கடவுள் உண்டா?

(இளவழகன், ஏப்ரல் 13, 2020)   கடவுள் உண்டா என்ற கேள்வி கேட்பதற்கு இலகுவானது, ஆனால் பதிலளிப்பதற்கு கடினமானது. . இந்த கேள்விக்கு பதிலளிக்க இலகுவான வழி, நேரடியாக பதிலளிப்பதற்கு பதியிலாக, சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகளை திருப்பி கேட்பதே. சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகள் கடவுள் உண்டா என்ற முதல் கேள்வியை கேட்டவரின் சிந்தனையை மேலும் ஆழமாக சிந்திக்க தூண்டும். மேலதிக பதில் கேள்விகள் இந்த விசயத்தில் பிரகாசமான தெளிவையும் வழங்கலாம். . […]

குமுதினி 2

. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் நோக்கி சென்ற குமுதினி என்ற படகில் இருந்த குறைந்தது 36 தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதை அறிந்தவர் அழுதனர். அவ்வழி படகுக்கு தற்போது இன்னோர் அந்தர்தமும் இயற்கையின் அல்லது மனித தவறு காரணமாக அங்கு மீண்டும் நிகழலாம். ஆனால் அதன் பொருட்டு உரியவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை. ஒருவேளை அனர்த்தம் நிகழ்த்தபின் மட்டும் இவர்கள் மீண்டும் அழுவார்களோ? . […]

கனடாவில் மீண்டும் தமிழ் கொலை

அண்மையில் கனடாவின் Porter விமான சேவையின் பிரசுரம் ஒன்று கொண்டிருந்த ஒரேயொரு சொல்லான ‘வணக்கம்’, குற்றுள்ள ‘ம்’ என்ற மெய் எழுத்துக்கு பதிலாக குற்றற்ற ‘ம’ என்ற உயிர்மெய் எழுத்தில் முடிந்திருந்தது. ஆனால் அதையும் விட மிகையான தமிழ் பிழைகளுடன் கடனாவின் டொரோண்டோ மாநகரின் பொது போக்குவரத்து சேவையான TTC (Toronto Transit Commission) தற்போது பிரசுரம் ஒன்றை பிரசுரித்துள்ளது. TTC சேவையின் POP (Proof-of-Payment) தொடர்பான பிரசுராமே மேலே உள்ளது – முடிந்தால் அதில் உள்ள […]

தமிழரே தமிழை கொல்ல, சிங்களவரை நோவான் ஏன்?

இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கான அறிவிப்பு பலகைகளில் தமிழை தவறாக பதிப்பதையிட்டு நம் தமிழர் அழுது புலம்புவது உண்டு. அவ்வாறு அழ தமிழில் மீதான அளப்பரிய பற்று காரணமா அல்லது சிங்களத்தின் மீதான வெறுப்பு காரணமா என்ற உண்மையை அறிவது மிக கடினம். . இவ்வாறு சிங்களம் செய்யும் தமிழ் கொலைக்கு அழும் தமிழர் பலர் தமது குழந்தைகளுக்கு மட்டும் உலகின் எந்தவொரு மொழியிலும் அர்த்தம் காணமுடியாத பெயர்களை இடுவதும் உண்டு. உப்பு இல்லாமல் இவர்கள் தமிழ் சமையல் […]

அயலவன் கோழியை நம்பி அடைக்கு வைக்காதே

யாழ்பாணத்து வலம்புரி பத்திரிகை “சூரன் போரின் தத்துவத்தை உணர்ந்து கொள்மினே!” என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை 2016-11-05 அன்று வெளியிட்டு உள்ளது. இதில் சொல்லப்பட்டு உள்ள கருத்தையிட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. . இந்த தலையங்கம் (இலங்கை) “தமிழர்களும் வல்லமைமிக்க அமெரிக்கா, இந்தியா  போன்ற நாடுகளைச் சிக்கனப் பிடித்து எங்களுக்கு உரிமை கிடைத்தால் உங்களுக்கு என்ன நன்மை என்பதை எடுத்துரைத்து, சீனாவின் பிரசன்னத்தைக் காட்டி, முன்னைய ஆட்சி மீண்டு(ம்) வந்தால் நிலைமை என்னவாகும் […]

