விண்கற்களில் இருந்து பூமியை பாதுகாக்க சீனாவும் முயற்சி 

விண்கற்களில் இருந்து பூமியை பாதுகாக்க சீனாவும் முயற்சி 

விண்கற்கள் பூமியுடன் மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கணைகளை ஏவும் முயற்சியில் சீனாவும் ஈடுபடுகிறது. சீனாவின் இந்த முயற்சி அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் கொண்டுள்ள DART திட்டத்திலும் தரம் உயர்ந்தது. இந்த இரண்டு வழிகளின் நோக்கங்களும் கணைகளை வேகமாக விண்கல்லில் மோதி அதன் ஓடுபாதையை பூமிக்கு அப்பால் தள்ளி விடுவதே. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி ஏவப்பட்ட அமெரிக்காவின் பரிசோதனை கணை 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி 10.9 மில்லியன் km தொலைவில் பயணித்த 160 […]

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள இட பொருட்களுக்கு பெல்ஜியம் தடை

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள இட பொருட்களுக்கு பெல்ஜியம் தடை

West Bank, Golan Heights, காசா ஆகிய இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் தடை விதிக்கிறது. குறிப்பாக காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களுக்கு பதிலடியாகவே பெல்ஜியம் இந்த தடையை நடைமுறை செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் கூட்டாக இவ்வகை தடை ஒன்றை செய்ய பேச்சுக்களை செய்து வந்தாலும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்கில் பேச்சை திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யும் நிலையில் பெல்ஜியம் […]

530 ரோஹிங்கிய அகதிகள் கடலில் பலி?

530 ரோஹிங்கிய அகதிகள் கடலில் பலி?

இரண்டு வள்ளங்களில் பர்மா-பங்களாதேஷ் எல்லை பகுதி கரையோரத்தில் இருந்து பயணித்த 530 ரோஹிங்கிய அகதிகள் அவர்கள் பயணித்த வள்ளங்கள் கவிழ்ந்து பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதம் 29ம் திகதி காலை ஒரு வள்ளமும் பிற்பகல் இன்னோர் வள்ளமும் தெற்கு நோக்கி 530 அகதிகளுடன் பயணித்துள்ளன. இவர்களின் நோக்கம் தெற்கு பர்மா அல்லது இந்தோனேசியாவை அடைவதாக இருந்திருக்கலாம். இவ்வாறு செல்வோர் 10 தினங்களுக்குள் செல்லுமிடம் அடைந்த செய்தியை தமது குடும்பங்களுக்கு அறிவிப்பர். ஆனால் மேற்படி அகதிகள் எவரும் தமது […]

24 மணி நேரத்துள் 20% ஹோர்முஸ் கட்டணத்தை கைவிட்டார் ரம்ப்

24 மணி நேரத்துள் 20% ஹோர்முஸ் கட்டணத்தை கைவிட்டார் ரம்ப்

எதையும் முன்பின் யோசியாது பேசும் ரம்ப் உலகின் மிகப்பெரிய வல்லரசின் சனாதிபதி பதவியில் இருக்கையிலும் அவ்வாறே முன்பின் யோசியாது பேசி வருகிறார். ரம்ப் வாய்க்கு வந்தபடி ஹோர்முஸ் பாதை ஊடு செல்லும் கப்பல்கள் 20% பெறுமதியை அமெரிக்காவுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று திங்கள் கூறியிருந்தார். அந்த அறிவிப்பால் திகைப்படைந்த சவுதி, UAE, பஹ்ரைன், குவைத், கட்டார் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் வெள்ளை மாளிகையிடம் விபரம் கேட்க வெள்ளை மாளிகை முழிக்க ஆரம்பித்தது. இறக்குமதி/ஏற்றுமதி செய்வோரே […]

ஊழல் நிறைந்த நைஜீரியா, ஒரு போலி அரச திணைக்களம் 

ஊழல் நிறைந்த நைஜீரியா, ஒரு போலி அரச திணைக்களம் 

கொஞ்சமாக கொள்ளையடித்தால் போதாது என்று மொத்தமாக கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நைஜீரியாவில் ஒரு போலியான அரச திணைக்களம் அமைக்கப்பட்டமை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. Adeniyi Adeyemi என்பவர் தனக்கு அந்த நாட்டு சனாதிபதியால் Presidential Foreign Intervention Promotion Council (PFIPC) என்ற திணைக்களத்தின் Director-General பதவிக்கான கடிதம் வழங்கப்பட்டது என்று கூறி ஒரு அரச திணைக்களத்தையே இயக்கி வந்துள்ளார். உண்மையில் அந்த கடிதம் பொய்யானது என்றும், PFIPC திணைக்களமும் பொய்யானது என்று அரசு தற்போது கூறுகிறது. Adeyemi தற்போது […]

