கங்கையில் மிதக்கும் கரோனா சடலங்கள்

கங்கையில் மிதக்கும் கரோனா சடலங்கள்

குறைந்தது 40 சடலங்கள் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சடலங்கள் உத்தர பிரதேச, பீகார் எல்லையிலேயே மீட்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் எப்பகுதியில் வீசப்பட்டன என்பதை அதிகாரிகள் இதுவரை அறியவில்லை. சில உள்ளூர் செய்திகள் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 150 வரையில் இருக்கும் என்று கூறுகின்றன. Buxar என்ற இடத்தில் மட்டும் திங்கள் 30 உடல்கள் எடுக்கப்பட்டு உள்ளன. சில உடல்கள் பெருமி உள்ளதாகவும், சில அரைகுறையாக எரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை […]

அமெரிக்க எண்ணெய் குழாய் வலையமைப்பு மீது தாக்குதல்

அமெரிக்க எண்ணெய் குழாய் வலையமைப்பு மீது தாக்குதல்

அமெரிக்காவின் Colonial Pipeline என்ற எண்ணெய் குழாய் வலையமைப்பு (8,850 km) இணைய ransomware மூலம் தாக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் இருந்து செயற்படும் DarkSide என்ற இணைய தாக்குதல் குழுவே (hackers) இந்த தாக்குதலை செய்து இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். Ransomware software மூலம் Colonial Pipeline நிறுவனத்தின் 100 GB கணனி தரவுகள் (data) பணயம் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் $2 மில்லியன் பணம் வழங்கினால் மட்டுமே தவுகள் மீள தரப்படும் என்று […]

சீன வெற்று கலம் மாலைதீவுக்கு அருகில் வீழ்ந்தது

சீன வெற்று கலம் மாலைதீவுக்கு அருகில் வீழ்ந்தது

சீனாவின் Long March 5b என்ற வெற்று கலம் ஞாயிறு அதிகாலை மாலத்தீவுக்கு அண்மையில் கடலுள் வீழ்ந்ததாக சீனா கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேற்படி வெற்று கலம் UTC  நேரப்படி காலை 2:24 மணிக்கு 72.47 பாகை நெட்டாங்கும், 2.65 பாகை அகலாங்கும் சந்திக்கும் இடத்தில் வீழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. (கொழும்பு 79.861244 நெட்டாங்கிலும், 6.927079 அகலாங்கிலும் உள்ளது) இந்த கணை ஏவப்பட்டபோது மொத்த நீளம் 53.7 மீட்டர் கொண்டது. விழுந்த வெற்று பாகம் சுமார் 33 மீட்டர் […]

இரண்டாம் தினமும் பலஸ்தீனர், இஸ்ரேல் மோதல்

இரண்டாம் தினமும் பலஸ்தீனர், இஸ்ரேல் மோதல்

ஜெருசலேம் (Jerusalem) பகுதியில் பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு தினங்களாக மோதல்கள் தொடர்கின்றன. வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்களாக இடம்பெறும் இந்த மோதல்களுக்கு இதுவரை சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர். இன்று சனிக்கிழமை சுமார் 90 பேரும், வெள்ளிக்கிழமை சுமார் 210 பேரும் காயமடைந்து உள்ளனர். ஏறக்குறைய காயமடைந்தோர் அனைவரும் பலஸ்தீனர்களே. சில இஸ்ரேலிய போலீசாரும் காயமடைந்து உள்ளனர். இஸ்ரேல் மேலும் பலஸ்தீனர் இடங்களை யூத குடியிருப்புகளுக்கு பறிக்கும் நோக்கில் சில பலஸ்தீனர் குடும்பங்களை […]

