அமெரிக்கா, ஈரான் கைதிகளை பரிமாறின

பகிரங்கத்தில் அமெரிக்காவும், ஈரானும் வசைபாடிக்கொண்டாலும் மறைவில் அவர்கள் தம்மிடம் உள்ள கைதிகளை பரிமாறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் விளைவாக இரு தரப்பும் தம்மிடம் இருந்த கைதிகளை விடுதலை செய்துள்ளனர். . இன்று வியாழன் ஈரான் தன்னிடம் இருந்த அமெரிக்க கைதியான 48 வயதுடைய Michael White என்பவரை விடுதலை செய்துள்ளது. கடந்த 683 தினங்களாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த White தற்போது சுவிஸ் அரசின் விமானத்தில் அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். . முன்னாள் அமெரிக்க […]

இந்தியா, நேபாள் முறுகல், சீனா நடுவில்

இந்தியாவுக்கும் அண்டை நாடான நேபாளுக்கும் இடையில் கடந்த சில கிழமைகளாக முறுகல் நிலை ஏற்பாடு உள்ளது. அண்மையில் இந்தியா Kalapani பகுதி ஊடே 80 km நீளம் கொண்ட புதிய வீதி ஒன்றை திறந்து வைத்ததே இந்த முறுகல் நிலைக்கு காரணம். புதிய வீதி செல்லும் பகுதி தனது பகுதி என்கிறது நேபாள். . இந்த புதிய வீதி செல்லும் பகுதி இந்தியா, சீனா, நேபாள் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையோரம் உள்ளது. இந்தியா இந்த […]

நகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம்

கைவிலங்குடன் கட்டுபாட்டில் இருந்த George Floyd என்ற கருப்பு இனத்தவரை அமெரிக்காவில் வெள்ளை இன போலீஸ் ஒருவர் முழங்காலால் கழுத்தில் நெறித்து கொலை செய்ததன் பின் அமெரிக்காவின் பல்வேறு நகரங்ககளில் கடந்த பல தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றுள் பல கடை உடைப்பு, போலீஸ் வாகன தீ வைப்பு போன்ற வன்முறைகளில் முடிகின்றன. . வன்முறைகளால் விசனம் கொண்ட சனாதிபதி ரம்ப் திங்கள் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி, மாநிலங்கள் தமது National Guard […]

கரோனா சாட்டில் மோதி அரசு அடக்குமுறை ஆட்சி

இந்தியாவின் மோதி அரசு கரோனா பரவலை காரணம் கூறி அடக்குமுறை முறை ஆட்சி செய்கிறது என்று அமெரிக்காவின் Washington Post பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையின்படி மோதி அரசு குறிப்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு ஆராதவு இல்லாத பத்திரிகையாளர்களையே பெருமளவு இடருக்கு உள்ளாக்குகிறது. . கரோனா முடக்கத்தால் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர், வைத்தியம் தரமாக இல்லை, உணவு தட்டுப்பாடில் உள்ளனர், பொருளாதாரா இடரில் உள்ளனர் போன்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளரே கடுமையான […]

ரம்ப் நிகழ்த்த விரும்பிய G7 மாநாடு பின்போடப்பட்டது

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் நிகழ்த்த விரும்பிய G7 மாநாடு காலவரை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. ரம்ப் பிரித்தானிய பிரதமர், பிரெஞ்சு சனாதிபதி ஆகியோருடன் பலதடவைகள் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் விரும்பியபடி G7 மாநாடு ஜூன் மாதம் இடம்பெறாது. . இந்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் அரைகுறையாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ரம்ப் மாநாட்டை ஜூனில் நிகழ்த்த கடும் முயற்சி செய்துவந்தார். மாநாட்டை பின்போட்டமைக்கு கரோனாவை காரணம் காட்டினாலும், உண்மை காரணங்கள் வேறு சிலவும் உண்டு என்று […]