ஹோர்முஸ் ஊடு செல்ல ரம்ப் 20% கட்டணம் அறிவிப்பு

ஹோர்முஸ் ஊடு செல்ல ரம்ப் 20% கட்டணம் அறிவிப்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் சண்டை உக்கிரம் அடைந்த நிலையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஹோர்முஸ் நீரிணை ஊடு செல்லும் கப்பல்கள் காவும் பொருட்களின் பெறுமதியின் 20% பெறுமதியான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று இன்று திங்கள் கூறியுள்ளார். இன்று முதல் அமெரிக்காவே “The Guardian of the Hormuz Strait” என்றும் ரம்ப் கூறியுள்ளார். ரம்புக்கு 20% கட்டணம் செலுத்தினாலும் அவ்வழியே செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி அழித்தால் அமெரிக்கா அந்த கப்பல்களுக்கோ, அவற்றில் காவப்படும் பொருட்களுக்கோ நட்டஈடு வழங்கப்போவது இல்லை. சாதாரணமாக நட்டஈடு காப்புறுதி நிறுவனங்களாலேயே வழங்கப்படும். […]

இந்துக்களை சிறைக்கு அனுப்பிய இஸ்லாமிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் 

இந்துக்களை சிறைக்கு அனுப்பிய இஸ்லாமிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் 

2022ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றி சென்ற 50 வயதான Nazir Ahmad என்ற இஸ்லாமியரையும் வேறு இருவரையும் 14 இந்துவாதிகள் இடைமறித்து தாக்கினர். தாக்குதலுக்கு உள்ளான Nazir Ahmad பலியானார். காயங்களுக்கு உள்ளான ஏனைய இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாக்குதல் செய்த 14 பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த Tabassum Khan என்ற இஸ்லாமிய பெண் நீதிபதி ஜூன் 12ம் திகதி 14 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தார். […]

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் Hasina நாடு திரும்புகிறார்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் Hasina நாடு திரும்புகிறார்

சுமார் 20 ஆண்டுகள் பங்களாதேஷை ஆட்சி செய்து பின் 2024ம் ஆண்டில்  ஆர்ப்பாட்டகாரர்களால் விரட்டி அடிக்கப்பட இந்தியாவுக்கு தப்பி ஓடிய முன்னாள் பிரதமர் ஹசீனா, வயது 78, தான் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் சென்று சரண் அடைய உள்ளதாக கூறியுள்ளார். தானும் அவரின் Awami League கட்சி உறுப்பினர்களும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம் என்று ஹசீனா கூறியுள்ளார். ஹசீனா இந்தியாவுக்கு தப்பிய நிலையில் பங்களாதேஷ் war-crime நீதிமன்றம் கடந்த நவம்பர் […]

ஸ்பெயின் காட்டு தீக்கு 12 பேர் பலி, 23 பேர் தொலைவு 

ஸ்பெயின் காட்டு தீக்கு 12 பேர் பலி, 23 பேர் தொலைவு 

ஸ்பெயின் நாட்டில் தற்போது பல இடங்களில் பரவும் காட்டு தீகளுக்கு இதுவரை 12 பலியாகியும், 23 இருப்பிடம் அறியப்படாது தொலைந்தும் உள்ளனர். தற்போது தெற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நீண்ட காலமாக நிலவுகிறது. ஸ்பெயினில் நீண்ட காலமாக வெப்பநிலை 40 C ஆக இருந்துள்ளது. நீண்ட கால வெப்பத்தால் காய்ந்து வறண்டு சருகுகள் ஆக்கப்பட்ட இலைகளில் மின்னல் பட அவை இலகுவில் தீ பற்றி கொள்ளும். பலமாக வீசும் காற்று தீயை வேகமாக புதிய இடங்களுக்கு பரவ வைக்கும். சுமார் […]

யுத்த நிறுத்தம் முறிந்தது, மீண்டும் அமெரிக்க-ஈரான் யுத்தம் 

யுத்த நிறுத்தம் முறிந்தது, மீண்டும் அமெரிக்க-ஈரான் யுத்தம் 

அமெரிக்கா MoU வுக்கு அமைய நடைமுறை செய்திருந்த ஈரானுடனான யுத்த நிறுத்தத்தை முறித்து மீண்டும் ஈரானை தாக்க ஆரம்பித்துள்ளது. பதிலுக்கு ஈரானும் பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட யுத்த நிறுத்த இணக்கப்படி இஸ்ரேல் லெபனான் மீது செய்யும் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும்.  ஆனால் இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை தாக்கி வருகிறது. இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியாது அமெரிக்கா முழிக்கும் நிலையில் ஈரான் […]

1 … 10 11 12 13 14 … 395