பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான இணக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த இணக்கம் இருதரப்புக்கும் நியாயமானது என்றுள்ளன. ஆனாலும் இணைக்க விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த இணக்கப்படி பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பாவில் மேலதிக வரிகள், எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இன்றி விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரித்தானிய மீன்பிடி உரிமைகளில் தனது நிலைப்பாட்டை கைவிட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனால் ஐரோப்பிய மீனவர் பிரித்தானிய கடலில் மீன்பிடிக்க உரிமை கொள்வர். வங்கி விசயத்திலும் பிரித்தானியா விட்டுக்கொடுத்துள்ளது. […]
அஸ்ரேலியாவின் Perth நகரை தளமாக கொண்ட Titanium Sands என்ற நிறுவனம் மன்னார் தீவில் இல்மனைட் (ilmenite) அகழ்வுக்கு வேகமாக முனைந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் இணையத்தில் இந்த விசயம் முன்பக்கத்தில் பதிக்கப்பட்டு உள்ளது. மன்னார் தீவு பகுதி வங்காலை பறவைகள் சரணாலயத்தை கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதி. அகழ்வு பணிகள் மூலம் இப்பகுதியின் இயற்கையை குழப்புவதை இலங்கை சூழலியலாளர் எதிர்க்கின்றனர். சைபீரியாவில் இருந்து வரும் இடப்பெயர்வு பறவைகள் சுமார் 30 நாடுகளை தாண்டி ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. […]
இஸ்ரேல் மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது. இன்று செவ்வாய்க்கிழமை இரவுடன் அந்நாட்டுக்கான தற்போதைய வரவுசெலவு திட்ட காலம் முடிவடைந்தாலும் புதிய வரவுசெலவு திட்டம் நடைமுறைக்கு வராத காரணத்தால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் நிகழவுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இடம்பெறவுள்ள 4 ஆவது தேர்தல் இதுவாகும். புதிய தேர்தல் வரும் மார்ச் மாதம் 23ம் திகதி இடம்பெறும். இஸ்ரேலில் வாக்குகள் பிரிந்து உள்ளன. அதனால் எந்தவொரு கட்சியின் திடமான பெரும்பான்மையை பெற முடியாது உள்ளது. அதனால் கூட்டு […]
உலகில் அதிகூடிய சனத்தொகையை கொண்டிருந்த சீனா தனது சனத்தொகையை குறைக்க 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை மட்டும் என்ற சட்டத்தை நடைமுறை செய்திருந்தது. அண்மையிலேயே அந்த சட்டம் அங்கு தளர்த்தப்பட்டது. தற்போது இந்தியா மாநில அரசுகள் இரு குழந்தைகள் மட்டும் என்ற சட்டத்தை மறைமுகமாக நடைமுறை செய்கிறன. அசாம் மாநிலத்தில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பம் சில மாநில அரச சலுகைகளை இழக்கும். உதாரணமாக அரசில் பணிசெய்த […]
இந்தியாவின் பெங்களூருக்கு அண்மையில் உள்ள Narsapura பகுதியில் அமைந்துள்ள Wistron என்ற தாய்வான் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை Apple நிறுவனம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது. Apple சுயமாக செய்த விசாரணையின் பின்னரே உண்மையை ஏற்று, மன்னிப்பு கேட்டுள்ளது. கூடவே குத்தகைக்கு தயாரிப்பு வேலைகள் செய்யும் Wistron நிறுவனத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது Apple. Wistron தனது இந்திய பிரிவுக்கு பொறுப்பாக இருந்த vice president ஒருவரை பதவி நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஊதியம் கிடைக்காத […]
ஒரு புதிய வகை (variant) கரோனா பிரித்தானியாவின் தெற்கு, மற்றும் கிழக்கு பகுதிகளில் பரவி உள்ளதால் இப்பகுதிகள் கடுமையான முடக்கப்படுள்ளன. இப்பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாது, பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பாரிய அளவில் பிரிக்கப்பட்டு உள்ளன. அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தி உள்ளன. Folkestone முதல் Calais வரையான ரயில் சேவையும் துண்டிக்கப்படுகிறது. ஆனால் Calais முதல் Folkestone வரையான சேவை தொடர்ந்தும் […]
நவம்பர் 4ம் திகதி இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் பைடென் வென்று, ரம்ப் தோல்வி அடைந்து இருந்தாலும் ரம்ப் தற்போதும் தானே வென்றதாக கூறிவருகிறார். அதற்கு ஏற்ப நேற்று வெள்ளிக்கிழமை ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் Michael Flynn ரம்ப் இராணுவ ஆட்சியை (invoke martial law) ஏற்படுத்தலாம் என்று கூறியதாக New York Times, CNN ஆகிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ரம்பின் அனைத்து உதவியாளர்களும் பைடென் வென்றதை ஏற்றுக்கொள்ளுமாறு கூற, Flynn […]
1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி சீனாவின் ஷாங்ஹாய் பங்குச்சந்தை (Shanghai Stock Exchange) ஆரம்பிக்கட்டு இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் தோன்றிய இந்த முதலாளித்துவ செயற்பாடு வேகமாக வளர்ந்து இன்று உலகின் இரண்டாவது பெரிய பங்குச்சந்தையாக உள்ளது. ஷாங்ஹாய் பங்குச்சந்தை மூலம் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் தொகை US$11 டிரில்லியன் ($11,000 பில்லியன்) என்று கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் உள்ளே மறைந்து இருந்த முதலாளித்துவத்தின் வலிமையை ஷாங்ஹாய் பங்குச்சந்தை காட்டியுள்ளது. மொத்தம் 8 நிறுவனங்களின் பங்குகளை சந்தைப்படுத்துவதன் […]
வரும் திங்கள்கிழமை வியாழனும் (Jupiter), சனியும் (Saturn) பூமியில் இருந்து பார்ப்பவருக்கு ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன. அதனால் வியாழனும், சனியும் ஏறக்குறைய ஒன்றாக தெரியும். சுமார் 800 ஆண்டுகளின் பின் இதை நாம் காணக்கூடியதாக இருக்கும். உண்மையில் இவ்வாறு வியாழனும், சனியும் 1623ம் ஆண்டும் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் வந்திருந்தன. ஆனால் அது சூரியன் பக்கமாக நிகழ்ந்ததால், சூரிய பிரகாசம் அதை கண்களால் காண்பதை முடியாமல் செய்திருந்தது. அதற்கு முன் 1226ம் ஆண்டு இரவு வேளையில் இரண்டும் […]
கடந்த கிழமை அமெரிக்காவின் மத்திய, மாநில, நகர அரசுகள் மீதும், பெரிய கூட்டுத்தாபனங்கள் மீதும் இடம்பெற்ற இணைய தாக்கல் மிக பாரதூரமானது (grave risk) என்று அமெரிக்காவின் Cybersecurity and Infrastructure Security Agency (CISA) கூறியுள்ளது. கடந்த கிழமை கண்டறியப்பட்ட இந்த இணைய தாக்குதல் உண்மையில் கடந்த மார்ச் மதமே ஆரம்பித்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயப்படுத்தப்பட்ட malware ஐ பாதிக்கப்பட்ட கணனிகளில் இருந்து நீக்குவதும் மிக சிரமமானது (highly complex and challenging) […]