துரையப்பா கனடாவில் போலீஸ் அதிகாரி

இலங்கையில் பிறந்து கனடா சென்ற நிசான் துரையப்பா என்பவர் Toronto நகரை அண்டியுள்ள Peel பகுதியின் (Peel Region) தலைமை போலீஸ் அதிகாரியாக அக்டோபர் முதல் பணியாற்றவுள்ளார். . இலங்கையில் இருந்து கனடா வந்த இவர் University of Toronto வில் BA கல்வி பயின்றவர். இவர் 1995 ஆம் ஆண்டில் அண்மையில் உள்ள Halton Regional பகுதி போலீஸ் சேவையில் தனது காவல்துறை பணியை ஆரம்பித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டில் அப்பகுதியின் Deputy Chief […]

70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1ஆம் திகதி, சீனா தனது தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70 ஆம் வருட நிறைவை பெரும் ஆயுத அணிவகுப்புகளுடன் கொண்டாடியுள்ளது. . அணிவகுப்புக்கு வந்திருந்த சில ஆயுதங்கள் அமெரிக்க இராணுவ ஆய்வாளரை வியக்க வைத்துள்ளன. . அணிவகிப்பில் சென்ற DF-17 (அல்லது DongFeng-17) என்ற hypersonic ஏவுகணை ஒலியிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லவல்லது (Mach 5 அல்லது 3,400 mph). இவ்வகை ஏவுகணை உலகம் அறிந்தவரையில் சீனாவிடம் மட்டுமே தற்போது […]

இந்தியாவில் மீண்டும் வெங்காய தட்டுப்பாடு

இந்தியாவில் மீண்டும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெங்காயம் பயிரிடப்பட்ட இந்திய பகுதிகளில் மிதமிஞ்சிய மழை பொழிந்தால் வெங்காய பயிர்கள் வெள்ளத்துள் அமிழ்ந்து அழிந்துள்ளன. அதனாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. . தட்டுப்பாட்டின் விளைவால் உருவாகும் வெங்காய விலை உயர்வை தடுக்கும் நோக்கில் இந்தியா வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்தி உள்ளது. . தற்போது இந்தியாவில் வெங்காய விலை இறாத்தல் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 80 ரூபாய் ($1.10) ஆக உள்ளது. சில மாதங்களுக்கு முன், உற்பத்தி […]

ஜெர்மன் NATO நிலையத்தின் உள்ளேயே Darknet

Darknet என்பது இன்டர்நெற்றுக்குள் ஒளிந்து செயல்படும் வலையமைப்பு. இது பொதுவாக உலகின் பெரும் சட்டவிரோதிகள், போதை கடத்துவோர் போன்ற சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படும் இன்டர்நெற்றின் அங்கம். சாதாரண பாவனையாளர் இதை அடைய முடியாது. . Darknet பாவனையாளர் தமது இணைப்புகளை மிகத்தரமான encyption செய்வதன் மூலம் அரசுகள், போலீசார் அடையாளம் காணமுடியாதவாறு தொடர்பாடல் செய்வர். இவர்களுக்கு சேவை செய்யும் server களை இலாப நோக்கம் மட்டும் கொண்ட சமூகவிரோத நிறுவனங்கள். அவ்வகை நிறுவனம் ஒன்றே ஜெர்மனில் உள்ள […]

எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை ஆர்ப்பாட்டங்கள் சர்வாதிகாரி ஜெனரல் சிசியின் (Abdel-Fattah el-Sissi) அரசுக்கு எதிரானவை. . சனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருந்த முன்னைய மோர்சி அரசை 2013 ஆம் ஆண்டு இராணுவ சதி மூலம் கலைத்து, மோர்சியை சிறையில் அடைத்து, ஆட்சிக்கு வந்திருந்த சிசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் Mohamed Ali என்ற செல்வந்தர். இவர் முன்னாளில் எகிப்திய இராணுவத்துக்கு கட்டடங்கள் கட்டும் சேவை (contractor) செய்தவர். இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் […]

