எத்தனை தினங்கள் நீடிக்கும் இந்த தொழில்நுட்ப யுத்தம்?

எத்தனை தினங்கள் நீடிக்கும் இந்த தொழில்நுட்ப யுத்தம்?

படையினர் குதிரை ஏறி, யானை ஏறி கைகளில் வாள் ஏந்தி யுத்தம் செய்த காலம் மலையேறி தற்போது எல்லோரும் தமது தரப்பில் இரத்தம் சிந்தாது தொழிநுட்பங்களை ஏவி யுத்த வெற்றிகளை அடைய விரும்புகின்றனர்.  அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும் இவ்வகை யுத்தம் ஒன்றையே ஈரான் மீது ஏவியுள்ளது. ஆனால் இந்த யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும், இந்த கூட்டுக்கு தமது நாடுகளில் தளங்களை அமைக்க வசதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் எவ்வளவு காலத்துக்கு இந்த யுத்தத்தை தொடரலாம் என்பது சந்தேகமே. உதாரணமாக […]

ஈரானின் தாக்குதலுக்கு 6 அமெரிக்க படையினர் பலி 

ஈரானின் தாக்குதலுக்கு 6 அமெரிக்க படையினர் பலி 

குவைத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் செய்த தாக்குதலுக்கு பலியான படையினர் தொகை 6 ஆக உயர்ந்துள்ளது. Siren சத்தம் எதுவும் எதுவும் இன்றி Shuaiba துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் குவைத் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு இடம்பெற்று இருந்தாலும் முழு விபரமும் திங்கள் பிற்பகலே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு drone தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. Drone தாக்குதல் காரணமாக கட்டாரின் QatarEnergy நிறுவனம் LNG எரிவாயு உற்பத்தியை இடைநிறுத்தி உள்ளது. […]

சில அமெரிக்க விமானங்கள் குவைத்தில் விழுந்தன 

சில அமெரிக்க விமானங்கள் குவைத்தில் விழுந்தன 

ஈரான் மீதான தாக்குதல்களை செய்யும் சில அமெரிக்க யுத்த விமானங்கள் குவைத்தில் விழுந்துள்ளன என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் Said Al-Atwan கூறியுள்ளார். இன்று திங்கள் விழுந்த இந்த யுத்த விமானங்களின் விமானிகள் முறைப்படி பாராசூட் மூலம் தரை இறங்கி உள்ளனர். இவர்கள் உடனே வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அதேவேளை ஈரானில் மரணித்தோர் தொகை 555 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை மத்திய கிழக்கில் மட்டும் 3,400 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. அதனால் […]

பலத்த அழிவுகளுடன் 3ம் தினத்தை ஆரம்பிக்கும் ஈரான் யுத்தம்

பலத்த அழிவுகளுடன் 3ம் தினத்தை ஆரம்பிக்கும் ஈரான் யுத்தம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பித்த யுத்தம் இரு தரப்பிலும் பலத்த அழிவுகளுடன் 3ம் நாளாக தொடர்கிறது. இந்த யுத்தம் பல கிழமைகளுக்கு தொடரலாம் என்று ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாக ஈரானில் 250 பேர் வரை பலியாகியுள்ளனர். அதில் சுமார் 150 பாடசாலை மாணவிகளும் அடங்குவர். இஸ்ரேலில் ஈரான் செய்த பதில் தாக்குதல்களுக்கு குறைந்தது 10 பேர் பலியாகியும், 238 பேர் காயமடைந்து உள்ளனர். இஸ்ரேலின் Beit Shemesh நகரத்தில் ஈரானின் ஏவுகணைக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். […]

ஈரானின் Ayatollah Ali Khamenei பலியானார் என்கிறார் ரம்ப்

ஈரானின் Ayatollah Ali Khamenei பலியானார் என்கிறார் ரம்ப்

ஈரானின் இஸ்லாமிய தலைவர் Ayatollah Ali Khamenei சனிக்கிழமை தாம் செய்த தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலும் அவ்வாறே கூறியுள்ளது. Khamenei 1939ம் ஆண்டு பிறந்தவர். 1989ம் ஆண்டு முதல் இவரே ஈரானின் அதிகூடிய அதிகாரம் கொண்ட மத தலைவராக இருந்தவர். ஆனால் ஈரான் இதுவரை Khamenei இறந்தார் என்று அறிவிக்கவில்லை. Khamenei யின் குடியிருப்பு பகுதி குண்டு தாக்குதல்களால் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளமை செய்மதி படங்கள் மூலம் அறியப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் […]

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு 63 மாணவிகள் பலி?

