வெனிசுவேலா சென்றன 2 ரஷ்ய இராணுவ விமானங்கள்

நேற்று சனிக்கிழமை 2 ரஷ்ய இராணுவ விமானங்கள் வெனிசுவேலா (Venezuela) சென்றுள்ளன. Ilyushin IL-62 விமானம் ஒன்றில் 100 ரஷ்ய இராணுவத்தினரும், Antonov 124 வகை விமானத்தில் சுமார் 35 தொன் இராணுவ தளபாடங்களும் சென்றுள்ளன என்று கூறப்படுகிறது. . தமக்கு கட்டுப்படாத வெனிசுவேலா அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமன்றி, அந்நாட்டு எதிரணிக்கு ஆதரவும் வழங்கியும் வருகிறது. அத்துடன் தேவைப்பட்டால் அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். […]

சீன அரும்பொருட்களை இத்தாலி கையளிக்கும்

நேற்றைய தினம் இத்தாலி சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் இணைந்தது மட்டுமன்றி, முற்காலங்களில் சீனாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சீன கலாச்சார அரும்பொருட்களை (cultural relics) சீனாவிடம் மீண்டும் கையளிக்கவும் இணங்கி உள்ளது. . இந்த இணக்கத்தின்படி மொத்தம் 796 சீன அரும்பொருட்கள் சீனாவிடம் திருப்பி வழங்கப்படவுள்ளன. இந்த அரும்பொருட்களுள் சுமார் 4300 முதல் 4600 வருடங்களுக்கு முற்பட்ட (கி.மு 2600 – கி.மு.2300) Majiayao செங்களி பாத்திரமும் (red […]

சீன BRI திட்டத்தில் இத்தாலி இன்று இணைவு

சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலி இன்று சனிக்கிழமை இணைந்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடு இத்தாலியே. . அதேவேளை அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன. அதில் இத்தாலி இணைவதை கடுமையாக எதிர்த்துள்ளன. ஆனாலும் இத்தாலி தனது நன்மை கருதி சீனாவுடன் இணைந்துள்ளது. . இன்று இத்தாலி […]

வீட்டுக்கு கீழே 45 விச பாம்புகள் குடியிருப்பு

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Abilene நகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு கீழே 45 rattle snake என்ற வகை நச்சு பாம்புகள் குடியிருந்துள்ளன. ஒரே இடத்தில் இவ்வளவு பாம்புகள் அகப்பட்டது வீட்டுக்காரரை வியக்க வைத்துள்ளது. . மேற்படி வீட்டுக்காரர் தனது தொலைக்காட்சி சரியா இயங்காததால் அதன் cable ஐ சரிபார்க்க முயன்றுள்ளார். அப்போது அவரின் வீட்டுக்கு கீழே சில rattle snake வகை பாம்புகள் இருப்பதை அறிந்து Big Country Snake Removal என்ற நிறுவனத்தின் […]

Jet Airways சேவைகள் முடங்கலாம்

இந்தியாவின் Jet Airways விமான சேவை தனது சேவைகளை முடங்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள Jet Airways மேலும் பல தனது விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி வைத்துள்ளது. அந்த விமானங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்த முடியாமையே சேவை இடைநிறுத்தத்துக்கு காரணம். . Jet Airways விமான சேவையிடம் ஏறக்குறைய 100 விமானங்கள் உண்டு. அவற்றில் சுமார் 50 விமானங்களை தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. […]

முகேஷ் கடனை செலுத்த, அனில் சிறையை தவிர்த்தார்

இந்தியாவின் மிக பெரிய செல்வந்தர்களில் சகோதரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் இருவர். தந்தையின் சொத்தை முதலாக கொண்டு இருவரும் வர்த்தகத்தில் வளர்ந்தனர். அவ்வப்போது தம்முள்ளே மோதியும் கொண்டனர். . அண்ணன் முகேஷின் மொத்த சொத்துக்கள் தற்போது சுமார் $52.9 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தனது மகளின் திருமண விழாவுக்கு மட்டும் அண்மையில் சுமார் $200 மில்லியன் செலவு செய்திருந்தார். . ஆனால் அனில் அம்பானி விரைவில் தனது சொத்துக்களை இழந்து வந்தார். 2008 ஆம் […]

மொசாம்பிக்கில் சூறாவளிக்கு 1,000 பேர் வரை பலி

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கை (Mozambique) கடந்த வியாழன் தாக்கிய Idai என்ற சூறாவளிக்கு சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சூறாவளி Beira என்ற நகரை 177 km/h காற்று வீச்சில் தாக்கி உள்ளது. . சுமார் 500,000 மக்களை கொண்ட Beira நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறது ஐ.நா. . இந்த நகருக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்குமான பாதைகளும் முற்றாக […]

அஸ்ரேலிய குடிவரவு எதிர்ப்பு செனட்டருக்கு முட்டையடி

குடிவரவாளர்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்ட அஸ்ரேலிய செனட்டர் (Senator) Fraser Anning கின் தலையில் இளைஞர் ஒருவர் முட்டை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட செனட்டர் இளைஞரை தாக்க, இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. சூழ இருந்தோர் விரைந்து இருவரையும் கட்டுப்படுத்தினர். . இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மெல்பேர்ன் (Melbourne) நகரில் நிகழ்ந்துள்ளது. Hompton வாசியான 17 வயது இளைஞன் தனது இடது கையால் smart phone மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே வலது கையால் முட்டையை […]

8 ஆண்டு சிரியாவின் யுத்தத்துக்கு 370,000 பேர் பலி

அந்நியர்களால் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிரியாவில் உருவாக்கப்பட்ட யுத்தத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 370,000 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . 2011 ஆம் ஆண்டு சவுதி, கட்டார், UAE, அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் அசாத்தை (Bashar al-Assad) பதவியில் இருந்து விலக்கி தமக்கு சாதகமான ஒருவரை பதவியில் அமர்த்த குழப்பத்தை உருவாக்கின. ஆரம்பத்தில் அசாத் பாரிய தோல்விகளை அடைந்து வந்தார். அனால் ரஷ்யாவும், ஈரானும், கூடவே லெபனானின் ஹொஸ்புல்லா இயக்கமும் […]

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் சூடு, 49 பேர் பலி

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளன. Al Noor மற்றும் Linwood பள்ளிவாசல்களிலேயே மேற்படி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. . இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். . அதேவேளை போலீசார் தாம் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கூறி உள்ளனர். அஸ்ரேலியாவை […]