ஈரானுடனான யுத்தத்தில் பெப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய முதல் இரண்டு தினங்களில் மட்டும் அமெரிக்கா $5.6 பில்லியன் செலவு செய்துள்ளது. தற்போது யுத்தம் 11ம் தினத்தை தாண்டி தொடர்கிறது. அமெரிக்க சட்டப்படி படைகளின் தலைமையகமான பென்டகன் (Pentagon) அமெரிக்க காங்கிரசுக்கு யுத்த செலவு விபரங்களை தெரிவித்தல் அவசியம். அதற்கு ஏற்ப திங்கள் இரகசியமாக காங்கிரசுக்கு வழங்கப்பட்ட செலவு விபரமே வெளியே கசிந்துள்ளது. அதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருந்த Patriot ஏவுகணைகளின் தொகை ஆபத்தான அளவில் குறைந்துள்ளது. அதனால் வட கொரியாவில் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் திங்கள் பல உரைகளில் ஈரானுடனான யுத்தம் விரைவில் (pretty quickly) முடியும் என்று கூறியுள்ளார். ரம்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் கையிருப்பில் உள்ள தடுப்பு ஏவுகணைகளின் அளவு குறைந்தமை காரணமாகலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் எரிபொருள் விலை வேகமாக அதிகரிப்பதால் வரவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி தோல்விகளை சந்திக்கலாம் என்ற பயமும் ரம்புக்கு தோன்றி இருக்கலாம். Anthony Blinken என்ற முன்னாள் அமெரிக்க Secretary of State தனது கூற்றிலும் “பங்கு சந்தையும், கையிருப்பில் […]
ஈரான் யுத்தம் காரணமாக தற்போது ஒரு பரல் West Texas Intermediate (WTI) மசகு எண்ணெய் $108.66 ஆகவும், ஒரு பரல் Brent மசகு எண்ணெய் $108.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க முன், சுமார் ஒரு கிழமைக்கு முன், ஒரு பரல் எண்ணெய் விலை $60 ஆக இருந்தது. ஈரான் யுத்தத்தால் எண்ணெய் விலை சுமார் 80% ஆல் அதிகரித்து உள்ளது. யுத்தம் தற்போதைக்கு நிறுத்தப்படாது. அதனால் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு […]
ஈரான் மீதான யுத்தத்துக்கு அமெரிக்கா மட்டும் தற்போது தினமும் சுமார் $890 மில்லியன் செலவிடுவதாக அமெரிக்காவின் Center for Strategic and International Studies என்ற ஆய்வு அமைப்பு கணித்துள்ளது. இந்த யுத்தத்தின் முதல் 100 மணித்தியாலங்களில், சுமார் 4 தினங்களில் மட்டும், அமெரிக்கா $3.7 பில்லியன் செலவு செய்துள்ளது. வழமைபோல் அமெரிக்கா இந்த யுத்த செலவுகளையும் பகிரங்கம் செய்யாது ஒளித்து வைப்பதால் ஆய்வு நிறுவனங்கள் தரவுகளை வேறு வழிகளில் தேடி எடுத்தே தமது கணிப்பை செய்கின்றன. இந்த […]
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை பெப்ரவரி மாதம் 28ம் திகதி தாக்க ஆரம்பித்தது முதல் இதுவரை மத்திய கிழக்கு ஊடாக செல்லும் சுமார் 14,000 விமான சேவைகள் (flights) இரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை டுபாய், அபுதாபி, கட்டார், பஹ்ரைன், சவுதி, குவைத், இஸ்ரேல், ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகிய 10 விமான நிலையங்களை பயன்படுத்த இருந்தன. கட்டாரின் Hamad விமான நிலையத்தில் 94% விமான சேவைகளும், UAE யின் டுபாய் விமான நிலையத்தில் 85% சேவைகளும், அபுதாபியில் 89% சேவைகளும், […]
உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் வீடு வந்த உங்கள் நண்பர் குடும்பம் ஒன்று தமது வீடு திரும்பும் போது விபத்து ஒன்றில் அகப்பட்டு மொத்தமாக மரணித்து இருந்தால் நீங்கள் பதறுவீர்கள், மரண வீட்டில் முன் நிற்பீர்கள். ஆனால் இந்திய பிரதமர் மோதி உங்களை போன்றவர் அல்ல, அவர் குணம் வேறு. பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 25ம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இந்தியாவின் 3ம் International Fleet Review (IFR) என்ற நட்பு […]
சீன இராணுவம் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஆரம்பித்த ஈரான் மீதான தாக்குதல் 5 படிப்பினைகளை வழங்கி உள்ளன என்று இன்று தனது X பதிவில் கூறியுள்ளது. அவையாவன:1. Deadliest Threat: The enemy within2. Costliest Miscalculation: Blind faith in peace3. Coldest Reality: The logic of superior firepower4. Cruelest Paradox: The illusion of victory5. Ultimate reliance: Self-reliance முதலாவது படிப்பினை எங்களுடன் இருக்கும் துரோகிகளே பயங்கரமான ஆபத்து என்கிறது. […]
படையினர் குதிரை ஏறி, யானை ஏறி கைகளில் வாள் ஏந்தி யுத்தம் செய்த காலம் மலையேறி தற்போது எல்லோரும் தமது தரப்பில் இரத்தம் சிந்தாது தொழிநுட்பங்களை ஏவி யுத்த வெற்றிகளை அடைய விரும்புகின்றனர். அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும் இவ்வகை யுத்தம் ஒன்றையே ஈரான் மீது ஏவியுள்ளது. ஆனால் இந்த யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும், இந்த கூட்டுக்கு தமது நாடுகளில் தளங்களை அமைக்க வசதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் எவ்வளவு காலத்துக்கு இந்த யுத்தத்தை தொடரலாம் என்பது சந்தேகமே. உதாரணமாக […]
குவைத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் செய்த தாக்குதலுக்கு பலியான படையினர் தொகை 6 ஆக உயர்ந்துள்ளது. Siren சத்தம் எதுவும் எதுவும் இன்றி Shuaiba துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் குவைத் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு இடம்பெற்று இருந்தாலும் முழு விபரமும் திங்கள் பிற்பகலே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு drone தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. Drone தாக்குதல் காரணமாக கட்டாரின் QatarEnergy நிறுவனம் LNG எரிவாயு உற்பத்தியை இடைநிறுத்தி உள்ளது. […]
ஈரான் மீதான தாக்குதல்களை செய்யும் சில அமெரிக்க யுத்த விமானங்கள் குவைத்தில் விழுந்துள்ளன என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் Said Al-Atwan கூறியுள்ளார். இன்று திங்கள் விழுந்த இந்த யுத்த விமானங்களின் விமானிகள் முறைப்படி பாராசூட் மூலம் தரை இறங்கி உள்ளனர். இவர்கள் உடனே வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அதேவேளை ஈரானில் மரணித்தோர் தொகை 555 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை மத்திய கிழக்கில் மட்டும் 3,400 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. அதனால் […]