இலங்கை அகதிகளுக்கு ஸ்டாலின் 318 கோடி

இலங்கை அகதிகளுக்கு ஸ்டாலின் 318 கோடி

தமிழ்நாட்டில் தற்போது தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 317 கோடி இந்திய ரூபாய்களை ஓதுக்கவுள்ளார். Rule 110 சட்டத்துக்கு அமைந்த இந்த அறிவிப்பை அவர் இன்று வெள்ளி தெரிவித்துள்ளார். அதில் 231 கோடி பணம் மொத்தம் 7,469 வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தில் 3,520 வீடுகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு ஏரி வாயு, அடுப்பு ஆகியனவும் இலவசமாக வழங்கப்படும். அதேவேளை கல்வி அமைச்சு 50 மாணவார்களுக்கு […]

காபூலில் 60 பொதுமக்கள், 12 அமெரிக்க படையினர் பலி

காபூலில் 60 பொதுமக்கள், 12 அமெரிக்க படையினர் பலி

காபூலில் இன்று வியாழன் இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 60 பொதுமக்களும், 12 அமெரிக்க படைகளும் பலியாகி உள்ளன. இந்த தாக்குதல்களை ISIS-K என்ற ஆப்கானிஸ்தான் ISIS குழுவே செய்ததாக கூறப்படுகிறது. தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அங்கு ISIS குழுவும் பரவ ஆரம்பித்து உள்ளது. தலிபானும், ISIS குழுவும் பரம எதிரிகள். அத்துடன் 15 அமெரிக்க படையினரும், 140 பொதுமக்களும் காயமடைந்தும் உள்ளனர். மேற்படி தாக்குதல்களில் ஒன்று காபூல் விமான நிலையத்தின் Abbey […]

தாய்லாந்து போலீஸ் அதிபர் கைது, படுகொலை காரணம்

தாய்லாந்து போலீஸ் அதிபர் கைது, படுகொலை காரணம்

தலைமறைவாகி இருந்த தாய்லாந்தின் போலீஸ் அதிபர் Thitisan Utthanaphon, வயது 39, தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். Jo Ferrari என்றும் அழைக்கப்படும் இவர் போதை விற்பனையாளர் என்று சந்தேகிக்கப்படும் கைதி ஒருவரை கொடுமைப்படுத்தி கொலை செய்தது CCTV வீடியோ மூலம் பதிவாகி பகிரங்கத்துக்கு வந்ததே இவர் ஓடி ஒளிந்தமைக்கு காரணம். Jeerapong Thanapat என்ற 24 வயது கைதியிடம் $60,000 பணம் தருமாறும், அவ்வாறு தந்தால் வழக்கை கைவிடுவதாகவும் Thitisan கூறி உள்ளார். கைதி இணங்க […]

CIA, தலிபான் இரகசிய சந்திப்பு

CIA, தலிபான் இரகசிய சந்திப்பு

அமெரிக்க CIA உளவுப்படையின் செயலாளர் William Burns என்பவரும், தலிபானின் தலைவர் Abdul Ghani Baradar என்பவரும் நேற்று திங்கள் காபூல் நகரில் இரகசியமாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பேசிக்கொண்ட விசயங்கள் இதுவரை பகிரங்கத்துக்கு வரவில்லை. ஆனாலும் இரு தரப்பும் சந்திப்பை மறுத்துள்ளன. மேற்படி சந்திப்புக்கு கட்டாரே உதவியதாக கூறப்படுகிறது. கட்டார் (Qatar) தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் வளர்ச்சியில் பங்குகொள்ளும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் என்று எதிர்த்து போராடிய குழுவுடன் CIA தற்போது நேரடியாக […]

தலிபானை கட்டுப்படுத்த Northern Alliance?

தலிபானை கட்டுப்படுத்த Northern Alliance?

