சீன ஜனாதிபதியுடன் சந்திப்பேன் என்கிறார் ரம்ப்

தான் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்  இன்று செவ்வாய் கூறி உள்ளார். ரம்ப்  தனது கூற்றில் தான் சீயுடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், தாம் வரும் G20 அமர்வின் முன் நேரடியாக உரையாடவுள்ளதாகவும் கூறி உள்ளார். . இவர்கள் உரையாடல் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாதுவிடின் தொடரும் வர்த்தக போர் மேலும் உக்கிரம் அடையும். . G20 அமர்வு அடுத்த கிழமை, ஜூன் […]

எகிப்தின் மோர்சி நீதிமன்றில் மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மோர்சி (Mohammed Morsi) இன்று நீதிமன்றில் மரணதாகியதாக எகிப்தின் அரசு அறிவித்து உள்ளது. 2013 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன் இராணுவ ஆட்சியை அமைத்த சிசி (Sisi) மோர்சி மீது பல வழக்குகளை தொடர்ந்திருந்தார். . மோர்சியின் கட்சியான Muslim Brotherhood மோர்சியின் மரணத்தை முழு அளவிலான படுகொலை (full-flesged murder) என்று கூறியுள்ளது. . சிறையில் இருந்த மோர்சிக்கு வைத்திய, மற்றும் சட்டத்தரணி உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. […]

ரஷ்யாவை பின் தள்ளியது சீன கடற்படை?

சீனாவின் கடற்படை ரஷ்யாவின் கடற்படை வல்லமைக்கும் மேலாக வளர்ந்து, ரஷ்யாவின் கடற்படையை பின் தள்ளிவிட்டது என்கிறது German Institute for International and Security Affairs என்ற ஆய்வு அமைப்பு. . சீனாவின் கடற்படை இந்த வளர்ச்சியை ரஷ்யாவின் கடல்படையுடன் இணைந்து செய்துகொண்ட பயிற்சிகள், அறிவு பரிமாற்றங்கள் ஆகியன மூலமே பெற்றது என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு அமைப்பு. ஆனாலும் ரஷ்சியா சீனாவின் வளர்ச்சியையிட்டு பெரிதும் கவலை கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பலத்தை […]

இலங்கை வருகிறார் Pompeo

  அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக் பம்பியோ (Mike Pompeo) இந்த மாதம் 24 ஆம் திகதி வரவுள்ளார். இந்திய தலைநகர் டெல்கிக்கான பயணத்தின் பின் இலங்கை வரும் இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. . இவரின் இலங்கை பயணம் சீனாவின் ஆளுமைக்குள் இருக்கும் இலங்கையை அமெரிக்கா பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கும். . அதேவேளை இந்திய அமெரிக்க பொருட்கள் மீது இன்று சனிக்கிழமை புதிய இறக்குமதி […]

உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தலைவர் கைது

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் பல தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து சுமார் 250 பேரை பலியாக்கிய செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் Hayathu Mohamed Ahmed Milhan என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இண்டர்போல் (Interpol) அமைப்பு கூறியுள்ளது. . இவருடன் மேலும் 4 பேர் அடையாளம் அறிவிக்கப்படாத மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வெள்ளிக்கிழமை […]

மேலும் இரு எண்ணெய் தாங்கிகள் மீது தாக்குதல்

பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது இன்று வியாழன் தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. தாக்குதல்கள் காரணமாக அந்த கப்பல்கள் தீ பற்றிக்கொண்டன. . இந்த தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று உடனடியாக அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது. ஆனால் ஈரான் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. . ஜப்பானின் Kokula என்ற கப்பலும், நோர்வேயின் Altair என்ற கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகின. அவற்றில் பணியாற்றிய ஊழியர்கள் […]

ஐ.நா.வில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இந்தியா

இந்தியா முதல் முறையாக ஐ.நா. வாக்கெடுப்பு ஒன்றில் பலஸ்தீனர்களுக்கு எதிராக வாக்களித்து உள்ளது.  பலஸ்தீனர்களின் மனித உரிமைகள் அமைப்பான Shahed, ஐ.நா.வின் Economical and Social Council என்ற அமைப்பில் பார்வையாளர் உரிமை பெறுவதை தடுக்கும் இஸ்ரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது இந்தியா. . இஸ்ரேலின் இந்த தீர்மானம் 28 ஆதரவு வாக்குகளையும், 14 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று நிறைவேறி உள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக […]

இந்தியா, பாகிஸ்தானை மிரட்டும் வாயு

தற்போது மும்பாய்க்கு 480 km தென்கிழக்கே தோன்றியுள்ள வாயு (Vayu) என்ற சூறாவளி இந்தியாவையும், பாகிஸ்தானையும் தாக்கவுள்ளதாக வானிலை நிலையங்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலம் இதனால் பலத்த பாதிப்புக்கு உள்ளாகலாம். . தற்போது இந்த சூறாவளியின் காற்று வீச்சு சுமார் 130 km/h ஆக உள்ளது. பின்னர் இதன் காற்று வீச்சு 165 km/h ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் இது Category 2 வகை சூறாவளி ஆகலாம். வேறு சில கணிப்புகள் […]

முன்னாள் பாக்கிஸ்தான் ஜனாதிபதி கைது

பாக்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Asif Ali Zardari இன்று தனது இஸ்லாமபாத் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது பல மில்லியன் டாலர் பணத்தை நாட்டில் இருந்து வெளியே எடுத்து சென்றார் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது. . முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது சகோதரி மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் ஆயிரக்கணக்கான பொய் வங்கி கணக்குகள் மூலமே சுமார் $400 மில்லியன் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. . ஆனால் இந்த குற்றசாட்டு அரசியல் […]

மீண்டும் Nadal வென்ற French Open

ஸ்பெயின் நாட்டவரான, 33 வயதுடைய, நடால் (Rafael Nadal) இன்று மீண்டும் French Open என்ற tennis போட்டியை வென்றுள்ளார். இது அவரது 12 ஆவது French Open வெற்றியாகும். இவர் 2005 ஆம் ஆண்டில், தனது 19 ஆவது வயதில், முதலாவது French Open வெற்றியை இவர் அடைந்திருந்தார். இதுவரையான இவரின் மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை 18 ஆகும். Roger Federer என்பவரிடம் மொத்தம் 20 வெற்றிகள் உண்டு. . இடது கை வல்லமை கொண்ட […]