F-35 தயாரிப்பிலிருந்து துருக்கியை நீக்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் மிக புதிய யுத்த விமானமான F-35 தயாரிப்பில் இருந்து துருக்கியை நீக்கி உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி S-400 என்ற வல்லமை மிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததே அமெரிக்காவின் சீற்றத்துக்கு காரணம். . முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்படி கடந்த கிழமை ரஷ்யாவில் இருந்து சிறுதொகுதி S-400 ஏவுகணைகள் துருக்கி வந்துள்ளன. . துருக்கி NATO அமைப்புள் இரண்டாவது பெரிய இராணுவத்தை கொண்ட நாடு. அத்துடன் NATO வின் முதல் எதிரி […]

சந்திர பயணத்தை இடைநிறுத்தியது இந்தியா

திங்கள் கிழமை, ஜூலை 16 ஆம் திகதி, அதிகாலை 2:51 மணிக்கு சந்திரனை நோக்கி விண்கலம் ஒன்று இந்தியாவால் ஏவப்பட்டு இருந்தமை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கலம் இன்னோர் நாளில் ஏவப்படும் என்று கூறப்படாலும், அதற்கான நாளை இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை. . Chandrayaan-2 என்ற இந்த கலம் ஏவப்பட 56 நிமிடங்கள், 24 செக்கன்கள் இருக்கையிலேயே இயந்திர கோளாறு அறியப்பட்டு, ஏவல் இடைநிறுத்தப்பட்டது. . இந்த விண்கலத்தின் மொத்த நீளம் 44 […]

இலங்கையில் சீனாவின் SINOPEC எண்ணெய் நிறுவனம்

சீனாவின் SINOPEC (China Petrolium and Chemical Corporation) என்ற எண்ணெய் நிறுவனம் தனது கிளையை இலங்கையில் ஆரம்பித்து உள்ளது. இந்த கிளை நிறுவனம் Fuel Oil Sri Lanka Company Ltd என இலங்கையில் பதியப்பட்டு உள்ளது. . அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தளம் கொண்ட இந்த நிறுவனம் அவ்வழியால் செல்லும் கப்பல்களுக்கு fuel oil வகை எண்ணெய் வழங்கும். . SINOPEC GROUP உலகத்திலேயே மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும். இதன் வருட வருமானம் […]

கியூபாவில் சீன தயாரிப்பு ரயில் வெள்ளோட்டம்

கியூபாவில் முதல் முறையாக சீன தயாரிப்பு ரெயில் ஒன்று சீன தயாரிப்பு ரெயில் பெட்டிகளுடன் 915 km தூர பயணத்தை மேற்கொண்டு உள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு பின் அங்கு சேவையில் ஈடுபடும் புதிய ரெயில் இது. . கியூபாவில் 1830 ஆம் ஆண்டிலேயே ரெயில் சேவை நடைமுறைக்கு வந்திருந்தாலும், Cold War காலத்தில் அமெரிக்காவின் தடை காரணமாக ரெயில்கள், பெட்டிகள், தண்டவாளங்கள் அனைத்தும் பராமரிப்பு அற்று இருந்தன. தற்போது அவற்றை புதுப்பிக்கும் பணிக்கு சீனா அழைக்கப்பட்டு […]

இன்று சந்திரனின் தென் துருவம் போகிறது இந்தியா

இன்று திங்கள் அதிகாலை இந்தியா தனது Chandrayaan-2 என்ற சந்திரனுக்கான ஆளில்லா பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும். மனித கலம் ஒன்று சந்திரனின் தென் துருவம் போவது இதுவே முதல் தடவை. இங்கே நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . Geosynchronous Satellite Launch Vehicle Mark III என்ற இந்த ஏவுகலம் (Launch Vehicle) தன்னுள் 2,400 kg எடை கொண்ட orbiter, 1,500 kg எடை […]

