Shuanghui International of China என்ற சீன இறைச்சி பதனிடும் நிறுவனம் Smithfield Foods என்ற அமெரிக்க இறைச்சி பதனிடும் நிறுவனத்தை 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யவுள்ளது. பொதுவாக சீன நிறுவனங்கள் சீன தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்வதுண்டு. ஆனால் அமெரிக்காவின் உள்ளேயே இந்த அளவில் முதலிட்டு சீன நிறுவனம் வணிகம் செய்வது இதுவே முதல்தடவை. அதேவேளை Smithfield தயாரிப்புகளும் சீன பாவனையாளரை சென்றடைகின்றன. சீனாவில் பெரியதோர் இறைச்சி பதனிடும் நிறுவனமான Shuanghui ஜப்பான், […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் Arizona மாநிலத்தின் senator பதவியில் உள்ளவருமாகிய John McCain திங்கள்கிழமை சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடும் ஆயுததாரிகளை சந்திக்க சென்றுள்ளார். இவர் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான குழுக்களை மட்டுமே சந்தித்துள்ளார். குறிப்பாக ஜெனரல் Salim Idris என்றபவரை McCain சந்தித்திளார். 2011 ஆம் ஆண்டில் லிபியாவில் நடைபெற்ற கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளின்போதும் McCain அங்கு சென்று கிளர்ச்சிக்குளுக்களுக்கு உதவி வழங்கியிருந்தார். லிபியா, சிரியா போன்ற நாடுகளில் […]
ஜப்பான் நாட்டின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான SHARP இன் 2012 ஆம் ஆண்டுக்கான நிகர நட்டம் US $5.4 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 2011 ஆண்டுக்கான நிகர நட்டம் US $4.7 பில்லியன் ஆக இருந்ததுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் Ever-Sharp என்ற mechanical pencil களை தயாரித்ததால் SHARP என்ற பெயரை கொண்டிருந்தது. அண்மை காலங்களில் cell phone, LCD panel, calculators, printers, தொலைக்காட்சிகள் என பலதரப்பட்ட பொருட்களை […]
அந்நியர்களால் ஆரம்பிக்கப்பட்டு 70,000 அதிகமான உயிர்களை பலிகொண்ட சிரியா யுத்தம் இப்போ ஒருபடி மேலே போகிறது. அண்மையில் சிரியாவுக்கு S-300 என்ற ஏவுகணைகளை ரஷ்யா வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அமெரிக்காவின் செயலாளர் John Kerry இந்த விற்பனை இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றுள்ளார். அதேவேளை சிரியாவில் கிளர்ச்சி புரிவோருக்கு U$ 100 மில்லியன் மேலதிக உதவிகளையும் அமெரிக்கா செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த யுத்தத்தை மேற்கு ஆரம்பித்ததே இஸ்ரவேலுக்கு எதிரான […]
ஆஸ்திரேலியா அண்மையில் ஒரு பதிய விசா வகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விசேட முதலீட்டாளர் விசா முறைமை சீனாவில் பெருகிவரும் செல்வந்தர்களையே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசா வகுப்பு முறைமை குறைந்தது A$ 5 மில்லியன் முதலீட்டை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வோருக்கு 5 வருடம் வாழ விசா வழங்குகிறது. அந்த 5 வருடத்தின் பின் விரும்பின் அவர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறவும் உரிமை உண்டு. இதுவரை சுமார் 170 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் அதிகமானோர் சீன பிரசைகள். […]