ஈரான் இராணுவம் பயங்கரவாதிகள் என்கிறது அமெரிக்கா

இன்று திங்கள் ஈரானின் Iranian Revolutionary Guards Corps (IRGU) என்ற அரச இராணுவ பிரிவை ஒரு பயங்கரவாதிகள் குழு என்று பட்டியல் இட்டுள்ளது ரம்பின் அமெரிக்க அரசு. ஒரு நாட்டு அரச படைகளை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா பட்டியலிடுவது இதுவே முதல் தடவை. . உண்மையில் ரம்ப் இவ்வாறு செய்தது இஸ்ரேலில் நடைபெறும் தேர்தலில் தனது நண்பனான Netanyahu என்பருக்கு வாக்கு சேர்க்கும் நோக்கமே என்று கருதப்படுகிறது. . பயங்கரவாதிகள் என்ற பதமும், போராளிகள் என்ற […]

லிபியாவில் மீண்டும் சண்டை உக்கிரம்

லிபியாவில் மீண்டும் சண்டை உக்கிரம் அடைகிறது. ஜெனரல் Khalifa Hifter தலைமையிலான Libyan National Army என்ற ஆயுத குழு அந்நாட்டின் தலைநகர் Tripoli நோக்கி நகருகிறது. இந்த அணி, தலைநகரை பிடித்து, லிபியாவின் ஆட்சியை கைப்பற்ற முனைகிறது என்று நம்பப்படுகிறது. அதேவேளை தலைநகரில் உள்ள ஐ.நா. ஆதரவு கொண்ட இடைக்கால அரசை காப்பாற்ற ஐ.நாவும் சில மேற்கு நாடுகளும் முனைகின்றன. . Khalifa Hifter 1969 ஆம் ஆண்டு கடாபியின் தலைமையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பில் […]

Fatou Bensoudaவின் அமெரிக்க விசா பறிப்பு

சர்வதேச குற்ற நீதிமன்றின் (International Criminal Court) விசாரணையாளரான Fatou Bensoudaவின் அமெரிக்க விசா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை அமெரிக்காவின் State Department நேற்று வெள்ளி உறுதி செய்துள்ளது. . ஆப்கானித்தானில் அமெரிக்காவின் படைகள் குற்ற செயல்களை செய்தனரா என்பதை விசாரணை செய்யவே Fatou Bensouda அமெரிக்கா செல்லவிருந்தார். . ICC விசாரணையாளரின் விசா பறிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் சுதந்திரத்தையும், அதன் மக்களை நேர்மையற்ற விசாரணைகளில் இருந்து பாதுகாக்கவும் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை […]

மகனுக்கு Harvard அனுமதி, அதிகாரிக்கு அரை மில்லியன்?

அமெரிக்காவின் பல்கலைக்கழக அனுமதி ஊழல் தொடர்பாக மேலும் ஒரு சம்பவம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இந்த புதிய ஊழல் விவகாரம் அமெரிக்காவின் பிரபல Harvard University தொடர்பானது. . Harvard பல்கலைக்கழகத்தின் fencing என்ற வாள் ஏந்தி விளையாடும் விளையாட்டுக்கு பயிற்சி வழங்குபவரான (coach) Peter Brand என்பருக்கு அப்பகுதியில் ஒரு வீடு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அந்த வீட்டின் சந்தை விலை சுமார் $549,300 ஆக இருந்தும், Jie Zhao என்பவர் $989,500 வழங்கி அந்த […]

இரு Boeing விமானங்களும் விழ காரணம் ஒன்றே

எதியோப்பியாவின் Ethiopian Airlines விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும், இந்தோனேசியாவின் Lion Air விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும் விழ காரணம் ஒன்றே என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன. . இரண்டு நிகழ்வுகளிலும் விமானங்களில் உள்ள தாக்கல் கோணத்தை அளக்கும் கருவிகள் (Angle of attack sensor) தவறான தரவை வழங்க, விமானம் அளவுக்கு மிஞ்சி கீழ்நோக்கி பறக்க முனைந்து வீழ்ந்துள்ளன. அதாவது விமானம் சரியான […]

ஏப்ரல் 6 முதல் உங்கள் GPS பொய்கலாம்

உங்களிடம் உள்ள GPS (Global Positioning System) வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பின்னர் குழப்பத்துக்கு உள்ளாகலாம். குறிப்பாக இதன் திகதிகள் குழம்பி போகலாம். GPS மட்டுமல்லாது GPS சேவையை பயன்படுத்தும் smartphone மற்றும் server களும் குழப்பத்துக்கு உள்ளாகலாம். . GPS தொழில்நுட்பம் week counter என்ற கிழமைகளை எண்ணும் முறைமையை பயன்படுத்துகிறது. தற்போது இந்த week counter ஒரு 10-digit counter ஆகும். அதனால் இந்த week counter 00 0000 0000 […]

சவுதிக்கு அணுசக்தி அறிவு வழங்குகிறார் ரம்ப்

தனது கட்சியான Republican கட்சியையும், எதிர் கட்சியான Democrat கட்சியையும் மீறி, அவர்களுக்கு தெரியாது, அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இராணுவ பயன்பாடு கொண்ட அணுசக்தி அறிவுகளை சவுதிக்கு வழங்க முன்வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. . கடந்த கிழமை வெளிவந்த செய்திகளின்படி, ரம்பின் சக்திக்கான செயலாளர் (Energy Secretary) Rick Perry 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Part 810’ என்ற அனுமதி முறையை நடைமுறை செய்துள்ளார். அதன்படி அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தி தொடர்பான இரகசிய […]

Huawei 5G விடயத்தில் நியூசிலாந்து மனமாற்றம்?

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவும், நியூசிலாந்தும் தமது நாடுகளுள் சீன Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்ப உபகரணங்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்று தீர்மானம் எடுத்து இருந்தன. Huawei உபகரணங்கள் தமது நாடுகளை உளவு பார்க்கலாம் என்றே கரணம் கூறப்பட்டது. . ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டன. தற்போது நியூசிலாந்து தனது தீர்மானத்தை மாற்றலாம் என்று நம்பப்படுகிறது. . தற்போது சீனா சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர் சீன ஜனாதிபதி Xi JinPing, மற்றும் […]

அனைத்தையும் கேட்டார் ரம்ப், சந்திப்பை முறித்தார் கிம்

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் (Hanoi) பெப்ருவரி மாதம் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிய காரணமாக அமைந்த விடயத்தை ராய்டேர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரம்பின் வேண்டுகோள் பட்டியல் கிம்மை ஆத்திரமூட்ட, பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முறிந்திருந்தது. . Reuters கூற்றுப்படி கிம்மிடம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அமெரிக்காவிடம் வழங்கும்படி ரம்ப் கேட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க மற்றும் சர்வதேச அணுவாயுத நிபுணர்கள் அனைவரும் […]

மெக்ஸிகோவில் விண்கல் மோத, North Dakotaவில் எச்சங்கள்?

கனடிய எல்லையோரம் உள்ள அமெரிக்காவின் North Dakota மாநிலத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட உயிரின எச்சங்கள் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய மெக்ஸிகோ பகுதியில் வீழ்ந்து மோதிய விண்கல்லின் விளைவு என்று அகழ்வாய்வு கருதுகிறது. . North Dakota மாநிலத்து Bowman நகர் பகுதியில் அகழ்வு ஆய்வில் ஈடுபட்ட 12 ஆய்வாளர்களே இந்த எச்சங்களை கண்டுள்ளனர். இந்த அகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. . சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் மெக்ஸிகோவின் Yucatan […]

1 24 25 26 27 28 33