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு 63 மாணவிகள் பலி?

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது செய்யும் தாக்குதலுக்கு ஈரான் Primary பாடசாலை மாணவிகள் 63 பேர் பலியாகியும், மேலும் 92 பேர் காயமடைந்து உள்ளதாக Mindab பகுதி ஆளுநர் கூறியுள்ளார். அமெரிக்க படைகளின் மத்திய அமைப்பான CENTCOM பேச்சாளர் Tim Hawkins மேற்படி தாக்குதல் தொடர்பான செய்தியை தாமும் அறிவோம் என்றுள்ளார். கட்டாரில் ஒருவர் உடைந்த ஏவுகணை பாகங்கள் விழுந்து பலியாகியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானை தாக்க, ஈரான் திருப்பி தாக்குகிறது 

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானை தாக்க, ஈரான் திருப்பி தாக்குகிறது 

சனிக்கிழமை காலை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க, ஈரானும் திருப்பி தாக்குகிறது. இதனால் மத்திய கிழக்கினூடான விமான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் படைகளை மட்டுமன்றி கொமெய்னி போன்ற ஈரானின் தலைமைகளையும் குறிவைத்துள்ளது. ஆனால் அழிவு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. ஈரான் பதிலுக்கு டுபாய், அபுதாபி போன்ற UAE நகரங்கள், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை நோக்கியும், இஸ்ரேலை நோக்கியும் ஏவுகணை தாக்குதல்களை செய்கிறது. இரண்டு தரப்புக்கும் இது […]

AAP முதலமைச்சர் Kejriwal நிரபராதி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

AAP முதலமைச்சர் Kejriwal நிரபராதி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், 2024ம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் மோதி தலைமையிலான அரசு Aam Admi Party (AAP) கட்சியின் முன்னாள் டெல்லி முதலமைச்சர் Arvind Kejriwal ஐயும் மேலும் 23 அக்கட்சி உறுப்பினர்களையும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த இந்திய உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் Kejriwal குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது. அத்துடன் இந்த அரைகுறை குற்றச்சாட்டை முன்வைத்து Kejriwal ஐ கைது செய்த Central Bureau […]

அமெரிக்க-ஈரான் பேச்சுக்கள் இழுபாட்டில், ரம்ப் நெருக்கடியில்

அமெரிக்க-ஈரான் பேச்சுக்கள் இழுபாட்டில், ரம்ப் நெருக்கடியில்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்கள் மீண்டும் இணக்கம் எதுவும் இன்றி முடிந்துள்ளன. அடுத்த பேச்சுக்கள் அடுத்த கிழமை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஈரானை மிரட்டும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் மிக பெருமளவு இராணுவ தளபாடங்களை மத்திய கிழக்கில் குவித்துள்ளார். தற்போது மத்திய கிழக்கில் குவிந்துள்ள ஆயுத, இராணுவ தளபாட தொகை 2003ம் ஆண்டு அமெரிக்காவால் சதாமுக்கு எதிராக குவிக்கப்பட்ட தொகைக்கு நிகராக உள்ளது. இந்நிலையில் ரம்ப் தன்னை தானே இரண்டு மூலைகளுள் முடக்கி உள்ளார். […]

அமெரிக்க வள்ளத்தில் வந்தோரை கியூபா சுட்டு 4 பேர் பலி

அமெரிக்க வள்ளத்தில் வந்தோரை கியூபா சுட்டு 4 பேர் பலி

அமெரிக்காவின் பிளோரிடா (Florida) மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு FL7726SH என்ற பதிவு இலக்கத்தை கொண்ட 24 அடி நீள வள்ளத்தில் (speedboat) கியூபாவின் கடல் எல்லைக்குள் புதன்கிழமை நுழைந்தோரை நோக்கி கியூபாவின் எல்லை பாதுகாவல் படைகள் சுட்டதால் 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோர் விபரம், இவர்களின் நோக்கம் ஆகியன இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவும், கியூபாவும் தனித்தனியே தமது சொந்த விசாரணைகளை செய்கின்றன. அந்த வள்ளத்தில் பயணித்த மேலும் 6 பேர் தமது காயங்களுக்கு கியூபாவில் வைத்தியம் பெற்று வருகின்றனர். கியூபாவின் Villa […]

1 12 13 14 15 16 386