கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

அமெரிக்காவின் Maryland மாநிலத்து Baltimore நகரினூடு ஓடும் Patapsco என்ற ஆற்றில் சென்ற கொள்கலன் காவும் பெரியதோர் கப்பல் Francis Scott Key Bridge என்ற பாலத்தில் மோதியதால் பாலம் முற்றாக உடைந்து விழுந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 1:30 மணிக்கு (1:30 ET) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பாலம் 1.6 மைல் நீளமானது, 4 lane களை கொண்டது. அப்போது பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. இழப்புகளின் விபரம் இதுவரை அறியப்படவில்லை. சிங்கப்பூரில் […]

ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

நேற்று ஐ. நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க பைடென் அரசு அமெரிக்காவின் வீட்டோ (veto) வாக்கை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேறாது தடுக்கவில்லை என்பதால் இஸ்ரேல் அமெரிக்காவுடன் முரண்பட ஆரம்பித்துள்ளது. நேற்றைய ஐ. நா. தீர்மானம் இஸ்ரேல் உடனே காசா யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை அதன் வீட்டோ வாக்கு மூலம் தடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் […]

உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. தீர்மானம்

உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. தீர்மானம்

இன்று திங்கள் ஐ. நா. பாதுகாப்பு சபை செய்து கொண்ட வாக்கெடுப்பில் உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா வாக்களியாது இருக்க (abstained) ரஷ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா இம்முறை தனது வீட்டோ வாக்கை பயன்படுத்தி தீர்மானத்தை தடை செய்யவில்லை. இது அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தை காட்டுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் இந்த தீர்மானத்துக்கு இணங்க செயற்படுமா  என்பது அறியப்படவில்லை.

சீன அரச கணினிகளில் அமெரிக்க Chip களுக்கு தடை

சீன அரச கணினிகளில் அமெரிக்க Chip களுக்கு தடை

அமெரிக்காவின் Intel மற்றும் AMD (Advanced Micro Devices) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கும் chip களை சீன அரச திணைக்களங்களின் கணினிகளில் இருந்து நீக்குமாறு சீனா அறிவித்துள்ளது. மேற்படி chip களுக்கு பதிலாக சீன நிறுவனங்கள் தயாரிக்கும் chip கள் பயன்படுத்தப்படும். அதனால் மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் வருமானத்தை இழக்கும். 2023ம் ஆண்டில் Intel தனது வருமானத்தின் 27% த்தை சீனாவில் இருந்தே பெற்றுள்ளது. AMD நிறுவனம் 15% […]

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

The Commercial High Court of Colombo விடுத்த உத்தரவுக்கு அமைய இலங்கை McDonald’s உணவகங்கள் அனைத்தும் இன்று ஞாயிறு முதல் மறு ஏப்ரல் 4ம் திகதி வரை மூடப்படுகின்றன.  இலங்கை கிளைகளுக்கான உரிமை எடுத்து இயக்கும் (franchise) Abans PLC இந்த கிளைகளில் சர்வதேச தரத்திலான சுகாதார முறைமைகளை நடைமுறை செய்யவில்லை என்று அமெரிக்க தாய் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தற்போது 12 McDonald’s உணவகங்கள் இலங்கையில் Abans நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இவை கொட்டாஞ்சேனை, […]

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். இஸ்லாமிய ஆயுத குழுவான ISIS தாமே இந்த தாக்குதலை செய்ததாக உரிமை கொண்டாடி உள்ளது. Crocus City Center என்ற இசை நிகழ்ச்சி மண்டபமும் அதனுடன் இணைந்து உள்ள shopping mall உம் தீ பற்றி உள்ளது. இவ்வாறு ISIS தாக்குதல் ஒன்றை செய்ய திட்டமிடுகிறது என்று அமெரிக்கா […]

மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

இன்று வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு சபையில் (Security Council) வாக்கெடுப்புக்கு வந்திருந்த மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இம்முறை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்து வந்தது அமெரிக்கா. அதையே ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ வாக்குகள் மூலம் தோல்வியுற செய்துள்ளன. இதற்கு முன் வாக்கெடுப்புக்கு வந்திருந்த 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ மூலம் தோல்வியுற செய்திருந்தது. அந்த 3 தீர்மானங்களையும் ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்து இருந்தன. அமெரிக்கா இன்று எடுத்து வந்த தீர்மானத்தில் […]

டெல்லி முதலமைச்சர் கைது, காங்கிரஸ் பணம் முடக்கம்

டெல்லி முதலமைச்சர் கைது, காங்கிரஸ் பணம் முடக்கம்

டெல்லி முதலமைச்சர் Arvind Kejriwal வியாழக்கிழமை இந்தியமத்திய அரசின் Enforcement Directorate அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பகுதியில் Aam Aadmi Party (AAP) ஆட்சியில் உள்ளது. 2022ம் ஆண்டு டெல்லி பகுதியில் AAP மதுபான விற்பனையை தனியார்மயம் ஆக்கியதால் தனியார் நிறுவங்கள் இலாபம் அடைந்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. AAP அந்த சட்டத்தை பின்வாங்கி இருந்தது. அதேவேளை காங்கிரஸ் கட்சி $20 மில்லியன் பெறுமதியான தமது வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்று […]

செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் ஊடு செல்லும் தமது கப்பல்கள் கூதி (Houthi) ஆயுத குழுவால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் கூதியுடன் இணக்கம் ஒன்றை செய்துள்ளன. இஸ்ரேல்-காமாஸ் யுத்தம் ஆரம்பம் ஆகிய பின் கூதி ஆயுத குழு காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல், அமெரிக்க, பிரித்தானிய கப்பல்கள் மீது தாக்குதல்களை செய்து வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளும் கூதி மீது பதில் தாக்குதல்களை செய்து வருகின்றன. இதனால் பல […]

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமான பெங்களூரில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை உச்சம் அடைய  நிலைமை மேலும் மோசம் அடையும். அங்கு சுமார் 13,900 குழாய் கிணறுகள் உள்ளதாகவும் அதில் 6,900 கிணறுகள் முற்றாக வற்றி உள்ளதாக கூறப்படுகிறது. வற்றிய கிணறுகளில் சில 1,500 அடி ஆழமானவை. சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில் நாள் ஒன்றுக்கு 2 பில்லியன் லீட்டர் நீர் தேவை. ஆனால் தற்போது […]