அமெரிக்கவின் John McCain சிரியா பயணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் Arizona மாநிலத்தின் senator பதவியில் உள்ளவருமாகிய John McCain திங்கள்கிழமை சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடும் ஆயுததாரிகளை சந்திக்க சென்றுள்ளார். இவர் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான குழுக்களை மட்டுமே சந்தித்துள்ளார். குறிப்பாக ஜெனரல் Salim Idris என்றபவரை McCain சந்தித்திளார். 2011 ஆம் ஆண்டில் லிபியாவில் நடைபெற்ற கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளின்போதும் McCain அங்கு சென்று கிளர்ச்சிக்குளுக்களுக்கு உதவி வழங்கியிருந்தார். லிபியா, சிரியா போன்ற நாடுகளில் […]

சிரியாவுக்கு ரஷ்யாவின் S-300 ஏவுகணை, அமெரிக்கா கவலை

அந்நியர்களால் ஆரம்பிக்கப்பட்டு 70,000 அதிகமான உயிர்களை பலிகொண்ட சிரியா யுத்தம் இப்போ ஒருபடி மேலே போகிறது. அண்மையில் சிரியாவுக்கு S-300 என்ற ஏவுகணைகளை ரஷ்யா வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அமெரிக்காவின் செயலாளர் John Kerry இந்த விற்பனை இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றுள்ளார். அதேவேளை சிரியாவில் கிளர்ச்சி புரிவோருக்கு U$ 100 மில்லியன் மேலதிக உதவிகளையும் அமெரிக்கா செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த யுத்தத்தை மேற்கு ஆரம்பித்ததே இஸ்ரவேலுக்கு எதிரான […]

சீன செல்வந்தர்களை கண்வைத்து ஆஸ்திரேலியா விசா நடைமுறை

ஆஸ்திரேலியா அண்மையில் ஒரு பதிய விசா வகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விசேட முதலீட்டாளர் விசா முறைமை சீனாவில் பெருகிவரும் செல்வந்தர்களையே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசா வகுப்பு முறைமை குறைந்தது A$ 5 மில்லியன் முதலீட்டை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வோருக்கு 5 வருடம் வாழ விசா வழங்குகிறது. அந்த 5 வருடத்தின் பின் விரும்பின் அவர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறவும் உரிமை உண்டு. இதுவரை சுமார் 170 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் அதிகமானோர் சீன பிரசைகள். […]

1994 ஆம் ஆண்டில் ஜப்பானில் 60,000 எரிபொருள் நிலையங்கள், இன்று 35,000

சனத்தொகை வேகமாக அழிந்துவரும் நாடுகளுள் முன்னணி வகிப்பது ஜப்பான். 1915 இல் 7.7% சனத்தொகை அதிகரிப்பு, 1930 இல் 7.0% அதிகரிப்பு, 1950 இல் 15.6% அதிகரிப்பு, 1975 இல் 7.9% அதிகரிப்பு என்றெல்லாம் இருந்த ஜப்பானில் 2005 இல் சனத்தொகை அதிகரிப்பு வெறும் 0.7% ஆகி, அது 2010 இல் 0.2% ஆகி தற்போது சனத்தொகை வீழ்ச்சியை எதிர்பார்க்கிறது. அதாவது 2012 இல் சனத்தொகை மாற்றம் -0.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு வேகமாக அதிகரித்து வருவது முதியோர் எண்ணிக்கையே. 1930களில் இருந்து […]

CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்ற ஆப்கான் ஜனாதிபதி

ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கார்சாய் (Hamid Karzai) தான் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி New York Times என்ற பத்திரிக்கை அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கார்சாய் இவ்வாறு கூறியுள்ளார். NY Times செய்தியின்படி இவர் பல பத்து மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பொதிகளில் பெற்றுள்ளார். அவர் தனது பதிலில் “ஆம், தேசிய பாதுகாப்பு அலுவலகம் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவுடன் இருந்து உதவிகளை பெற்று வருகிறது” […]

