ஆப்கான் இல்லாது ஆப்கான் மாநாடு

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஆராய ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மாநாடு ஒன்றை இன்று செவ்வாய் நடாத்தி உள்ளன. மாஸ்கோவில் இடம்பெற்ற ஆபிகானிஸ்தான் தொடர்பான இந்த மாநாட்டுக்கு ஆப்கானிஸ்தான் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் விசனம் கொண்டுள்ளது தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு. கூடவே அமெரிக்காவும் விசனம் கொண்டுள்ளது. . தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பானது. அமெரிக்கா மூலம் இந்தியாவே ஆப்கானிஸ்தானில் அபிவிருத்தி வேலைகளை செய்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆளுமை செய்வதற்கு போட்டியாகவே […]

ரஷ்ய விமானம் வீழ்ந்ததில் 92 பேர் பலி

ரஷ்யாவின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 92 பலியாகியுள்ளனர் என்று கூறப்படுள்ளது. ரஷ்யாவின் Sochi என்ற நகரில் இருந்து சிரியா நோக்கி சென்ற Tu-154 வகை விமானமே இன்று ஞாயிரு கருங்கடலுள் வீழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. . மொத்தம் 84 பயணிகளும், 8 பணியாளர்களும் இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் இருந்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ இசைக்குழு ஒன்றின் (Alexandrov Ensemble அல்லது Red Army Choir) 64 உறுப்பினரும் இந்த பயணிகளுள் அடங்குவர்.விமானம் மேலேறி […]

இந்தியா அமெரிக்காவின் Major Defense Partner

2017 ஆம் ஆண்டுக்கான, சுமார் $619 பில்லியன் வெகுமதியான, அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா வெள்ளியன்று கையொப்பம் இட்டுள்ளார். இந்த வரவுசெலவு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி இந்தியாவை அமெரிக்காவின் Major Defense Partner என்று வகைப்படுத்துதல் ஆகும். அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டையும் Major Defense Partner என்று வகைப்படுத்தவில்லை. . மோதியின் இந்திய அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கிறது. அதேவேளை வளர்ந்துவரும் சீனாவுக்கு முகம் கொடுக்க அமெரிக்கா […]

இஸ்ரவேலிடம் குடியிருப்பை நிறுத்து என்கிறது ஐ.நா.

இன்று வெள்ளி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அங்கத்தின் (UN Security Council) அமர்வின்போது, இஸ்ரவேல் தெடர்ந்தும் பாலஸ்தீனியர் பகுதிகளில் புதிய யூத குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்தத்தவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பின் 14 உறுப்பினர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஒபாமா தலைமயிலான அமெரிக்கா வாக்களிப்பில் சமூகம் கொள்ளாது இருந்துள்ளது. அதாவது, மறைமுகமாக தீர்மானம் வெல்ல வழி செய்துள்ளது. . இஸ்ரவேல் இந்த ஐ.நா. தீர்மானத்துக்கு […]

அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றியது சீனா

தென்சீன கடலில் தரவுகளை எடுத்துக்கொண்டு இருந்த அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை சீனா கைப்பற்றி உள்ளது என்று அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இன்று வெள்ளி தெரிவித்து உள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த ஆளில்லா நீர்மூழ்கி சுமார் 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்டதாகும். தானாக இயங்கும் இந்த கருவி கடலுக்கு அடியில் பல தரவுகளை எடுத்துக்கொள்ளக்கூடியது. . இந்த தகவலை தெரிவித்த பென்ரகன் பேச்சாளர் கடல்படை Capt. Jeff Davis, […]