IS உருவாக வழிசெய்தவர்கள்

IS என்ற பயங்கரவாத இயக்கம் இந்த மாதம் 13ம் திகதி பாரிஸ் நகரில் 129 பொதுமக்களை படுகொலை செய்ததுடன் சுமார் 100 பேர்களை காயப்படுத்தியும் இருந்தது. அதற்கு முதல் நாள் இக்குழு லெபனானின் பெய்ரூத் நகரில் இரண்டு தற்கொலை தாக்குதல் மூலம் 43 பெயர்களை படுகொலை செய்திருந்தது. இந்த தாக்குதலுக்கு சில தினங்கள் முன்னர் ரஷ்யாவின் விமானம் ஒன்றை எகிப்தின் வான்வெளியில் குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் வீழ்த்தி இருந்தது. அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருந்தனர். […]

மசகு எண்ணெய் யுத்தம்

மசகு எண்ணெய் யுத்தம் இன்று WTI (West Texas Intermediate) தர மசகு எண்ணெய் விலை பரல் ஒன்று US $39.93 வரை குறைந்து இருந்தது. அதாவது 2009 ஆம் ஆண்டில் இருந்த விலையை இன்று மீண்டும் அடைந்துள்ளது மசகு எண்ணெய். 2008 ஆம் ஆண்டில் பரல் ஒன்று US $145.00 ஆக இருந்திருந்தது. அப்போது பாண்டித்தியர் பரல் ஒன்றின் விலை US $200.00 யையும் தாண்டலாம் என்று கூறியிருந்தனர். கிளி சாஸ்த்திரம் போல் இவர்கள் கருத்து […]

அமெரிக்க உதவிகளும் இராணுவ சதிகளும்

  அமெரிக்காவின் அரசியல் புள்ளிகள் மற்றும் அந்நாட்டு பத்திரிகை துறையினர் எல்லாம் தம்மை ஜனநாயக நேயர்கள், அதற்காக முன்னின்று உழைப்பவர்கள் என்றெல்லாம் பெருமையுடன் பிரச்சாரம் செய்பவர்கள். ஆனால் வரலாறு அவையெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. 1961 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4ஆம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி John F. Kennedy அரசினால் Foreign Assistance Act அமெரிக்க சட்டமாக்கப்பட்டது. அச்சட்டம் “restricts assistance to the government of any country […]

இலங்கைபோல் மாலிக்குள்ளும் இரு யுத்தம்

பிரெஞ்சு இராணுவம் தற்போது வானத்தில் இருந்து குண்டுகளை மட்டுமே எதிரி நிலையங்கள் மீது போடுகிறது. பிரெஞ்சு மற்றும் இதர மேற்கு நாடுகளின் வருகையை கண்ட MNLA தாம் இப்போது Ansar ud-Din இன்மீதான யுத்தத்துக்கு உதவுவதாக கூறியுள்ளனர். (ஞாபகம் இருக்கிறதா இந்தியாவை வெளியேற்ற செய்துகொண்ட புலிகள்-பிரேமதாச உறவு?)

தி.மு.க. ஒரு குடும்ப வியாபாரம்?

கருணாநிதி உண்மையான தமிழ்நாட்டு மக்கள்மேல் அக்கறைகொண்ட தலைவர் என்றால் அவர் உடனடியாக செய்யவேண்டியது நேர்மையானதும், தராதரத்துடன் முன்வரும் எல்லா வேட்பாளர்களையும் உள்ளடக்கியதுமான ஒரு தெரிவுப்போட்டி வைத்து அதன் மூலம் அடுத்த தி.மு.க.வின் தலைவரை தெரிவு செய்யவதே.