ரஷ்யாவில் Huawei நிறுவனத்தின் 5G

ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு Huawei என்ற சீன நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை அமெரிக்காவுள் முழுமையாக தடை செய்த நிலையில், ரஷ்யா Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை நடைமுறை செய்யவுள்ளது. MTS என்ற ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனமே Huawei நிறுவனத்துடன் இணைந்து செய்யப்படவுள்ளது. . இந்த அறிவிப்பு சீன ஜனாதிபதி ரஷ்யாவுக்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள  காலத்திலேயே வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் 5G தொழிநுட்பத்தில் இணைவது அமெரிக்க ஆதரவு கொண்ட 5G நிறுவனங்களுக்கு […]

சீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு

இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சீன எல்லையோரம் தொலைந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு Mechuka என்ற விமான தளத்தில் தரையிறக்கவிருந்த AN-32 வகை விமானமே இவ்வாறு தொலைந்துள்ளது. . அருணாச்சல் பிரதேசத்தில், சீன எல்லையில் இருந்து சுமார் 30 km தூரத்தில், இந்த இறங்கு தளம் உள்ளது. தொலைந்த இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய படையினர் மேற்கொண்டு வருகின்றனர். . இந்த விமானத்தில் 13 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. […]

இந்தியாவில் கொடுமையான வெப்பம்

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பாகங்களில் வெப்பநிலை கொடுமையாக உள்ளது. இதன் காரணமாக மக்களை தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்த வேண்டாம் என்று கேட்டுள்ளது அரசு. பதிலாக குளிர் பானங்களை அருந்தவும், பழங்களை உண்ணவும் மக்கள் கேட்கப்பட்டு உள்ளனர். . ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Churu என்ற நகரிலேயே அதி கூடிய வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்கு வெப்பநிலை 50.6 C ஆக இருந்துள்ளது. திங்கள் வெப்பநிலை 50.3 C ஆகவும், […]

​இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு

இலங்கையின் அனைத்து இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர்களும், உப அமைச்சர்களும் கூடவே இரண்டு ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர். தமக்கு எதிராக சில கடும்போக்கு சிங்கள அரசியல் மற்றும் பௌத்த மத தலைமைகள் கொண்டுள்ள ​வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த பதவி துறப்பு இடம்பெறுள்ளது. . அமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருப்பார். அத்துடன் அவர்கள் ஆளும் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பர். அதனால் ரணில் […]