1971 ஆம் ஆண்டில் இந்திய குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 5.2 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2016 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றுக்கு சராசரியா 2.3 பிள்ளைகள் மட்டுமே பிறந்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பெரும் நகர்களில் குடும்பம் ஒன்றுக்கான பிறப்பு விகிதம் 2.1 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை மாறாமல் இருக்க அந்நாட்டில் சராசரி பிறப்பு விகிதம் 2.1 ஆக இருத்தல் அவசியம். . மிகையான பிறப்பு விகிதம் இருந்த காரணத்தாலேயே 1971 ஆம் ஆண்டில் […]
அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்தியது போல, தானும் அஸ்ரேலியாவின் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்த எண்ணத்தில் கொண்டுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார் அஸ்ரேலியாவின் பிரதமர் Scoot Morrison. . இந்த திடீர் நாடகத்துக்கு காரணம் முன்னாள் Liberal கட்சி பிரதமர் Malcolm Turnbull இதுவரை பிரதிநியாக இருந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடாத்தப்பட உள்ளதே. சிட்னி நகர் பகுதில் உள்ள Wentworth என்ற இந்த தொகுதியில் வரும் சனிக்கிழமை, 20 ஆம் திகதி, இடைத்தேர்தல் நடைபெற […]
Microsoft என்ற பலம் வாய்ந்த software நிறுவனத்தை Bill Gates உடன் இணைந்து உருவாக்கிய Paul Allen என்பவர் இன்று தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். Non-Hodgkin’s lymphoma என்ற வகை புற்று நோய்க்கே இவர் பலியாகினார். . 1975 ஆம் ஆண்டு இவரும், Bill Gates உம் இணைந்து IBM நிறுவனத்துக்கு operating system வழங்கும் உரிமையை பெற்று இருந்தனர். அப்போது அவர்களிடம் அவ்வகை operating system இருந்திருக்கவில்லை. அதனால் இவர்கள் Tim Paterson […]
அண்மைக்காலம் வரை மேற்கின் விருப்பத்துக்குரிய மத்தியகிழக்கு நாடாக இருந்த சவுதி அரேபியா தற்போது மேற்கு நாட்டு நிறுவனங்களால் கைவிடப்பட்டு வருகிறது. துருக்கியில் உள்ள சவுதி தூதுவராகம் சென்ற Jamal Khashoggi என்ற பத்திரிகையாளர் தொலைவானதே இதற்கு காரணம். . இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் பெரியதோர் முதலீட்டாளர் மாநாடு இடம்பெறவிருந்தது. சவுதி அரசினால் நடாத்தப்படவிருந்த இந்த அமர்வில் பல பெரிய நிறுவனங்கள் பங்குகொள்ள இருந்தன. இந்த […]
அமெரிக்க ரம்ப் அரசின் பிரமுகரான Zabiullah Mujahid கடந்த கிழமை கட்டாரில் (Qatar) நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்கா தலைமையில், நியூயார்கில் இடம்பெற்ற 9/11 தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானித்தானில் தொடுக்கப்பட்ட யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே இந்த முயற்சி ஆகும். . சுமார் 17 வருடங்களாக தலிபானுடன் போரிட்டு, அவர்களை அழிக்க முடியாமலும், ஆப்கானிஸ்தானில் ஒரு அமைதியான ஆட்சியை ஏற்படுத்த முடியாத நிலையிலும் உள்ள அமெரிக்கா தற்போது தலிபானுடன் நேரடியாக பேச முனைகிறது. . அமெரிக்கா தரப்பில் […]
சர்வதேச வின் நிலையத்துக்கு (IIS, International Space Station) இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ஏவுகணை இயந்திர கோளாறு காரணமாக பயணத்தை தொடராது வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த இரண்டு வீரர்களும் தப்பி உள்ளனர். . Alesey Ovchiin என்ற ரஷ்ய விண்வெளி வீரரும், Nick Haque என்ற அமெரிக்க வீரருமே இவ்வாறு விபத்தில் இருந்து தப்பியவர்கள். . Soyuz கலம் ஏவப்படத்தில் இருந்து முதல் 90 செக்கன்கள் வரை குளறுபடிகள் எதுவும் […]
அமெரிக்காவின் Dow Johns (30 blue-chip stocks) பங்கு சுட்டி இன்று புதன்கிழமை 831 புள்ளிகளால், அல்லது 3.15% ஆல், வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற இரண்டாவது பெரிய வீழ்ச்சி இதுவாகும். கடந்த பெப்ருவரி 5 ஆம் திகதி DOW 1,100 புள்ளிகளால் வீழ்ந்திருந்தது. . இன்று கூடவே S&P 500 பங்கு சுட்டியும் 3.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிநுட்ப நிறுவனங்களின் பங்குகளை பெருமளவில் கையாளும் NASDAQ பங்குச்சந்தையும் 4% க்கு மேலால் வீழ்ச்சி […]
தமிழ்நாட்டில் இடம்பெறும் அகழ்வாய்வுகளுக்கு இந்திய மத்திய அரசு இடராக இருக்கிறதா என்று கேட்க வைக்கின்றன மத்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள். . வைகை நதி கரையோரம், மதுரைக்கு தென்கிழக்கே, உள்ள கீழடி என்ற இடத்தில் சுமார் 2200 வருடங்களுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்று இருந்தமை அறியப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்கு முன் இவ்விடத்தை அகழ்வாய்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் பின்னர் நிதிகளை முடக்குவதன் மூலம் அகழ்வு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன. . 2016 ஆன் ஆண்டில் […]
ஐ. நா. வுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி கேலி (Nikki Haley) இந்த வருட முடிவில் தனது பதவியை விட்டு நீங்குவதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார். அவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் நிக்கியின் பதவிக்கு வேறு ஒருவரை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார். . 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பதவியை ஆரம்பித்த நிக்கி, இரண்டு வருடத்துள் தான் விலகுவதற்கான காரணத்தை கூறவில்லை. . நிக்கி தனது பதவி விலகலை தனது […]
அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இன்டர்போல் தலைவர் சில நாட்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது தனது இன்டர்போல் தலைவர் பதவியை விலகுவதாக கூறியுள்ளார். அதை அவர் சீனாவின் கட்டுபாட்டில் இருக்கையிலேயே கூறியுள்ளார். . சீனாவின் புதிய ஜனாதிபதி Xi Jingping காலத்தில் பல முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின் பல அதிகாரிகள் சிறைக்கும் சென்றுள்ளனர். அவ்வகை விசாரணை ஒன்றே Meng Hongwei என்ற இன்டர்போல் தலைவர் மீதும் […]