சீன வூகான் நகரை முடக்கியது corona வைரஸ்

அண்மையில் தோன்றிய corona வைரஸ் காரணமாக சீனாவின் வூகான் (WuHan) நகரமே தற்போது முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 11 மில்லியன் மக்களை கொண்ட இந்த சீன நகரத்துக்கும் வெளி இடங்களுக்குமான விமான, ரெயில், மற்றும் பஸ் போக்குவரத்துக்களை சீன அரசு முற்றாக துண்டித்து உள்ளது. Corona வைரஸ் வெளி இடங்களுக்கு பரவுவதை தடுப்பதே அதிகாரிகளின் நோக்கம். . இந்த வைரஸுக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். பலியாகியோர் வயதெல்லை 48 வயது முதல் 89 வயது […]

தாய்ப்பால் ஊட்டலில் இலங்கைக்கு முதலிடம்

தாய்ப்பால் ஊட்டல் தொடர்பாக மொத்தம் 97 நாடுகளில் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படியில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது என்கிறது WBTi (World Breastfeeding Trends Initiative) அமைப்பு. முதல் இடத்தில் உள்ள இலங்கை 91 புள்ளிகளை பெற்றுள்ளது. . கியூபா (87.5 புள்ளிகள்), பங்களாதேஷ் (86.0 புள்ளிகள்), Gambia (83.0 புள்ளிகள்), Bolivia (81.0 புள்ளிகள்) ஆகிய நாடுகள் 2 ஆம், 3 ஆம், 4 ஆம், 5 ஆம் இடங்களில் உள்ளன. . சீனா 69.5 […]

உலகம் எங்கும் சீனாவில் ஆரம்பித்த corona வைரஸ்

சீனாவின் வூகான் (WuHan) நகரில் ஆரம்பித்த coronavirus தற்போது உலகம் எங்கும் பரவ ஆரம்பித்து உள்ளது. பரவலை தடுக்க விமான பயணிகள் மீது விமான நிலையங்களின் கவனம் திரும்பி உள்ளது. . 2019-nCoV என்ற இந்த வைரஸ் மனிதரில் இருந்து மனிதருக்கு பரவக்கூடியது என்று சீனா கூறி உள்ளது. இந்த வைரஸ் மனிதரில் காணப்பட்டது இதுவே முதல் தடவை. . இந்த வைரஸுக்கு இதுவரை சீனாவில் 6 பேர் பலியாகியும், சுமார் 300 பேர் நோய்வாய்ப்பட்டும் உள்ளனர். […]

முன்னாள் புலிக்கு ஜெர்மனியில் சிறை தண்டனை

புலிகளுக்கு முன்னாளில் உளவுபார்த்த நவநீதன் (Navanithan G., வயது 39) என்பவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் 10 மாதகால சிறைத்தண்டனை தீர்ப்பை இன்று திங்கள்கிழமை வழங்கி உள்ளது. . 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் புலிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு நவநீதன் உடந்தையாக இருந்துள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வெளிநாட்டு பயங்கவாத குழுவில் உறுப்பினராக இருந்தமையை இவரின் குற்றமாகும். . 2012 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அகதி நிலைக்கு விண்ணப்பித்த காலத்தில் தான் […]

தன்நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் பணக்காரி

தன் நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் முதல் பணக்காரி ஆகியுள்ளனர் Isabel dos Santos என்று தற்போது பகிரங்கத்துக்கு வந்த ஆவணங்கள் கூறுகின்றன. அங்கோலா (Angola) நாட்டை சுமார் 38 வருடங்கள் ஆண்ட முன்னாள் சனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மூத்த மகளே Isabel. பிரித்தானியாவில் கல்வி கற்ற Isabel தற்போது கொள்ளையடித்த சொத்துக்களுடன் பிரித்தானியாவிலேயே வாழ்கிறார். இவரின் தற்போதை சொத்துக்களின் பெறுமதி சுமார் $2 பில்லியன் என்று கூறப்படுகிறது. . மேற்படி தகவல்களை BBC […]