போராட்டத்தை கைவிடும் PKK

PKK (Kurdistan Workers’ Party) என்ற குர்திஸ் இனத்தை சார்ந்த ஆயுத குழு 1978 ஆம் ஆண்டில் இருந்து துருக்கிக்கு (Turkey) எதிராக போராடி வந்திருந்தது. Cold-War காலத்தில்முளைத்த எல்லா போராட்ட குளுக்களைப்போல் இதுவும் ஆரம்பத்தில் மேற்கு சார்பான துருக்கிக்கு எதிரான ஓர் சோஷலிச குழுவாகவே கொள்கைகளை கொண்டிருந்தது. பல மேற்கு நாடுகள் இந்த குழுவை பயங்கரவாத குழுவாக தடை செய்திருந்தாலும் மறைமுகமாக தமது நாடுகளில் செயல்படவிட்டன (அதையே புலிகளுக்கும் செய்திருந்தனர்). துருக்கியின் இன் நண்பன் அமெரிக்காகூட தேவைகள் ஏற்படும்போது PKK இக்கு உதவியும், அதனிடம் […]

பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி நிலையம் உடைந்து 120 வரை பலி

பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி செய்யும் 8 மாடி கட்டம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 120 பணியாளர்வரை மரணமாகி உள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு வடக்கே 20 km தூரத்தில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9:00 மணியவில் இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது. மேலும் 5000 பணியாளர்வரை இடிபாடுகளுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு நாட்டு பிரபல ஆடை நிறுவனங்கள் இங்கே தமது ஆடைகளை உற்பத்தி செய்வதுண்டு. Calvin Klein, Tommy Hilfiger, Gap போன்ற நிறுவனங்களும் Wal-Mart போன்ற விற்பனை நிலையங்களும் இதில் அடங்கும். பங்களாதேசில் சுமார் 4500 ஆடை உற்பத்தி […]

இராணுவ செலவுகளை US $35 பில்லியன் ஆல் குறைக்கும் ஐரோப்பா

NATO வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீடுகள். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய NATO நாடுகளின் இவ்வருடத்துக்கான இராணுவ வரவுசெலவு சுமார் US $35 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வகை குறைப்பு அடுத்துவரும் வரும் வருடங்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை NATO வின் செலவுகளின் சுமார் 62% மட்டுமே செலுத்தி வந்த அமெரிக்கா இப்போது சுமார் 75% செலுத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பங்களிப்பு குறைவதே இதற்கு காரணம். இதேவேளை அமெரிக்காவும் […]

Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்கா

Laser ஆயுதங்கள் அமெரிக்கா போன்ற முன்னணி இராணுவங்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள். இந்த ஆயுதங்களின் தரம், பயன்பாடு என்பன முற்றாக அறிப்படவில்லை. இப்போதும் இவை பரீட்சாத்த நிலையிலேயே உள்ளன. அவ்வாறு இருக்கையில் தனது Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்க இராணுவம். இந்த ஆயுதம் USS Ponce என்ற தாக்குதல் கப்பலில் நிலைகொண்டிருக்கும். அதிக சக்தி கொண்ட Laser கதிர்களை செலுத்துவதன் மூலம் இந்த ஆயுதங்கள் ஏவுகணைகளில் உள்ள இலத்திரனியல் பாகங்களை செயல் இழக்க செய்யலாம், அத்துடன் ஏவுகனைகள் […]

வடகொரியா விடயத்தில் குழம்பியுள்ள அமெரிக்கா

வழக்கமான சர்வதேச இராசதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் முரண்டுபட்டு செயல்படும் வடகொரியாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது அமெரிக்கா. பகிரங்கமாக வடகொரியாவின் நடவடிக்கைகளை பலமாக சாடிவரும் அமெரிக்கா, தாம் அளவுக்கு அதிகம் வடகொரியாவை சீண்டி தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து விடுவோமோ என்றும் கவலை கொள்கிறது. ஒருபுறம் அணுகுண்டு வீசக்கூடிய B-52 மற்றும் B-2 விமானங்களையும் அதிநவீன F-22 யுத்த விமாங்களையும் தென்கொரியா மேலாக அண்மையில் பறக்க விட்டாலும், மறுபுறம் கொரிய குடா பகுதியில் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும் தொடங்கியுள்ளது […]