போதை கடத்திய நீர்மூழ்கி கைது

அமெரிக்காவுள் நீர்மூழ்கி மூலம் போதை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அமெரிக்காவின் கரையேற பாதுகாப்பு படை (Coast Guard) பசுபிக் கரையோரம் கைப்பற்றி உள்ளது. இந்த நீர்மூழ்கியில் பல்லாயிரம் தொன் போதை இருந்ததாக கூறப்படுகிறது. . கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட போதைகளின் மொத்த பெறுமதி சுமார் $569 மில்லியன் என்று கூறப்படுகிறது. இக்காலத்தில் சுமார் 39,000 இறாத்தல் cocaine, 933 இறாத்தல் marijuuana என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன. . இந்த கடத்தல்களில் […]

வளைகுடாவில் பிரித்தானிய கப்பல்களுக்கு ஆபத்து

ஈரானை அண்டிய பாரசீக வளைகுடா பகுதியில் தமது கப்பல்களுக்கு ஆபத்து உச்ச அளவில் உள்ளது (critical) என்கிறது பிரித்தானியா. அதனால் ஈரானின் கடல் பரப்புள் நுழையவேண்டாம் என்று தம்நாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு பிரித்தானியா கூறியுள்ளது. . நேற்று புதன்கிழமை ஈரானிய கடற்படை கப்பல்கள் பிரித்தானியாவின் British Heritage (274 மீட்டர் நீளம் கொண்டது) என்ற எண்ணெய் கப்பலை தடுக்க முனைந்ததாகவும், பின் பிரித்தானியாவின் HMS Montrose என்ற கடற்படை கப்பல் எண்ணெய் கப்பலை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. . […]

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் பதவி விலகுகிறார்

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் Sir Kim Darroch ரம்ப் அரசை அவமதித்தது பகிரங்கத்துக்கு வந்ததன் காரணமாக பதவி விலகுகிறார். . 2017 ஆம் ஆண்டில் தூதுவர் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இரகசிய email ஒன்றில் ரம்ப் அரசு ஒழுக்கம் அற்றது என்றும், அறிவற்றது என்றும் (clumsy and inept) குறிப்பிட்டு இருந்தார். அந்த email அண்மையில் சிலரால் பகிரங்கப்படுத்தப்பட்டது. . பகிரங்கத்துக்கு வந்த விசயத்தை அறிந்த ரம்ப் தமது அரசு இனிமேல் பிரித்தானிய தூதுவருடன் இணைந்து செயல்படாது என்று கூறினார். […]

Jet Airways Goyal இந்தியாவிலிருந்து வெளியேற தடை

Jet Airways என்ற இந்தியாவின் முன்னாள் விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்த Naresh Goyal இந்தியாவிலிருந்து வெறியேற இந்திய நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இவர் மீது இந்திய அரசால் தொடரப்பட்டுள்ள $2.6 பில்லியன் ஊழல் வழக்கு தொடர்பாகவே இவர் இந்தியாவுள் முடக்கப்பட்டு உள்ளார். . இவர் ஆரம்பித்த Jet Airways விமான சேவை நிறுவனம் சிலகாலம் தரமான சேவையை அளித்து வந்தது. ஆனால் கடந்த சிலகாலமாக இந்த நிறுவனம் பெரு நட்டத்தில் செயல்பட ஆரம்பித்தது. இறுதியில் கடன்களை […]

இலங்கை கடற்படைக்கு சீனாவின் பாவித்த கப்பல்

சீனா இலங்கைக்கு வழங்கிய பாவித்த யுத்த கப்பல் (frigate) இன்று இலங்கை வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனாவின் கடல் படையால் பயன்படுத்தப்பட்ட Tongling என்ற யுத்த கப்பல் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. . இந்த கப்பல் இலங்கைக்கு கடந்த மாதம் ஷாங்காய் நகரில் கையளிக்கப்பட்டது. இந்த கப்பலை செலுத்தும் செயல்பாடுகளை அறிய 18 இலங்கை கடற்படை அதிகாரிகளும், 92 கடற்படையினரும் சீனா சென்றிருந்தனர். . சுமார் 2,300 தொன் எடை கொண்ட இந்த […]