உல்லாச பயணிகளை அழைக்கிறது சவுதி

முதல் முறையாக சவுதி அரேபியா உல்லாச பயணிகள் மீது நாட்டம் கொண்டுள்ளது. அந்நாட்டின் புதிய செயல்படுகள் உலகம் எங்கும் இருந்து உல்லாச பயணிகள் சவுதி செல்வதை ஊக்குவிக்க உள்ளன. . இதுவரை மெக்கா செல்லும் பயணிகளும், பாரிய முதலீட்டாளர்களும், தொழில் புரிவோரும் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து சவுதி செல்லக்கூடியதாக இருந்தது. ஆனால் விரைவில் உல்லாச பயணிகளையும் சவுதி வரவேற்கவுள்ளது. . உல்லாச பயணிகளை வரவேற்க சவுதி தீர்மானித்தாலும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நிலவும். மது பாவனை தொடர்ந்தும் […]

ஐ. நா. படைகள் இலங்கை இராணுவத்துக்கு தடை

இலங்கை இராணுவத்தை ஐ.நா. வின் அமைதி படைகளில் இணைப்பதை ஐ.நா. தடை செய்துள்ளது. லெப். ஜெனரல் Shavendra Silvaவை இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமித்ததே ஐ. நா.வின் இந்த நடவடிக்கைக்கு காரணம். . ஐ.நா. வின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் Farhan Haq இந்த செய்தியை புதன்கிழமை வெளியிட்டு உள்ளார். . இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் Shavendra Silva யுத்த குற்ற செயல்களை செய்திருந்தார் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுகள் இலங்கை அரசால் […]

ரம்பை பதவி விலக்க impeachment விசாரணை

அமெரிக்க சனாதிபதி ரம்பை பதவியில் இருந்து விரட்டும் நோக்கில் எதிர் கட்சியான Democratic கட்சி ரம்ப் மீது impechment விசாரணையை ஆரம்பித்துள்ளது. Joe Biden, அவரது மகன் Hunter Biden மீது விசாரணைகள் செய்யுமாறு ரம்ப் சட்டவிரோதமாக யுக்கிரைன் ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கியதே காரணம். . சனாதிபதி போன்ற மிக உயர்ந்த பதவிகளில் உள்ளோர் தவறு செய்யும்போது அவர்களை பதவியில் இருந்து விரட்ட கொண்டுள்ள விசாரணை முறையே impeachment. . இதுவரை அமெரிக்காவின் வரலாற்றில் Andrw Johnson (1865-1869), […]

அமெரிக்கரை விசாரிக்க யுக்கிரனை அழுத்திய ரம்ப்

முன்னாள் சனாதிபதி ஒபாமாவின் உப-சனாதிபதியான ஜோ பைடனின் (Jow Biden) மகன் Hunter Bidenனை விசாரிக்குமாறு ரம்ப் யுக்கிரைனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். காரணம் இன்றி அவ்வாறு செய்ய யுக்கிரைன் பின்னடிக்க, அந்த நாட்டுக்கான இராணுவ உதவியையே இடைநிறுத்தினார் ரம்ப். . அடுத்த சனாதிபதி தேர்தலில் Joe Biden Democrtic கட்சி சார்பில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடும் என்று கருதும் ரம்ப் முன்கூட்டியே Biden குடும்பம் மீது குற்றம் சுமத்த முனைந்துள்ளார். . யுக்கிரனுக்கு அமெரிக்கா வழங்க இருந்த […]

அமெரிக்க-ஆப்கான் தாக்குதலுக்கு 40 பேர் பலி

அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் மேற்கொண்ட இராணுவ தாக்குதலுக்கு திருமண வீடு ஒன்றில் இருந்த 40 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஞாயிரு இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு மேலும் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர். . Musa Qala என்ற பகுதியில், திருமண வீட்டுக்கு அருகில் தலபான்கள் பயிற்சி பெறுவதாக கூறியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. . ஆனால் ஆப்கானிஸ்தான் அரச படைகள் தாம் 22 தலபான்களை கொலை செய்ததாகவும், 14 பேரை கைது செய்ததாகவும் […]