ஹரி குடும்பம் அரச குடும்பத்துக்கு வெளியே

ஹரியும் (Price Harry), இராணியும் கொண்டுள்ள இணக்கப்படி ஹரியின் அனைத்து அரச சலுகைகளும் பறிக்கப்பட உள்ளன. அமெரிக்க பெண்ணான மேகன் (Meghan) என்பவரை திருமணம் செய்த டயானாவின் இளைய மகன் ஹரி அண்மையில் அரை தனிக்குடித்தனம் செல்ல முனைந்தார். ஆனால் இராணி ஹரியை முற்றாக அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்ற உள்ளார். இந்த அறிக்கை இன்று சனிக்கிழமை Buckingham Palace தரப்பால் வெளியிடப்பட்டு உள்ளது. . மேற்படி இணக்கப்படி ஹரி குடும்பம் வடஅமெரிக்காவில் சுதந்திரமான வாழக்கையை நடாத்தும். […]

ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க படையினர் பாதிப்பு

ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவிய ஏவுகணைகளின் தாக்கத்தால் 11 அமெரிக்க படையினர் பாதிக்கப்பட்டு (concussion) உள்ளனர் என்று தற்போது அமெரிக்கா கூறுகிறது. மேற்படி தாக்குதலின் மறுதினம் அமெரிக்கர் எவரும் பாதிக்கப்படவில்லை என்றே ரம்ப் கூறி இருந்தார். . இந்த செய்தியை அமெரிக்க Captain Bill Urban வியாழன் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட படையினருள் 8 பேர் ஜெர்மனியில் உள்ள Landstuhl Mediacl Center வைத்தியசாலைக்கும், 3 […]

ரஷ்ய அமைச்சரவையை கலைத்தார் பூட்டின்

நேற்று புதன் ரஷ்ய அமைச்சரவையை சனாதிபதி பூட்டின் கலைத்து உள்ளார். பூட்டினின் இந்த திடீர் நகர்வுக்கு கரணம் அறியாது தவிக்கிறது உலகம். தற்போதைய அரசியல் சாசனப்படி 2024 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய பூட்டின் அதன் பின்னரும் பதவியில் இருக்க வழி செய்கிறார் என்று கருதுகின்றன மேற்கு நாடுகள். . நேற்று புதன்கிழமை பூட்டின் தனது அறிவிப்பை செய்த உடன் பூட்டினின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பிரதமர் Dmitri Medvedev வும் தனது அமைச்சரவையுடன் […]

அமெரிக்க-சீன தற்காலிக வர்த்தக உடன்பாடு

அமெரிக்காவும், சீனாவும் தற்காலிக வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் (Phase 1) இன்று புதன்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன அதிகாரி (Vice Premier) Liu He வும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். . சுமார் 18 மாதங்களுக்கு முன் ரம்ப் சீனா மீதான பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார். சீனா வேறு வழியின்றி தன்வழிக்கு வரும் என்று ரம்ப்  கருதினார். ஆனால் பொருளாதார யுத்தம் ரம்பின் எதிர்பார்ப்புக்கு அப்பால் இழுபட்டு சென்றது. இருபகுதியும் […]

ஈரான் அணு உடன்படிக்கை மரண படுக்கையில்

2015 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சனாதிபதி ஒபாமா காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் செய்து கொண்ட அணு உடன்படிக்கையான JCPOA இன்று மரண படுக்கை சென்றுள்ளது. இந்த உடன்படிக்கையின் இறுதி அத்தியாயத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இன்று திங்கள் ஆரம்பித்து உள்ளன. . பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளும் இன்று ‘dispute mechanism’ என்ற செயற்பாட்டை ஆரம்பித்து உள்ளன. இதன் உள்நோக்கம் ஈரான் […]