சீனா பக்கம் சாய்ந்தது பனாமா

பனாமா (Panama) என்ற மத்திய அமெரிக்க நாடும் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. பனாமாவுக்கு இன்று திங்கள் பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியும் (Xi JinPing) பனாமாவின் ஜனாதிபதியும் (Juan Carlos Varela) இன்று 19 உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுள்ளனர். பனாமாவும் சீனாவின் Belt and Road திட்டத்துள் ஒரு அங்கமாகிறது. . சீனா பனாமாவுள் நுழைந்தது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவே. அத்திலாந்திக் சமுத்திரத்தையும், பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கும், சுமார் 82 km நீளம் கொண்ட,  பனாமா கால்வாய் […]

இந்திய H4 மனைவிகளுக்கு வருகிறதா ஆபத்து?

அமெரிக்காவுக்கு தேவையான தொழிநுட்ப ஊழியர்கள் இல்லாதபோது அந்த வேலைவாய்ப்புகளை நிரப்ப H1B விசா (non-immigrant visa) மூலம் தற்காலிக ஊழியர்களை அழைப்பதுண்டு. தற்போது வருடம் ஒன்றில் சுமார் 400,000 H1B விசாக்களை உலகம் எங்கும் அமெரிக்கா வழங்கிகிறது. . ஆனால் 75% H1B விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கின்றன. இவ்வாறு பெரும் பகுதி விசாக்களை கைப்பற்ற இந்திய தொழிநுட்ப நிறுவனங்களை பல குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. . அதேவேளை H1B விசா மூலம் அமெரிக்கா செல்லும் ஊழியர்களில் 90% […]

அமெரிக்கா-சீனா 90 நாள் பொருளாதார யுத்த நிறுத்தம்

இன்றைய G20 அமர்வின்போது அமெரிக்காவும், சீனாவும் தமது பொருளாதார யுத்தத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்த இணங்கி உள்ளன. ஆனால் வரும் 90 நாட்களுக்குள் இறுதி தீர்வு ஒன்று ஏற்படாவிடின் இரு பகுதிகளும் தாம் நடைமுறை செய்துள்ள மேலதிக இறக்குமதி வரிகளை (tariff) அதிகரிக்கும். . தற்போது அமெரிக்கா சீனாவில் இருந்து வரும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிடுகிறது. இந்த மாத இறுதிக்குள் சீனா அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு இணங்காவிடின் 10% வரி […]

முன்னாள் ஜனாதிபதி George Bush மரணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி George H. Bush இன்று (2018-11-30) தனது 94 ஆவது வயதில் காலமானார். 1991 ஆம் ஆண்டில் சதாமை குவைத்தில் (Kuwait) இருந்து விரட்டியதால் பிரபலம் அடைந்து இருந்தாலும், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக ஒருமுறை மட்டுமே இவர் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். . இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்க கடற்படையின் விமானியாக இருந்த இவர் 1944 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டும் இருந்தார். இராணுவ சேவைக்கு பின் அரச […]

அழுத்தங்கள், முறுகல்கள் மத்தியில் G20 அமர்வு

அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களும், முறுகல்களும் உள்ள நிலையில் G20 அமர்வு ஆர்ஜென்டீனாவில் இடம்பெறவுள்ளது. நாளை வெள்ளி 30 ஆம் திகதியும், மறுநாள் டிசம்பர் 1 ஆம் திகதியும் இந்த அமர்வு இடம்பெறும். . அமெரிக்கா-சீனா பொருளாதார முறுகல், ரஷ்யா-யுக்கிரைன் முறுகல், சவுதி-ஜமால் கசோகி விடயம், ஈரான் பொருளாதார தடை, வடகொரியா போன்ற பல விடயங்கள் இம்முறை G20 அமர்வுள் ஆதிக்கம் செலுத்துகின்றன. . ரம்ப் அரசு சீனாவிலிருந்தான பொருட்களுக்கு புதிய இறக்குமதி […]

இணக்கம் இல்லா பிரிவு பிரித்தானியாவுக்கு அழிவு?

