14 குண்டுகளை அனுப்பிய அமெரிக்கர் கைது

அமெரிக்காவின் Democratic கட்சி தலைவர்களுக்கு 14 குழாய் குண்டுகளை தபால் மூலம் அனுப்பிய அமெரிக்கர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. Florida மாநிலத்தில் உள்ள Plantation என்ற நகரிலேயே இந்த கைது இடம்பெற்று உள்ளது. . கைது செய்யப்பட்டுள்ள, 56 வயதுடைய, Cesar Sayoc என்பவர் ஒரு ரம்ப் ஆதரவாளர். ரம்பின் பிரச்சார கூட்டங்கள் பலவற்றுக்கு சென்ற இவர், அந்த இடங்களில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை Internet எங்கும் பதித்துள்ளார். அவரின் […]

ரஷ்ய தளத்தை தாக்க முனைந்தது அமெரிக்கா?

சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகளின் Hemeimeem தளத்தை அமெரிக்கா அடையாளம் அறியப்படாத ஆளில்லா விமானங்களை திசை திருப்பி தாக்க முனைந்தன என்று ரஷ்யாவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகர் சென்றுள்ள ரஷ்ய உதவி பாதுகாப்பு அமைச்சர் இன்று இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார். . அடையாளம் அறியப்படாதோரால் ஏவப்பட்ட 13 ஆளில்லா விமானங்களை (drones) அப்போது Mediterranean கடல் மேலே பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் Poseidon-8 என்ற இராணுவ விமானமே, தனது manual கட்டுப்பாட்டுள் […]

ஏழு அரசியல்வாதிகளுக்கு ஏழு குண்டுகள்

இன்று புதன்கிழமை அமெரிக்காவின் ஏழு Democratic கட்சி சார்பு அரசியவாதிகளின் முகவரிகளுக்கு ஏழு குழாய் குண்டுகள் (pipe bombs) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் இடைவழியில் பாதுகாப்பு படைகளால் தடுக்கப்பட்டுள்ளன. . அந்த 7 குழாய் குண்டுகளும் பின்வருவோரின் முகவரிகளை அனுப்பப்பட்டு உள்ளன: 1) முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் Washington DC முகவரி, 2) ஹிலாரி கிளின்ரனின் நியூ யார்க் முகவரி , 3) ஒபாமா அரசின் CIA director John Brennanனின் Washington DCயில் உள்ள […]

இரு இந்திய CBI தலைமைகள் பதவி நீக்கம்

இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான CBI யின் (Central Bureau of Investigation) முதலாவது அதிகாரியான director Alok Kumar Verma என்பவரும், இரண்டாவது முக்கிய அதிகாரியான Rakesh Asthana என்பவரும் இன்று புதன் கிழமை (அக்ரோபர் 23) மோதி அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். Nageshwar Rao என்பவர் தற்போது director ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். . பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கும் இடையே வலுத்து வந்த முரண்பாடுகளே அவர்களின் பதவி நீக்கலுக்கு […]

உல்லாச பயணத்தில் இலங்கை முதலிடத்தில்

அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Lonely Planet என்ற உல்லாச பயணத்துறை  புத்தகங்கள், வழிகாட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் 2019 ஆண்டில் செல்லவேண்டிய முதலாவது நாடாக இலங்கையை தெரிவு செய்துள்ளது. இதனால் இலங்கைக்கான உல்லாச பயணிகள் வரவு 2019 ஆம் ஆண்டில் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. . Lonely Planet இலங்கையை தெரிவு செய்தமைக்கு காரணங்களாக அழகிய கடற்கரைகள், சிறந்த உணவு வகைகள், தாராளமான இயற்கை, அனுராதபுரம், சிகிரியா உட்பட்ட புராதன நிலையங்கள், கணிசமான விலங்குகள், […]

அணுவாயுத இணக்கத்தை முறிக்கிறது அமெரிக்கா

1987 ஆம் ஆண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் செய்துகொண்ட Intermediate Nuclear Forces (INF) இணக்கத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் தெரிவித்து உள்ளார். . றேகனும் (Reagan), கர்பசோவும் (Gorbachev) செய்து கொண்ட இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ 500 km தூரம் முதல் 5,500 km தூரம் வரை பாயக்கூடிய, நிலத்தில் இருந்து ஏவப்படும் நடுத்தர அணு ஏவுகணைகளை தயாரிக்க முடியாது. இந்த உடன்படிக்கை குறிப்பாக ஐரோப்பாவை பாதுகாக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது. […]

தாய்வானில் ரயில் தடம்புரண்டது, 18 பேர் பலி

தாய்வானில் இன்று ஞாயிறு மாலை 4:50 மணியளவில் கடுகதி ரயில் ஒன்று தடம்புரண்டு உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் பலியாகியும், 170 காயமடைந்தும் உள்ளனர். . இந்த விபத்து Taipei நகரில் இருந்து சுமார் 70 km தூரத்தில் உள்ள Xinma என்ற ரயில் நிலையத்து அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் 366 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. . மேற்படி ரயில் 6 வருடங்களுக்கு முன்னரே சேவையில் இணைந்ததாகவும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் காலநிலை […]

Mega Million குலுக்கல் பரிசு $1.6 பில்லியன்

வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெறவுள்ள மெகா மில்லியன் (Mega Million) குலுக்கலுக்கான முதல் பரிசு தொகை $1, 600,000,000 ஆக்கவுள்ளது. நேற்று வெள்ளி இடம்பெற்ற குலுக்கலில் எவரும் முதல் பரிசுக்கான எண்களை (15, 23, 53, 65, 70, Mega Ball 7) தெரிவு செய்யாதவிடத்து இந்த கிழமை பரிசு $1.6 ஆக உயர்ந்துள்ளது. . இந்த குலுக்கல் பரிசு வழங்கப்படும் போது இதுவே உலகின் மிகப்பெரிய குலுக்கல் பரிசாக இருக்கும். இதற்கு முன், 2016 ஆம் […]

Khashoggi மரணத்தை ஏற்றுக்கொண்டது சவுதி

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) மரணமானதை சவுதி அரசு சற்றுமுன் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் கசோகி எவ்வாறு இறந்தார் என்பதையோ, அல்லது அவரின் உடல் எங்கே உள்ளது என்பதையோ சவுதி தெரிவிக்கவில்லை. . கசோகியின் மரணம் சவுதி தூதுவரகத்தில் நிகழ்ந்தது என்பதை துருக்கி திடமாக கூறி இருந்திருந்தும், அதை சவுதி இதுவரை மறுத்து வந்திருந்தது. கசோகி தூதுவரகத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக கூறியும் இருந்தது. […]

இந்திய ரயில் விபத்துக்கு 60 பேர் பலி

உள்ளுர் நேரப்படி வெள்ளி மாலை 6:30 மணியளவில் இந்தியாவின் புஞ்சாப் (Punjab) மாநிலத்தில் உள்ள Amritsar நகரில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், மேலும் 100 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர். . மேற்படி மக்கள் ரயில் பாதை வழியே நின்று பத்து தலை இராவணனை எரிக்கும் Dusshera என்ற இந்து பண்டிகையையும், அப்போது நடாத்தப்பட்ட வாணவேடிக்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அவ்வழியே வந்த ரயில் இவர்களை மோதி உள்ளது. . கேளிக்கைகளை […]