வடக்கு, தெற்கு கொரியா நேரடி பேச்சு

வடகொரியாவும் தென்கொரியாவும் இந்த மாதம் 9ஆம் திகதி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. தென்கொரியாவின் இந்த விருப்பத்தை வடகொரியா ஏற்றுள்ளதாக தென்கொரியாவின் அமைச்சர் Baik Tae-hyun இன்று வெள்ளி தெரிவித்து உள்ளார். . கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியா இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடாத்த விரும்புவதாக கூறி இருந்தது. அதற்கு முன்னர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தாம் தமது விளையாட்டு வீரர்களை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic போட்டிகளுக்கு அனுப்ப உள்ளதாக கூறி […]

கொழும்பில் சீனாவின் மூன்று 60-மாடி கட்டிடங்கள்

சீனா சுமார் U$1 பில்லியன் செலவில் மூன்று 60-மாடி கட்டிடங்களை கொழும்பு நகரில் கட்டவுள்ளது. இந்த கட்டிடங்கள் Colombo International Financial City அபிவிருத்தியின் ஒரு அங்கமாக இருக்கும். . Colombo International Financial City அபிவிருத்திக்காக ஏற்கனவே சீனா, U$ 1.4 பில்லியன் செலவில், Gall Face பகுதியில் கடலை நிரப்பி 269 hectare நிலத்தை உருவாக்குகிறது. கடலை நிரப்பும் வேலை 60% பூர்த்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. . இந்த கட்டுமான வேலைகள் சுமார் 83,000 […]

ஈரானுள் கலவரங்கள், 21 பேர் பலி

ஈரானுள் கடந்த சில நாட்களாக கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த கலவரங்களுக்கு குறைந்தது 21 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். . கலவரங்கள் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன. ஒரு இடத்தில் அல்லாமல், நாட்டின் பல நகரங்களில் இந்த கலவரங்கள் இடம்பெறுகின்றன. ஈரானின் உள்ளக அமைச்சரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டு உள்ளோரில் 90% மானோர் 25 வயதுக்கும் குறைவானவரே. . கலவரத்தை செய்வோர் குறிப்பாக எந்தவொரு காரணத்தையும் வெளியிடவில்லை அல்லது பகிரங்கம் […]

கடுங்குளிரால் கனடாவில் புதுவருட நிகழ்வுகள் இரத்து

கனடாவின் பல நகரங்கள், அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக, புதுவருட நிகழ்வுகள் பலவற்றை இரத்து செய்துள்ளன. இந்த நகரங்கள் வாணவேடிக்கை போன்ற சில நிகழ்வுகளை மட்டும் நடாத்தும். . வழமையாக புதிய வருடம் பிறக்கும் வரைக்கும் பல மணித்தியால நிகழ்வுகளை இந்த நகரங்ககள் செய்வதுண்டு. பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளே இடம்பெறும். அவ்வகை நிகழ்வுகள் பொதுவாக இரத்து செய்யப்பட்டு உள்ளன. . Calgary, Winnipeg, Toronto, Ottawa, Montreal, Quebec City, Charlottetown ஆகிய பிரதான நகரங்கள் […]