சீனாவுடன் ஒத்துழைக்க பயணிகள் விமானக்களுக்கு ஒபாமா அறிவுரை

சீனாவின் புதிய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லைக்குள் செல்லும் அமரிக்க விமானக்களை சீனாவின் வேண்டுகோளுக்கு அமைய முன்கூட்டியே அறிவிக்குமாறு ஒபாமா அரசு கேட்டுள்ளது. அமெரிக்க வான்படை சீனாவின் இந்த புதிய வான் பரப்பு எல்லை சட்டத்தை மீறினாலும், அமெரிக்க பயணிகள் மீறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் ஜப்பான் அரசு தமது பயணிகள் விமானக்களை அவ்வாறு சீனாவுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம் என கூறியுள்ளது. அதேவேளை தாம் இந்த வான் பரப்பை தொடர்ச்சியாக கண்காணிக்க தொடங்கியுள்ளதாக […]

சீனாவின் வான் எல்லையை மீறியது அமெரிக்கா

கடந்த வாரம் சீனா நடைமுறைப்படுத்திய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லையை அமெரிக்கா மீறியுள்ளது. இன்று செவ்வாய் கிழமை Guam இல் இருந்து புறப்பட்ட இரண்டு அமெரிக்க B52 குண்டுபோடும் விமானங்கள் இந்த சீன வான் பரப்பை உத்தரவின்றி கடந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த பறப்பு சீனாவின் அறிவிப்புக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான Pentagon கூறியுள்ளது. அத்துடன் இப்பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது எனவும் தாம் இங்கு தொடர்ந்தும் பறக்கவுள்ளதாகவும் Pentagon கூறியுள்ளது. சீனா […]

கிழக்கு சீன கடலின் மேல் சீன வான் பாதுகாப்பு வலயம்

சீனாவின் உதவியுடன் அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் ஒரு இணக்கத்தை காணும் அதே வேலையில் சீன கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியுள்ளது (East China Sea Air Defense Identification Zone). இந்த வலயம் சீன எல்லைகளுக்கு வெளியே உள்ளது. அதுமட்டுமன்றி சர்ச்சைக்குரிய Diaoyu தீவுகளும் இந்த வலயத்துள் அடக்கப்பட்டுள்ளது. இதை சீனா கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் அறிவிப்புப்படி இந்த வலையத்துள் புகும் எந்தவொரு விமானமும் சீன அரசின் அனுமதியை பெற்றிருக்க […]

ஈரான்-மேற்கு முதல்படி இணக்கம், இஸ்ரவேல் குமுறல்

ஜெனீவாவின் நேரப்படி ஞாயிறு காலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் 6-மாத கால உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கியுள்ளன. ரசியாவும், சீனாவும் ஈரானின் நலன்களை பாதுகாக்க மற்றைய 4 நாடுகளும் ஈரானின் எதிர்ப்பு நாடுகளின் நலன்களை பாதுகாத்தன. வழமை போல் இந்த உடன்படிக்கையும் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தை 2006 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த […]

U$ 13 பில்லியன் தண்டம் கட்டும் JPMorgan வங்கி

JPMorgan வங்கி உலகில் இரண்டாவது பெரியது, அமெரிக்காவில் முதலாவது பெரியது. இதன் ஆரம்பம் 1895. 2000 அம்ம ஆண்டில் இதுவும் அமெரிக்காவின் மற்றுமோர் வங்கியான Chase Manhattan உடன் இணைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் இதன் மொத்த சொத்துக்கள $2500 பில்லியனுக்கும் அதிகம் (1.5 ரில்லியன்). 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலங்களில் JPMorgan பல பெரு நட்டங்களை எதிர்பார்க்கக்கூடிய முதலீடுகளில் பங்கெடுத்தது. வேறு பல வங்கிகளும் வீடு அடமான நிறுவனக்களும் இவ்வாறு […]

இலங்கையில் சீனா U$ 500 மில்லியன் முதலீடு

அண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட […]

ஒரு-குழந்தை சட்டத்தை தளர்க்கும் சீனா

சீனாவின் தற்போதைய அதீத வளர்ச்சிக்கு தந்தையான டெங் சியாஒ பிங் (Deng Xiao Ping) அறிமுகப்படுத்திய கடுமையான சட்டங்களில் ஒன்று ஒரு-குழந்தை சட்டம். இந்த சடத்தின் கீழ் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தவறின் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாரிய குற்றப்பணம் செலுத்துதல், மானியங்கள் குறைப்பு, பாடசாலை வசதிகள் மறுப்பு போன்றன இந்த தண்டனைகளில் அடங்கும். இந்த சட்டம் Hong Kong, Macau போன்ற விசேட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இரணை பிள்ளைகளும் இந்த […]

ஈரான் அணுசக்தி: ஒபாமா தவிக்கிறார், இஸ்ரேல் குமுறுகிறது

ஈரான் அணுசக்தி உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஈரான் தமது அணுசக்தி உற்பத்தி மின்சக்தி போன்ற தேசநலன் பயன்பாடுகளுக்கு மட்டுமே அன்றி அணு ஆயுத பயன்பாடுகளுக்கு அல்ல என்கிறது. ஆனால் ஈரானின் பரம எதிரி இஸ்ரேல் உட்பட அமெரிக்கா நட்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மற்றைய சிறிய நாடுகளையும் பயமுறித்தி ஈரானின் மீது தடைகளை விதிக்க தூண்டுகிறது. தடைகளின் மத்தியிலும் […]

பங்களாதேசத்தில் 152 எல்லைக்காவல் படையினருக்கு மரணதண்டனை

பங்களாதேசத்தில்எல்லை காவல்படையினருக்கு அந்நாட்டின் இராணுவத்துக்கு உள்ள சலுகைகள், உரிமைகள் இல்லை. பங்களாதேசத்தின் 4000 km இக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பர்மா எல்லைகளில் காவல் புரியும் இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. இதை எதிர்த்து எல்லை காவல் படையினர் 2009 ஆம் ஆண்டில் சிறு புரட்சி ஒன்றை செய்திருந்தனர். இந்த புரட்சி 33 மணித்தியாலங்களே நீடித்தது. இந்த 33 புரட்சியின் முடிவில் 57 உயர் மற்றும் நடுத்தர இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 74 பெயர்கள் கொல்லப்பட்டிருந்தனர். […]

எகிப்தை தண்டிக்கவில்லை என்கிறர் John Kerry

ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றிகொண்டு பதவிக்கு வந்த மோர்சி தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த ஜெனரல் அல்-சிஸ்சி (al-Sissi) தலைமையிலான அரசை முன் அறிவித்தல் எதுவும் இன்றி இன்று ஞாயிறு சென்று சந்தித்துள்ளார் அமெரிக்காவின் Secretary of State John Kerry. சில மாதங்களின் முன் ஒபாமா அரசு மோர்சியின் வெற்றியில் பங்குகொண்டு பிரச்சாரங்கள் செய்திருந்ததை மறந்து இப்போ Kerry எகிப்து சென்று மோர்சியை சிறை வைத்த இராணுவ சதியாளரை […]