கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

2020ம் ஆண்டு சீனாவில் 12 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன. 2019ம் ஆண்டு அங்கு 14.65 மில்லியன் குழந்தைகள் பிறந்து இருந்தன. அதாவது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் தொகை 2.65 மில்லியனால் அல்லது 18% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2020ம் ஆண்டில் 1,000 சனத்தொகைக்கு 8.52 அங்கு குழந்தைகள் என்ற விகிதத்திலேயே குழந்தைகள் பிறந்து உள்ளன. 1963ம் ஆண்டு 1,000 சனத்தொகைக்கு அங்கு 43.6 குழந்தைகள் என்ற விகிதத்தில் […]

நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்து பெரு நகரான Milwaukee க்கு மேற்கே உள்ள புறநகரான Waukesha இன்று ஞாயிறு பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்ற நத்தார் ஊர்வலத்தினூடு (Christmas parade) SUV வகை வாகனம் ஒன்று வேகமாக சென்று மோதியதால் சிலர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலுக்கு சிலர் பலியாகி உள்ளதாக போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர் தொகையை இதுவரை அறிவிக்கவில்லை. பலியானோர் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை. வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டவர் தொகை 28 என்றும் […]

உங்கள் தரவுகளை கொள்ளை கொள்ளும் Amazon

உங்கள் தரவுகளை கொள்ளை கொள்ளும் Amazon

Amazon என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் பல தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன்மூலம் Amazon தனது வாடிக்கையாளரின் தரவுகளை முன்னறிவிப்பு இன்றி சேகரித்தும் வருகின்றத. இந்த உண்மையை அறிந்த Ibraheem Samirah என்ற அமெரிக்காவின் Virginia மாநிலத்து அரசியல்வாதி அண்மையில் Amazon சேகரித்த தனது விபரங்களை பகிரங்கம் செய்துள்ளார். இவர் Amazon நிறுவனத்தின் சில சேவைகளை பெற்ற காலத்திலேயே தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவருக்கு தெரிந்தவர்கள் 1,000 பேரின் தொலைபேசி இலக்கங்களை Amazon சேகரித்து […]

மோதியை பின்வாங்க வைத்த உழவர் போராட்டம்

மோதியை பின்வாங்க வைத்த உழவர் போராட்டம்

சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்திய பிரதமர் மோதியின் புதிய உழவர் தொடர்பான சட்டத்துக்கு எதிராக போராடிய உழவர் இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். பிரமர் மோதியின் அரசு 2020ம் ஆண்டு தான் நடைமுறை செய்த உழவர் தொடர்பான சட்டத்தை பின்வாங்க இணங்கி உள்ளது. கரோனா மற்றும் பாதகமான காலநிலையிலும் போராடிய உழவர் இறுதியில் தமது வெற்றியை அடைந்து உள்ளனர். இவர்களுக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் புஞ்சாப், ஹரியானா […]

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா உக்கிரம், வீதியில் வன்முறை

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா உக்கிரம், வீதியில் வன்முறை

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா தோற்று உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அஸ்ரியாவில் (Austria) முழு அளவிலான கரோனா முடக்கம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த முழு முடக்கத்தை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் வீதிக்கு வந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். அதேவேளை ஐ.நாவின் WHO என்ற உலக சுகாதார அமைப்பும் கரோனா மீண்டும் உக்கிரம் அடைவதையிட்டு கவலை தெரிவித்து உள்ளது. உரிய நடவடிக்கைகளை நடைமுடை செய்யாவிடில், அடுத்த மார்ச் மாதத்துள் மேலும் 500,000 உயிர்களை கரோனாவுக்கு இழக்க நேரிடும் […]

