மரணப்படுக்கையில் Thomas Cook

1841 ஆம் ஆண்டு Thomas Cook என்ற பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் மிக பழைய உல்லாச பயண முகவர் நிறுவனமான Thomas Cook தற்போது முதிலீட்டு தொல்லையால் மரண படுக்கையில் உள்ளது. போதிய மேலதிக முதலீடு இந்த கிழமைக்குள் கிடைக்காவிடில் அந்நிறுவனம் இழுத்து மூடப்படலாம். தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் உல்லாச பயணத்தை மேற்கொண்டுள்ள சுமார் 600,000 பயணிகளும் இடைநடுவில் கைவிடப்படலாம். இதில் 160,000 பேர் பிரித்தானியர். . சீனாவின் Fosun Tourism Group என்ற நிறுவனம் […]

Howdy Modi மேடையில் மோதியும், ரம்பும்

அமெரிக்காவின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் உள்ள NRG அரங்கில் இன்று ஞாயிரு மதியம் இடம்பெறும் “Howdy Modi” நிகழ்வில் பிரதமர் மோதியும், சனாதிபதி ரம்பும் தோன்றி உள்ளார்கள். . ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மோதி காஸ்மீரின் விசேட உரிமைகளை பறித்து அங்கு கடும் கட்டுப்பாட்டு ஆட்சியை நடைமுறை செய்ததை காரணமாக கூறி பல ஆர்ப்பாட்டங்களும் Houston நகரில் இடம்பெறுள்ளன. . 2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்கு சேர்க்கும் […]

தென்கொரிய முகாம்கள் 15ஐ கைவிடும் அமெரிக்கா

தனது கட்டுப்பாடில் இருந்துவந்த 15 முகாம்களை அமெரிக்க படைகள் வேகமாக கைவிட்டு, தென்கொரிய அரசிடம் கையளித்துள்ளது. மொத்தம் 26 முகாம்களில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறும் என்றும் கூறப்படுகிறது. . 1953 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் முழு அளவிலான இராணுவ கடுப்பாட்டை கொண்டிருந்தன. அங்கு தற்போது சுமார் 28,500 அமெரிக்க படைகள் நிலைகொண்டு உள்ளன. . வளர்ந்து வரும் சீனா பெருமளவு அமெரிக்க படைகள் அருகில் நிலைகொண்டிருப்பதை விரும்பவில்லை. சீனாவின் வெறுப்பை தணிக்க, […]

இஸ்ரேலில் இந்த வருடம் 3 தேர்தல்கள்?

இஸ்ரேலில் இந்த கிழமை நடந்து முடிந்த பொது தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை கைப்பற்றாத காரணத்தால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. . கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் போதிய ஆசனங்களை கைப்பற்றாத காரணத்தாலேயே இந்த கிழமை இரண்டாம் தேர்தல் நிகழ்ந்தது. ஆனால் இந்த தேர்தலும் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வல்லமையை வழங்கவில்லை. . மொத்தம் 120 ஆசங்களில், 33 ஆசனங்களை […]

Houston வருகிறார் பிரதமர் மோதி

இந்திய பிரதமர் மோதி அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்து ஹியூஸ்ரன் (Houston) நகருக்கு இந்த கிழமை இறுதியில் வருகிறார். இந்த கிழமை ஐ.நா. அமர்வுக்கு நியூ யார்க் நகரம் வரும் மோதி கூடவே Houston நகருக்கும் இந்தியர்களை சந்திக்க வருகிறார். . மோதி வரவுள்ள 50,000 ஆசனங்கள் கொண்ட அரங்கு நிரம்பும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் பல பாகங்களிலும் இருந்து இந்தியர்கள், குறிப்பாக பா.ஜ கட்சி ஆதரவாளர் Houston வருகின்றனர். . மோதி ஆதரவாளர் மட்டுமன்றி, எதிர்ப்பாளரும் கூடவே […]

தலபான் தாக்குதலுக்கு 48 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலபான் இன்று நடாத்திய இரண்டு தற்கொலை தாக்குதல்களுக்கு குறைந்தது 48 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். . தலைநகருக்கு வடக்கே ஆப்கானித்தான் ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க தூதுவரகத்துக்கு அருகே இடம்பெற்ற இன்னோர் தாக்குதலுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர். . இரண்டு தாக்குதல்களையும் தாமே செய்ததாக தலபான் உரிமை கூறியுள்ளது. இந்த மாதம் 28ஆம் […]

Lotus Tower திட்டத்தில் $11 மில்லியன் மாயமானது

இன்று திறப்பு விழா செய்யப்பட்ட, தென் ஆசியாவிலேயே மிக உயர்ந்த (356.3 மீட்டர்) கோபுரமான, Louts Tower தொடர்பாக Reuters செய்தி நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையில் இந்த கட்டுமானத்தின் போது மாயமான $11 மில்லியன் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளன. . ஜனாதிபதி சிறிசேனாவின் கூற்றுப்படி 2012 ஆம் ஆண்டில், ராஜபக்ச ஆட்சி காலத்தில், இலங்கையின் Telecommunication Regulatory Commision (TRC) 2 பில்லியன் ($11 மில்லியன்) பணத்தை சீனாவின் Aerospace […]

கனவில் விழுங்கிய மோதிரம் நிசமாக வயிற்றுள்

Jenna Evans என்ற 29 வயது அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்து பெண் வேகமாக செல்லும் ரயில் ஒன்றில் பயணிக்கையில், திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் தனது engagement மோதிரத்தை விழுங்கி உள்ளார். . மறுநாள் எழுந்த அந்த பெண் தனது விரலில் மோதிரம் இல்லாமையை அறிந்துள்ளார். அப்போதே அப்பெண் ரயில் விவகாரம் ஒரு கனவு என்பதையும், மோதிரத்தை விழுங்கியது நிசம் என்பதையும் உணர்ந்துள்ளார். . உடனே வைத்தியசாலை சென்ற அப்பெண் X-ray மூலம் தனது வயிற்றுள் 2.4 […]

Brent எண்ணெய் விலை 19% ஆல் அதிகரிப்பு

சனிக்கிழமை சவுதி எண்ணெய் தயாரிப்பு நிலையங்கள் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கியதால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி சுமார் 50% ஆல் தடைப்பட்டது. அதன் காரணமாக இன்று திங்கள் ஐரோப்பிய எண்ணெய் சந்தையில் Brent எண்ணெய் சுட்டி ஆரம்பத்தில் 19% ஆல் அதிகரித்து, பரல் ஒன்று $71.95 ஆக அதிகரித்தது. பின்னர் விலை சற்று குறைத்தாலும், உலக அளவில் எண்ணெய் விலை சிலகாலம் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . அதேவேளை அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) […]

சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது இன்று சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் (drones) தாக்கியதில் சவுதியின் எண்ணெய் உற்பத்தி 50% ஆல் தடைப்படுள்ளது என்று கூறப்படுகிறது. . தாமே இந்த தாக்குதலை செய்ததாக யெமன் நாட்டில் போராடும் Houthi என்ற ஆயுத குழு கூறியுள்ளது. தாம் 10 ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும் கூறியுள்ளது மேற்படி குழு. . யெமென் அரசுக்கு சவுதி உதவுவதாலும், தம் மீது சவுதி பெருமளவு தாக்குதல்களை செய்வதாலும் மேற்படி குழுவுக்கும் சவுதிக்கும் இடையில் […]