அமெரிக்கா வெளியிடும் அர்ஜென்ரீனா உண்மைகள்

இன்று வெள்ளி அமெரிக்கா தன்வசம் இருந்த ஆர்ஜென்ரீனா யுத்த காலத்து உண்மைகள் பலவற்றை வெளியீடு உள்ளது. Cold War காலத்தில் ஆர்ஜென்ரீனாவில் ஒரு சர்வாதிகார அரசை அமைத்து அதற்கு ஆதரவு வழங்கி வந்திருந்தது அமெரிக்கா. அக்காலங்களில் அந்த சர்வாதிகார அரசு செய்த கொடுமைகளை அமெரிக்கா ஆவணப்படுத்தி வைத்திருந்தாலும் தற்போதே அவைகளை வெளியிடுகின்றது. . 1975 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற, Dirty War என அழைக்கப்படும் இந்த யுத்தம் தொடர்பான 500 ஆர்வங்களை […]

சீனா அணுக்குண்டு விமான வலம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்த டொனால் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு பதிலடியாக சீனா தனது அணுக்குண்டு விமானம் ஒன்றை தென்சீன கடல் பகுதியில் பறக்க விட்டுள்ளது. முன் எப்போதும் பறக்காத அளவு தூரத்துக்கு இம்முறை இந்த விமானம் பறந்துள்ளது. . 1972 ஆம் ஆண்டு முதல், ‘ஒரு சீனா’ என்ற கொள்கையின்கீழ், பெய்ஜிங் தலைமையிலான சீனாவையே நாடாக கொண்டு, அதேவேளை தாய்வானுடன் மேலதிக உறவையும் பேணி வந்துள்ளது. 1972 முதல் அமெரிக்கா தாய்வானை ஒரு நாடாக […]

தேவாலய கூரை வீழ்ந்து 160 பேர் பலி

நைஜீரியாவின் தென் பகுதியில் உள்ள Uyo நகரில் உள்ள Reigners Bible Church என்ற தேவாலயத்தின் கூரை வீழ்ந்ததில் 160 பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெரும்தொகை மக்கள் நிகழ்வு ஒன்றுக்காக கூடியிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. . சனிக்கிழமை நிகழ்வுக்காக மேற்படி மண்டபம், முறைமைக்கு முரணாக, வேகப்படுத்தி முடிக்கப்பட்டதே காரணமாக இருக்கலாம் எந்றம் கூறப்படுகிறது. கட்டுமான விதிகள் மீறப்பட்டு இருந்தால், உரியவர்கள் தண்டிக்கப்படுவர் என்று அரசு கூறியுள்ளது. […]

கல்கத்தாவில் களவாடப்படும் சிசுக்கள்

இந்தியாவின் கல்கத்தா நகர் பகுதியில் பிறந்த சிசுக்கள் உடனடியாக களவாடப்பட்டு பெருந்தொகை பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆகக்கூடிய விலையில் அழகான ஆண் சிசுக்கள் இந்திய 700,000 ரூபாய் வரையிலும், கருப்பான பெண் சிசுக்கள் மிக குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறதாம். . இந்திய CID போலீஸ் அதிகாரிகள் Baduria என்ற இடத்து வீடு ஒன்றில் இருந்து 3 சிசுக்களை அண்மையில் மீட்டு உள்ளார். இச்சிசுக்கள் அங்குள்ள ஓர் கிறீஸ்தவ பொதுச்சேவை நிலையம் ஒன்றுக்கு எடுத்து […]

பதவியை இழக்கிறார் தென்கொரிய ஜனாதிபதி?

தென்கொரியாவின் ஜனாதிபதி Park Geun-hye தனது பதவியை விரைவில் இழக்கக்கூடும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இன்று வெள்ளி இவர் மீதான குற்ற பிரேரணை (impeachment) வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுவது உறுதி ஆயிற்று. இவர் மீது குற்ற பிரேரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் 234 வாக்குகளால் நிறைவேறி உள்ளது. மொத்தம் 300 உறுப்பினரை கொண்ட சபையில் 200 வாக்குகள் மட்டுமே வேண்டியிருந்தது. . இவரை குற்ற விசாரணை செய்தல் வேண்டும் என ஆதரித்த உறுப்பினரில் சுமார் 70 உறுப்பினர் இவரின் […]