அமெரிக்கா, சீனா கூட்டாக கையிருப்பு எரிபொருளை விடுவிக்கும்

அமெரிக்கா, சீனா கூட்டாக கையிருப்பு எரிபொருளை விடுவிக்கும்

அமெரிக்காவும் சீனாவும் தம்மிடம் உள்ள எரிபொருள் கையிருப்பை கூட்டாக சந்தைக்கு விட இணங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் எங்கும் வேகமாக அதிகரித்துவரும் எரிபொருள் விலை உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற பயம் காரணமாகவே இவ்வாறு கூட்டாக கையிருப்பை விடுவிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் சீனா ஜனாதிபதி சீ ஜின் பிங்கிடம் கேட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவசரகால பாவனைக்கென அமெரிக்கா சுமார் 727 மில்லியன் பரல் எண்ணெய்யை பதுக்கி வைக்கிறது. சீனா சுமார் 200 மில்லியன் எண்ணெய்யை […]

தாய்வானில் தலையிடல் நெருப்புடன் விளையாடுவது போன்றது

தாய்வானில் தலையிடல் நெருப்புடன் விளையாடுவது போன்றது

நேற்று அமெரிக்க சனாதிபதிக்கும் சீன சனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற இணைய மூல உரையாடலில் (virtual talk), தாய்வான் சீனாவின் அங்கம் என்றும் அதில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது (playing with fire) போன்றது என்று சீன சனாதிபதி பைடெனுக்கு கூறி உள்ளார். சூழல் மாசடைவதை தடுத்தல், வர்த்தகம் போன்ற விசயங்களில் சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முன்வருவதாகவும் ஆனால் தாய்வான் போன்ற விசயங்களில் அமெரிக்கா தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்றும் சீன அரச […]

போலந்து-பெலரூஸ் எல்லையில் குவியும் அகதிகள்

போலந்து-பெலரூஸ் எல்லையில் குவியும் அகதிகள்

போலாந்துக்கும் (Poland), பெலரூஸுக்கும் (Belarus) இடையிலான எல்லை குதியில் பல்லாயிரம் அகதிகள் குவிந்து வருகின்றனர். இந்த அகதிகளின் குவிவால் போலாந்து, லித்துவேனியா (Lithuania), லத்வியா (Latvia) ஆகிய நாடுகள் NATO நாடுகளின் உதவியை நாடி உள்ளன. நேட்டோ அணியில் அங்கம் கொண்ட மேற்படி மூன்று நாடுகளும் நேட்டோ அணியின் Article 4 ஐ நடைமுறை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு நேட்டோ நாடு ஆபத்தில் இருந்தால் ஏனைய நேட்டோ நாடுகள் ஆபத்தில் உள்ள நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும். […]

இந்தியாவுக்கு ரஷ்ய S-400 ஏவுகணை, அமெரிக்கா தண்டிக்குமா?

இந்தியாவுக்கு ரஷ்ய S-400 ஏவுகணை, அமெரிக்கா தண்டிக்குமா?

ஏற்கனவே கொள்வனவு செய்ய இணங்கியபடி ரஷ்யாவின் S-400 என்ற ஏவுகணை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா வரவுள்ளன என்று ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு அமெரிக்கா நடைமுறை செய்த சட்டம் ஒன்றின்படி S-400 ஏவுகணையை கொள்வனவு செய்யும் நாடுகளை அமெரிக்கா தண்டிக்கவேண்டும். அந்த சட்டப்படி இந்தியாவையும் அமெரிக்கா தண்டிக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்காவின் மேற்படி சட்டம் Countering America’s Adversaries Sanctions Act (CAATSA) என்று அழைக்கப்படும். துருக்கி ஒரு […]

திங்கள் பைடென், சீ ஜின் பிங் இணைய உரையாடல்

திங்கள் பைடென், சீ ஜின் பிங் இணைய உரையாடல்

அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் அமெரிக்க நேரப்படி திங்கள் (சீன நேரப்படி செவ்வாய் காலை) இணையம் மூலம் (virtual meeting) உரையாட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இரு தரப்புமிடையே தற்போது நிலவி வரும் முறுகல் நிலையை இந்த உரையாடல் தணிக்க முனையலாம் என்று கருதப்படுகிறது. பைடென் ஆட்சிக்கு வந்தபின் மேற்கொள்ளும் ஆழமான உரையாடலாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கரோனா, தாய்வான், ஹாங் காங், வர்த்தகம் போன்ற பல […]

1 87 88 89 90 91 312