இணக்கம் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெறியேறுமாயின் அது பிரித்தானியாவை பொருளாதார மந்த நிலைக்கு (recession) தள்ளலாம் என்று எச்சரித்துள்ளது பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England). . இந்த வங்கியின் கணிப்பின்படி இணக்கம் இன்றிய பிரிவு பிரித்தானியாவின் பொருளாதாரத்தை சுமார் 8% ஆல் குறைக்கலாம். அத்துடன் பிரித்தானியாவில் உள்ள வீடுகளின் விலை சுமார் 33% ஆல் குறையலாம் என்றும் கூறியுள்ளது Bank of England. அதேவேளை பிரித்தானியாவின் நாணயமான pound சுமார் 25% […]

முடிந்த தாய்வான் தேர்தல் அமெரிக்காவுக்கு பாதிப்பு

தாய்வானில் 24 ஆம் திகதி இடம்பெற்ற கிராம, நகர, மாநகர தேர்தல்களின் முடிவுகள் அங்குள்ள ஆளும் கட்சியான DPP (Democratic Progressive Party) க்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பெரும் பாதகமான முடிவாக அமைத்துள்ளது. . 2014 ஆம் ஆண்டு வரை தாய்வானில் ஆட்சியில் இருந்த KMT கட்சி, தாய்வான் சீனாவின் அங்கம் என்பதை ஏற்று, மெதுவாக சீனாவுடன் உறவை புதிப்பித்து வந்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்திருந்த DPP கட்சி சீனாவுடனான உறவுகளை முறித்து, […]

மீண்டும் வலுபெறும் ரஷ்யா, யுக்கிரேன் முறுகல்

ரஷ்யாவுக்கும், யுக்கிரேனுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை வலுவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனுக்கு சொந்தமான 3 கப்பல்களை ரஷ்யா தடுத்து வைத்தமை காரணமாகவே முறுகல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. தமது நீர்பரப்புள் அந்த கப்பல்கள் நுழைந்ததாலேயே தாம் அவற்றை கைப்பாற்றியதாக ரஷ்யா கூறியுள்ளது. . ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனின் 3 கப்பல்களும் கருங்கக்கடல் (Black Sea) துறையான Odesa வில் இருந்து Azov கடலில் (Sea of Azov) உள்ள துறையான Mariupol நோக்கி செல்கையிலேயே இந்த முரண்பாடு உருவாகியது. […]

அந்தமான் ஆதிவாசிகள் அமெரிக்கரை கொலை

John Allen Chau என்ற 27 வயது அமெரிக்கரை அந்தமான் தீவுகளில் ஒன்றான North Sentinel தீவில் வாழும் ஆதிவாசிகள் அம்புகளால் தாக்கி கொலை செய்துள்ளார். Sentinelese என்று வெளியாரால் அழைக்கப்படும் இந்த ஆதிவாசிகள் வெளியார் அங்கு செல்வதை விரும்பவில்லை. . John Chau மேற்படி தீவை அடைய இந்த மாதம் 14 ஆம் திகதி முனைந்துள்ளார். முயற்சி பலிக்காதவிடத்து, இரு தினங்களின் பின் மீண்டும் அத்தீவு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போதே இவர் அம்புகளால் கொலை […]

மரணித்த திமிங்கிலத்துள் 115 cups, 25 bags…

அண்மையில் மரணித்த திமிங்கிலம் ஒன்று இந்தோனேசியா கரையில் ஒதுங்கி உள்ளது. உருக்குலைந்த அந்த திமிங்கிலத்து வயிற்றுள் சிறியனவும், பெரியனவுமாக சுமார் 1000 பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. . அந்த திமிங்கிலம் மரணிக்க அது உட்கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்படாது இருப்பினும், அந்த அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒரு திமிங்கிலத்துள் இருப்பது மனிதத்தின் வளர்ச்சியால் உருவாகும் பாரதூர பக்கவிளைவுகளை காட்டியுள்ளது. . சுமார் 9.5 மீட்டர் நீளமான இந்த திமிங்கிலத்துள் (sperm whale) இருந்த […]