மதங்களை நிராகரித்த சோவியத் 1979ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுள் நுழைந்த பின் அதை எதிர்த்து முதலில் போராட ஆரம்பித்தவர் Ahmad Shah Massoud. அந்த யுத்தம் 1989ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இவர் தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள Panjshir Valley என்ற Hindu Kush மலைப்பகுதியை சார்ந்த Tajik இனத்தவர். சோவியத் வெளியேறிய பின் இவர் ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்தார். இவர் இஸ்லாமிய அரசை அமைக்க விரும்பினாலும், தலிபானின் கடும்போக்கு இஸ்லாமிய அரசை மறுத்திருந்தார். அதனால் […]

அமெரிக்க திடீர் வெள்ளத்துக்கு 21 பேர் பலி, 20 பேர் தொலைவு

அமெரிக்காவின் ரேனசீ (Tennessee) மாநிலத்தில் உள்ள Humphreys பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு குறைந்தது 21 பலியாகியும், 20 பேர் தொலைந்தும் உள்ளனர். வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற பகுதிகள் சனத்தொகை குறைந்த பகுதிகள் என்றாலும், வெள்ளத்தின் வேகம் காரணமாக அழிவுகள் அதிகமாக உள்ளன. தொலைபேசி கட்டுமானங்களும் பாதிப்பு அடைந்ததால் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. McEwen என்ற இடம் சனிக்கிழமை 24 மணி நேரத்துள் 17 அங்குல (43 cm) மழை வீழ்ச்சியை பெற்றுள்ளது. இது பதிவு […]

Raap: தலிபானை கட்டுப்படுத்த ரஷ்ய, சீன உதவி தேவை

Raap: தலிபானை கட்டுப்படுத்த ரஷ்ய, சீன உதவி தேவை

ஆப்கானிஸ்தானின் தலிபானை கட்டுப்படுத்த ரஷ்யாவினதும், சீனாவினதும் ஆதரவு தேவை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் (Foreign Secretary) Dominic Raab கூறியுள்ளார். மேற்கு நாடுகள் தற்காலங்களில் சீனாவுடன் முரண்பட்டாலும், சீனாவின் உதவியை நாடுவதை தவிர்க்க முடியாது என்றுள்ளார் Dominic Raap. ஆப்கான் அரச படைகளின் தரம், தலிபானின் தரம் ஆகியவற்றின் அமெரிக்காவின் கணிப்புகள் தவறியதால் அமெரிக்கா ஆப்கான் அரசுக்கு வழங்கிய பல தரமான ஆயுதங்கள், விமானங்கள் எல்லாம் இன்று தலிபான் கைகளை அடைந்துள்ளன. அதில் மூன்று C-130 […]

Canary அருகே அகதிகள் வள்ளம் கவிழ்ந்து 52 பேர் பலி

Canary அருகே அகதிகள் வள்ளம் கவிழ்ந்து 52 பேர் பலி

ஆபிரிக்காவில் இருந்து 53 அகதிகளை ஏற்றி சென்ற சிறு வள்ளம் (dinghy) ஒன்று கவிழ்ந்ததால் 52 பேர் பலியாகி உள்ளனர். முப்பது வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே தப்பி உள்ளார். இந்த விபத்து ஸ்பானிஸ் நாட்டுக்கு உரிய Canary Island என்ற தீவில் இருந்து 220 km தூரத்து கடலில் நிகழ்ந்துள்ளது. அவ்வழியே சென்ற வர்த்தக கப்பல் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்பெயின் படைகள் தேடுதல் செய்துள்ளனர். அப்படையினரே உயிருடன் இருந்த 30 வயது பெண்ணை […]

விரைவில் பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு

விரைவில் பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு

உலக அளவில் விரைவில் கார் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு வரவுள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகள் வாகனங்களுள் computer chip உள்ளடக்கப்பட்டு வந்தமையே காரணம். வாகனங்களின் மிகையான chip பயன்பாடு காரணமாகவும், கரோனா ஆசிய chip தயாரிப்பு தொழிற்சாலைகளை முடக்கியது காரணமாகவும் தற்போது computer chip களுக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. உலகின் மிக பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான Toyota தனது உலக அளவிலான உற்பத்தியை 40% ஆல் குறைக்க உள்ளது. பயணிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் […]

ஆப்கான் படைகளின் வீழ்ச்சியை அமெரிக்கா எதிர்பார்த்திருக்கவில்லை

ஆப்கான் படைகளின் வீழ்ச்சியை அமெரிக்கா எதிர்பார்த்திருக்கவில்லை

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ஆயுதம், அறிவு, பயிற்சி வழங்கி வளர்த்த ஆப்கானிஸ்தான் அரச படைகள் இவ்வளவு விரைவாக தோற்றுப்போகும் என்று தாம் நம்பியிருக்கவில்லை என்று அமெரிக்க படைகளின் தலைவர் Mark Milley இன்று புதன் கூறியுள்ளார். Joint Chiefs Chairman General Mark Milley தனது உரை ஒன்றில் “There was nothing that I or anyone else saw that indicated a collapse of this army in this government […]