சீனாவின் 23 தொன் விண்கல வெற்றுப்பகுதி பூமியில் விழும்

சீனாவின் 23 தொன் விண்கல வெற்றுப்பகுதி பூமியில் விழும்

சீனா தனது விண் ஆய்வுகூட கட்டுமானத்துக்கான முதல் பாகத்தை கடந்த கிழமை ஏவி இருந்தது. அந்த ஆய்வுகூட பாகத்தை ஏவ பயன்படுத்திய ஏவியின் வெற்றுப்பகுதி (Long March 5b) சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பூமியை நோக்கி விழ உள்ளது. சுமார் 23 தொன் எடையும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த வெற்று பாகம் எங்கு விழும் என்பதை இறுதி நேரத்தில்தான் அறிய முடியும். இது மத்திய கோட்டில் இருந்து வடக்கே 41 பாகைக்கும், கிழக்கே […]

Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

கடந்த சில தினங்களாக, Brexit பிரிவுக்கு பின், பிரித்தானியாவும், பிரான்சும் மீன்பிடி உரிமைகளில் முரண்பட ஆரம்பித்து உள்ளன. பிரான்சுக்கு அண்மையில், சுமார் 22 km தூரத்தில் அமைத்துள்ள Jersey என்ற பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமையே இந்த முரண்பாட்டுக்கு காரணம். அண்மையில் Jersey தீவு அதை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமைக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. அதனால் பாதிக்கப்பட்ட பிரென்சு மீனவர் இன்று தமது […]

போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

Thammanat Propao என்பவர் அஸ்ரேலியாவுக்கு heroin என்ற போதை கடத்த முயன்ற பொழுது அகப்பட்டு அஸ்ரேலியாவில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். தண்டனை முடிய இவர் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தாய்லாந்து திரும்பிய இவர் அங்கு இராணுவத்தின் ஆதரவுடன் அரசியலில் குதித்து அமைச்சரும் ஆனார். முன்னாள் இராணுவ captain ஆனா இவர் தாய்லாந்தில் இராணுவ ஆட்சி செய்யும் Prayuth Chan-ocha வின் ஆதரவுடனேயே அமைச்சர் ஆனார். 1993ம் ஆண்டு இவர் $3.1 மில்லியன் பெறுமதியான 3.2 […]

மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் (Mali) 25 வயது பெண் ஒருவருக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளன. Halima Cisse என்ற இந்த பெண்ணுக்கு 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நேற்று செய்வாய் பிறந்து உள்ளன. தாயும், ஒன்பது குழந்தைகளும் நலமாகவே உள்ளனர். ஒன்பது குழந்தைகளும் அறுவை சிகிக்சை (C-section) மூலமுமே பிறந்தனர். ஆனால் ultrasounds சோதனை 7 குழந்தைகள் வயிற்றில் இருந்ததை மட்டுமே காட்டி இருந்தது. இந்த பெண் மாலி நாட்டவர் ஏற்றாலும், […]

மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ ரயில் மேம்பாலம் இடிந்து 23 பேர் பலி

மெக்ஸிக்கோ (Mexico) நாட்டில் உள்ள Mexico City என்ற நகரில் சிறு ரயில் செல்லும் மேம்பாலம் ஒன்று ரயிலுடன்  இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 23 பேர் பலியாகியும், 65 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பாலம் உடைந்து விழ, அதில் பயணித்த ரயிலும் முறிந்து வீழ்ந்துள்ளது. அப்பொழுது கீழே வீதியில் ஒரு கார் இருந்தாலும் அதன் சாரதி தப்பியுள்ளார். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நகரின் தென்கிழக்கு […]

Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft நிறுவனத்தை ஆரம்பித்த Bill Gates (வயது 65) மற்றும் அவரின் மனைவி Melinda Gates இருவருக்கும் இடையிலான 27 ஆண்டு விவாகம் விவாகரத்தில் முடிகிறது. இருவரும் விவாகரத்துக்கு இணங்கி உள்ளனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. இவர்கள் 1994ம் ஆண்டு விவாகம் செய்து இருந்தனர். தற்போது Bill Gates உலகில் 4வது பெரிய செல்வந்தர் என்றாலும், நீண்ட காலமாக இவரே உலகின் முதலாவது செல்வந்தராக இருந்தவர். 1995 முதல் 2010 வரையும், பின் 2013 முதல் […]