்த விரும்பி உள்ளார் என்ற செய்தியையே இன்று ரம்பிடம் தென்கொரிய பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். . ரம்ப் […]

அமெரிக்கா மீது ஐரோப்பா பதிலடி வரிக்கு திட்டம்

ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் steel, aluminum ஆகிய இரண்டு உலோகங்களுக்கும் 25% மேலதிக வரியை நடைமுறை செய்யப்போவதாக அமெரிக்காவின் ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் பதிலடி வரிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கவுள்ளதாக கூறியுள்ளன. . இன்று புதன் European Commission இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் peanut butter, orange juice, whisky ஆகிய பொருட்கள் […]

இரும்பு, அலுமினிய வரி, வர்த்தக போருக்கு அறிகுறி

அமெரிக்காவின் ரம்ப் அரசு அமெரிக்காவுள் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு (steel) 25% இறக்குமதி வரியையும், அலுமினியத்துக்கு (aluminum) 10% வரியையும் நடைமுறை செய்ய திடமாக உள்ளது. ஆனால் இந்த புதிய வரிகள் அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒரு வர்த்தக போரை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. . மேற்படி வரி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மலிவு விலை உலோக அளவை கட்டுப்படுத்த வரையப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்த புதிய வரி கனடாவையும் ஐரோப்பிய நாடுகளையுமே அதிகம் பாதிக்கும். கடந்த […]

சிரியாவில் ரஷ்ய தனியார் இராணுவம்

கடந்த 7ஆம் திகதி (2018-02-07) சிரியாவின் Deir al-Zour என்ற இடத்தில் பல ரஷ்ய ஆயுததாரிகள் அமெரிக்காவின் விமான தாக்குதலுக்கு பலியாகி இருந்தனர். மேற்கு நாட்டு பத்திரிகைகள் பலியானோர் தொகையை 100 வரை இருக்கும் என்று கூறியிருந்தன. ஆனால் ரஷ்யா பலியானோர் தொகை சிறிது என்றிருந்தது. ஆனால் இருதரப்பும் இந்த தாக்குதலை விரைவில் மூடி மறைத்துவிட்டன. . உண்மையில் பலியான இந்த ரஷ்ய ஆயுததாரிகளின் விபரங்கள் படிப்படியாக வெளிவந்துள்ளன. அமெரிக்கா அந்நாட்டு தனியார் இராணுவங்களை (private armies) […]