தாய்லாந்து நோயிலே, மன்னார் ஜெர்மனியிலே

தாய்லாந்து கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கையில், அந்நாட்டு அரசர் (King Maha Vajiralongkorn, வயது 67) ஜெர்மனியில் உள்ள மலை பகுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளார். இதனால் கோபம் கொண்டுள்ளார் சில தாய்லாந்து மக்கள். தம்முடன் இல்லாத மன்னர் எதற்கு என்று அவர்கள் வினாவுகின்றனர். . மன்னார் நாட்டில் இல்லாமை தொடர்பாக கருத்து கூற மறுத்த அரசு, பதிலாக மன்னரை அவதூறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரித்து உள்ளது. Puttipong Punnakanta என்ற அமைச்சர் மன்னரை […]

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நெருக்கம், ரஷ்ய விருப்பம்?

இஸ்ரேலுடன் அரபு நாடுகள் மோதிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில், அன்றைய எண்ணெய் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலின் உறவு நாடுகள் மீது எண்ணெய் ஏற்றுமதி தடையை விதித்தன. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்க அவற்றின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகின. . 1973 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா படிப்படியாக எண்ணெய் உற்பத்தியில் சுயாதீனம் அடைய முயற்சித்தது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செலவு மிகவும் அதிகம் என்றாலும், வளர்ந்து வந்த உலக பொருளாதாரம் […]

மொசாம்பிக் கொள்கலனுள் 64 அகதிகள் பலி

ஆபிரிக்க நாடான மொசாம்பிகில் பார வாகனம் ஒன்று இழுத்து சென்ற கொள்கலம் ஒன்றை சோதனை இட்ட மொசாம்பிக் போலீசார் அதனுள் 64 உடல்களையும், 14 பேரை உயிருடனும் கைப்பற்றி உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள். . எதியோப்பியா (Ethiopia) என்ற நாட்டின் ஆண்களே அகதிகளாக தென் ஆபிரிக்கா செல்ல முனைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. . அந்த பார வாகனத்தின் சாரதியும், அகதிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இனொருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மேலும் சிலர் தேடப்பட்டு […]

இன்றில் இருந்து இந்தியாவும் முழு முடக்கம்

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று நடுநிசியில் இருந்து 21 நாட்களுக்கு முழு இந்தியாவும் முடக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பிரதமர் மோதி இன்று தொலைக்காட்சி ஊடாக அறிவித்து உள்ளார். . இந்தியாவில் தற்போது 519 பேர் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளார்கள். அத்துடன் 10 பேர் மரணமாகியும் உள்ளனர். கொரோனா தொற்றியோர் தொகை அதற்கான பரிசோதனையை செய்தோர் தொகையில் தங்கி உள்ளது. தற்போது இந்தியாவில் சிறிதளவு தொகையினரே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். . இந்த […]

Tokyo 2020 ஒலிம்பிக் பின் தள்ளப்பட்டது

வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது. பதிலாக இந்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்னரான காலத்தில் இடம்பெறும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. . கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை பின்தள்ளும் ஜப்பானின் விருப்பத்தை ஒலிம்பிக் அமைப்பு ஏற்றுக்கொண்டு இந்த பின்தள்ளலை உறுதி செய்துள்ளது. 2021 ஆண்டில் இடம்பெற்றாலும் இந்த போட்டி Tokyo 2020 என்றே அழைக்கப்படும். […]

மீட்சிக்கு அமெரிக்கா $2.5 டிரில்லியன், சீனா $7 டிரில்லியன்

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பொருளாதாரங்களை மீட்க அமெரிக்கா $2.5 டிரில்லியன் ($2,500 பில்லியன்) முதலீடுகள், கடன்கள் (stimulus package) என்பவற்றை செய்ய முனைகிறது. ஆனாலும் இந்த விசயம் Democratic மற்றும் Republican கட்சி உறுப்பினர்களிடையே வாதங்களில் உள்ளது. . வேலைவாய்ப்பை இழக்கும் மக்களுக்கே பணம் செல்லவேண்டும் என்று Democratic கட்சினர் வாதாட, விமான சேவை நிறுவனங்கள் போன்றனவும் கடன் வசதிகளை அடைய வேண்டும் என்று Republican கட்சினர் வாதிடுகின்றனர். . அதேவேளை கொரோனாவால் […]

கொரோனா தொகையில் அமெரிக்கா 3 ஆம் இடத்தில்

இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் கொரோனா தொற்றியோர் தொகை உலகில் 3 ஆம் இடத்தை அடைந்துள்ளது. தற்ப்போது அமெரிக்காவில் சுமார் 31,057 பேர் இந்த வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மரணித்தோர் தொகையும் 390 ஆக அதிகரித்து உள்ளது. . ரம்ப் அரசு அமெரிக்காவின் மத்திய அரசு மடத்தில் கொரோனா பாதிப்பை ஆரம்பத்தில் உதாசீனம் செய்து இருந்தது. அதன் விளைவு தற்போது தெரிய வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் மத்திய அரசு வைரசுக்கு […]

கொரோனாவின் மத்தியிலும் ரம்பின் தாராள பொய்கள்

அரசியலில் உண்மை அற்ற தரவுகளை, பொய்களை குற்ற உணர்வுகள் எதுவும் இன்றி கூறுபவர் சனாதிபதி ரம்ப். அவரின் அந்த குணம் தற்போது கொரோனா விசயத்திலும் தொடர்கின்றது. . USNS Comfort (1,000 படுக்கைகள்), USNS Mercy (1,000 படுக்கைகள்) ஆகிய அமெரிக்க கடற்படையின் மருத்துவ கப்பல்கள் கொரோனா நோயாளிகளை பராமரிக்க ஒரு கிழமையளவுக்குள் செல்கின்றன என்று கடந்த புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ரம்ப் கூறி இருந்தார். . ஆனால் USNS Comfort என்ற கப்பல் தற்போது […]

அரச தகவல்களால் அரசியல்வாதிகள் பங்கு சந்தை இலாபம்

பொதுவாக இரகசியங்கள், இரகசிய தரவுகள் என்பன பொதுமக்களுக்கு கிடைக்க முன்னர் அரசியல்வாதிகளுக்கே கிடைக்கும். ஆனால் அவ்வகை தரவுகளை பயன்படுத்தி அரசியவாதிகள் இலாபம் அடைவது குற்றம். அமெரிக்காவின் சட்டங்களும் அவ்வாறு காங்கிரஸ் உறுப்பினர் தமக்கு கிடைக்கும் அரச தவுகளை பயன்படுத்தி முதலீடுகள் மூலம் இலாபம் அடைவதை தடுக்கின்றன. . அவ்வாறு சட்டம் இருப்பினும் குறைந்தது 4 அமெரிக்க செனட்டர்கள் (senators) தமக்கு கிடைத்த கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளின் அடிப்படியில் தமது பங்குச்சந்தை பங்குகளை உடனடியாக விற்று தமது […]

AIDS: an American virus?

AIDS: an American virus?

Elavalagan, May 19, 2020 American President Trump again and again calls COVID-19 a “Chinese virus”. His March 18th tweet went saying “I always treated the Chinese Virus…” Then again he justified his “Chinese virus” terminology during a press conference on the same day. Again on March 19th he vigorously defended his use of the term […]