பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி நிலையம் உடைந்து 120 வரை பலி

பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி செய்யும் 8 மாடி கட்டம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 120 பணியாளர்வரை மரணமாகி உள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு வடக்கே 20 km தூரத்தில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9:00 மணியவில் இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது. மேலும் 5000 பணியாளர்வரை இடிபாடுகளுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு நாட்டு பிரபல ஆடை நிறுவனங்கள் இங்கே தமது ஆடைகளை உற்பத்தி செய்வதுண்டு. Calvin Klein, Tommy Hilfiger, Gap போன்ற நிறுவனங்களும் Wal-Mart போன்ற விற்பனை நிலையங்களும் இதில் அடங்கும். பங்களாதேசில் சுமார் 4500 ஆடை உற்பத்தி […]

இராணுவ செலவுகளை US $35 பில்லியன் ஆல் குறைக்கும் ஐரோப்பா

NATO வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீடுகள். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய NATO நாடுகளின் இவ்வருடத்துக்கான இராணுவ வரவுசெலவு சுமார் US $35 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வகை குறைப்பு அடுத்துவரும் வரும் வருடங்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை NATO வின் செலவுகளின் சுமார் 62% மட்டுமே செலுத்தி வந்த அமெரிக்கா இப்போது சுமார் 75% செலுத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பங்களிப்பு குறைவதே இதற்கு காரணம். இதேவேளை அமெரிக்காவும் […]

உலக பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறைக்கும் IMF

செவ்வாய்க்கிழமை (16-04-20133) IMF மீண்டும் 2013 ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. IMF இன் தற்போதைய கணிப்பின்படி 2013 இல் உலக பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக மட்டுமே இருக்கும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதார மந்த நிலைமைகளே இதற்கு காரணம் என்கிறது IMF. IMF இன் இந்த மீள் கணிப்பீடு பிரித்தானியா (0.6% வளர்ச்சி), ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற பல நாடுகளுக்கு கடந்த தை மாதத்தில் வழங்கிய கணிப்பீடுகளிலும் குறைவானவையே. ஜப்பான் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. […]

Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்கா

Laser ஆயுதங்கள் அமெரிக்கா போன்ற முன்னணி இராணுவங்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள். இந்த ஆயுதங்களின் தரம், பயன்பாடு என்பன முற்றாக அறிப்படவில்லை. இப்போதும் இவை பரீட்சாத்த நிலையிலேயே உள்ளன. அவ்வாறு இருக்கையில் தனது Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்க இராணுவம். இந்த ஆயுதம் USS Ponce என்ற தாக்குதல் கப்பலில் நிலைகொண்டிருக்கும். அதிக சக்தி கொண்ட Laser கதிர்களை செலுத்துவதன் மூலம் இந்த ஆயுதங்கள் ஏவுகணைகளில் உள்ள இலத்திரனியல் பாகங்களை செயல் இழக்க செய்யலாம், அத்துடன் ஏவுகனைகள் […]

பகிரங்கத்துக்கு வரும் மறைவிட வங்கி கணக்குகள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Cayman தீவு (Cayman Island), Mann தீவு (Isle of Man), British Virgin Island, Bermuda போன்ற இடங்களில் வெளிநாட்டவர் இரகசிய வங்கி கணக்குகள், நிறுவனங்கள் போன்றவற்றை வைத்திருக்க முடியும். அவ்வாறு வைப்புகள், சொத்துகளை வைத்திருப்போரின் பெயர், முகவரி போன்ற விடயங்களை இந்த அரசுகள் இரகசியமாக வைத்திருக்கவும் உதவும். அமெரிக்கா, கனடா போன்ற செல்வந்த நாட்டு திருட்டு செல்வந்தர்களும் சில வறிய நாட்டு திருட்டு பண உரிமையாளர்களும் இங்கு சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதன்மூலம் இவர்கள் தமது நாடுகளில் வரி […]

வடகொரியா விடயத்தில் குழம்பியுள்ள அமெரிக்கா

வழக்கமான சர்வதேச இராசதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் முரண்டுபட்டு செயல்படும் வடகொரியாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது அமெரிக்கா. பகிரங்கமாக வடகொரியாவின் நடவடிக்கைகளை பலமாக சாடிவரும் அமெரிக்கா, தாம் அளவுக்கு அதிகம் வடகொரியாவை சீண்டி தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து விடுவோமோ என்றும் கவலை கொள்கிறது. ஒருபுறம் அணுகுண்டு வீசக்கூடிய B-52 மற்றும் B-2 விமானங்களையும் அதிநவீன F-22 யுத்த விமாங்களையும் தென்கொரியா மேலாக அண்மையில் பறக்க விட்டாலும், மறுபுறம் கொரிய குடா பகுதியில் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும் தொடங்கியுள்ளது […]

சைப்பிரஸ் வங்கியிலும் பணத்துக்கு பாதுகாப்பில்லை

பொருளாதாரத்தில் முடங்கிப்போகும் ஐரோப்பிய நாடுகளில் சைப்பிரசும் அடங்கும். கல்விமான்கள் உலகம் வங்கிகளை ஒரு பாதுகாப்பானதும் புத்திசாலிகளின் பண வைப்பிடமாகவும் அடையாளம் காண்பதுண்டு. ஆனால் சைப்பிரஸ் அது பொய்யாகி விட்டது. பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பும் நோக்கில் அவ்வரசு 100,000 யூரோக்களுக்கும் அதிகமாக Bank of Cyprus PCL, இல் வைப்பு வைத்திருந்தோரின் முதலில் 40% ஐ ‘வரி’ ஆக அபகரிக்கிறது. மிகுதி 60% கூட வைப்பாளார்களுக்கு பணமாக கிடைக்கப்போவது இல்லை. பதிலாக அந்த வங்கிகளில் அவர்களின் 60% இக்கு […]

ரெங்கன் ராஜரட்ணம் மீது வலைவீசும் அமெரிக்கா

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) என்பவர் அமெரிக்காவில் பங்கு சந்தை மோசடிகள் காரணமாக 11 வருட சிறையை அனுபவித்து வருகிறார். இவர் பெரிய நிறுவனக்களின் தரவுகளை களவாக பெற்று அதற்கு ஏற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு அல்லது விற்பனை செய்து அதன் மூலம் சட்டவிரோத இலாபம் பெற்றுவந்துள்ளார். அந்த குற்றம் நிறுபிக்கப்பட்டதாலேயே அவர் 11 வருட சிறை தண்டனை பெற்றார். இப்போது அவரின் தம்பியார் ரெங்கன் என்பவர் மீது வழக்கு தொடர்கிறது அமெரிக்க […]

இத்தாலி விவகாரம், இந்தியாவை எச்சரிக்கிறது EU

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான இராயதந்திர உறவு முறிவு இப்போது ஐரோப்பிய நாடுகளையும் உள்ளே இழுக்கிறது. Massimiliano Latorre, Salvatre Girone என்ற இரண்டு இத்தாலிய படையினர் கடந்த வருடம் (2012) இரண்டு இந்திய மீனவர்களை இந்தியாவின் தென் பகுதி கடலில் வைத்து சுட்டு கொன்றிருந்தனர். இத்தாலியர்களின் கூற்றுப்படி, இவர்கள் இந்திய மீனவர்களை கடல் கொள்ளையர் என்று கருதியிருந்திருந்தனர். அத்துடன் இத்தாலியின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த பகுதி சர்வதேச கடல், அதனால் இத்தாலியிலேயே இந்த விசாரணை நடாத்தப்படல் அவசியம். ஆனால் இவர்களை கைது செய்த […]